தொகுப்பு

Archive for பிப்ரவரி, 2010

தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 5)


“இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்
அவையில் காலம் இன்மை யான”
என்று பாடுகிறது தொல்காப்பியம். அதாவது, காதலை உயிராகக் கொண்ட அகமும், அகத்தின் தொடர்பில் புறமும் இல்லாத காலமோ அல்லது இடமோ எங்கேயும் கிடையாது என்பதே அதன் பொருள். இதனால்தான் நம் முன்னோர்கள் வாழ்வியலை அகம் – புறம் என இரண்டாகக் கண்டனர்.

இதனை நன்கு ஆராய்ந்தால், உலக வாழ்க்கைக்குக் காதலே அடிப்படையாக இருக்கிறது என அறியலாம். மாந்த வாழ்வில் காதலுணர்வு மிகவும் நுட்பமும் ஆழமும் நிறைந்தது. வாழ்க்கையிலும் சரி, இலக்கியத்திலும் சரி காதலுணர்வை (நவின மொழியில் பாலுணர்வை) மிகவும் பொறுப்போடு கையாளவேண்டும். கொஞ்சமே வழுவினாலும் சமூகத்தில் பேரிழப்பு ஏற்படலாம்.

பாலுணர்வின் இயக்கத்திற்கு உடலே கருவியாக இருக்கிறது. உணர்வுகளை உடலுக்கும் உறுப்புகளுக்கும் அடிமையாக்கிவிட்டால் நுட்பம் நிறைந்த உணர்வுகள் மதிப்பிழந்து போகும். கூடவே, உடலும் உறுப்புகளும் கெட்டுப்போகும்.


இந்த உண்மையை ஆழ்ந்து உணர்ந்ததன் விளைவாகத்தான், சங்க இலக்கியங்கள் பாலியலை மிக நேர்த்தியோடும் – நயத்தோடும் கையாண்டுள்ளன. இந்த அடிப்படை உண்மையை அறியாமல்போனதன் காரணத்தால் பிற்கால இலக்கியங்கள் எல்லாமே செல்வாக்கில்லாமல் போயின என்பது வரலாறு. (இதனை விளக்கினால் நீண்டுபோகும்)

உடல் – உறுப்பு இவற்றைவிட, உணர்வுகளுக்கு முதன்மை கொடுப்பதால் உடலும் உறுப்பும் மறைந்து உணர்வுகளே உடலமாக உருவெடுத்து நிற்கும் என்பது நமது முன்னோர்கள் மரபிவழி கண்டது. இதனையே, சங்க இலக்கியம் முழுவதிலும் காணமுடிகிறது.

இதனை உணர்ந்திருந்த பாரதியார், “செவ்விது,செவ்விது, செவ்விது காதல்” என்றார். இந்தக் காதலால் என்னவாகும் தெரியுமா?

“காதலினால் உயிர் தோன்றும்; – இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவெய்தும் – இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்” என்றும்,

காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலைதீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்
கானம் உண்டாம்; சிற்பம்முதல் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” என்றும் மனிதர்களுக்கு வேண்டுகை விடுக்கிறார் மாபாவலன் பாரதி.

இப்படி பாரதி பாடியதை, அன்றே முன்னுணர்ந்து நமது சங்கப் புலவர்கள் பாடியிருப்பது நம்மை வியக்கச் செய்கிறது. உள்ளங்களால் ஏற்படும் ஆழமான உறவை சங்கப்புலவர்கள் உள்ளப் புணர்ச்சி என்றனர். உள்ளப்புணர்ச்சி நன்றாக அமைந்தால்தான் உடல் புணர்ச்சியும் (உடலுறவு) முழு இன்பத்தைக் கொடுக்கும் என்ற தெளிவான எண்ணக்கருவைச் சங்கப்பாடல்கள் வலியுறுத்துகின்றன.

இப்படியாக, சங்கப் புலவர்கள் உள்ளத்து உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்தார்களே அன்றி, வெறுமனே பெண்களின் உடல் வருணனையோ அல்லது பாலுறுப்பு வருணனையோ மட்டும் அல்ல. மேலும், இவ்வுணர்வுகளைச் சொல்லுவதற்கு இயற்கையியல் – இன்பியல் (Naturalism & Romanticism) ஆகிய இரண்டுப் பண்புகளைப் பாங்காகப் பயன்படுத்தியுள்ளனர். சங்கப் புலவர்கள் உயர்ந்ததையே எண்ணி, உயர்ந்த நெறிகளையே பின்பற்றி வாழ்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய பாடல்களும் மிக உயர்தரத்திலேயே காணப்படுகின்றன.

இதனையே மு.வ தமது குறுந்தொகைச் செல்வம் நூலில் இப்படிக் கூறுகிறார். “இந்த ஓவியங்கள்(சங்கப் பாடல்கள்) காதலரின் மனநிலையை விளக்குவன என்பது சிறப்பாகக் கருதத்தக்கதாகும். இவற்றைத் தீட்டிய கலைஞர்கள், காதலரின் உடல் வனப்பை எடுத்துக் காட்டுவதற்காகத் தம் வண்ணத்தைப் பெரிதும் செலவிடவில்லை; முயற்சியையும் செலவிடவில்லை. ஓவிய அமைப்பிற்கு எந்த அளவுக்கு அவர்களின் தோற்றம் இன்றியமையாததோ, அந்த அளவிற்கே உடலைக் குறித்துள்ளனர். ஓவியத்தைக் காண்பவரின் உள்ளம், காதலர்களின் உடல்வனப்பால் கவரப்படாதவாறு அவர்களின் கலைமுயற்சி அமைந்துள்ளது”

இந்தக் கண்ணோட்டத்தில்தான், சங்கப் பாடல்களைப் பார்க்க வேண்டுமே தவிர, குருடர்கள் ஒன்றுகூடி யானையின் ஒவ்வொரு பாகத்தைத் தொட்டுப் பார்த்தது போன்று அவரவரும் தப்பும் தவறுமாக உணர்ந்ததை தண்டோரா போட்டுச் சொல்லக்கூடாது.

பெண்ணுடல் இயற்கையாகவே முலை, அல்குல், தாய்வயிறு (கருப்பை) எனத் தனித்த அடையாளங்களைக் கொண்டது. பெண்ணுறுப்புப் பெயர்களைச் சங்கப்பாடல்களில் மட்டுமல்ல திருக்குறள் போன்ற அறநூல்களிலும் காணமுடிகிறது. சங்க காலத்தில் ஔவையார், வெள்ளி வீதியார் உள்ளிட்ட நாற்பத்தொரு பெண்பாற் புலவர்கள் பெண்ணிய நிலை, மனவுணர்வு, காதலுணர்வு பற்றி பாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அன்றைய புலவர்கள் பெண்ணுறுப்புகளைச் சுட்டும்போது அதில் அருவருப்புத் தன்மையுமில்லை; அது பாலுணர்ச்சியைத் தூண்டியதுமில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய சிறப்பான உடலெழில் கூறுகள் அன்றே இலக்கணமாகச் சொல்லப்பட்டுள்ளன.

ஒரு பெண்ணைப் பார்த்து “உமக்கு திண்ணிய தோளும் பரந்த மார்பும் வீரமும் கொடைப்பண்பும் உடைய குலமகன் கணவனாக வாய்ப்பானாக” என வாழ்த்துவது பழந்தமிழர் மரபாகும்.

அதுபோலவே, இல்லறத்தில் வாழும் ஆணைப் பார்த்து, “நீ அறம் அல்லாதவற்றை ஒதுக்கும் கற்புடையவளாகவும், அறம் புகழ்ந்த வலைசூடிய சிறிய நெற்றியும், அகன்ற அல்குலும், குறைந்த பேச்சும், அடர்ந்த கூந்தலும் உடைய குலமகளைத் துணைவியாகக் கொண்டவன்” என்று பாராட்டுவதும் மரபு வழக்கேயாகும்.

*(அல்குல் என்பது பெண்ணின் பாலுறுப்பை மட்டும் குறிப்பதன்று. இடைக்குக் கீழும், கீழ்த்தொடைக்கு மேலுமுள்ள அகன்ற பகுதி முழுவதையும் சுட்டும். அரை என்பதும் இதுவே. இன்றைய வழக்கில் இடுப்பு என்கிறோம். பெண்ணின் தாய்மைக்காக இயற்கை தந்த கருணை கொடை இப்பகுதி)

இன்றைய புத்திலக்கியவாணர்களில் எத்தனை பேர் சங்கப் புலவர்கள் கையாண்ட உத்திகளை – நுட்பங்களை அறிந்து எழுதுகிறார்கள் என்பது ஐயத்திற்குரியதே. நிலைமை இப்படியிருக்க, தங்களின் நவின படைப்புகளில் இடம்பெறும் பாலியல் வழுக்களுக்கு நியாயவாதம் கற்பிக்கும் பொருட்டு சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்பதை உண்மையாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இதுவரை சொல்லியவையிலிருந்து, தொன்ம இலக்கியம் அனைத்தும் தமிழ் மரபியலின் ஒட்டுமொத்தக் கட்டுமானங்கள் என பொருள்படாது. நன்றும் தீதும் எல்லாவிடத்திலும் இருப்பது போலவே தமிழ் இலக்கியத்திலும் பண்பாட்டுக் கேடுகள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றை அறிஞர் உலகம் எடுத்துக்காட்டி கண்டித்தும் இருக்கின்றது என்ற உண்மையை இன்றைய படைப்பாளிகள் அறிந்துகொள்ள வேண்டும்.

 

நல்லதை உவகையுடன் ஏற்கவும் அல்லதைத் துணிவுடன் மறுக்கவும் கூடிய நடுநிலைச் சிந்தனை தமிழறிஞர்களுக்கு நிரம்பவே உண்டு. அதற்கு சான்றுதான், அறிஞர் அண்ணாவின் ‘கம்பரசம்’ போன்ற நூல்கள்.

ஆகவே, இன்றைய நவின படைப்பாளிகள் பாலியல் தொடர்பான தங்களின் கொச்சைத் தனத்திற்கும் – பச்சைத் தனத்திற்கும் நியாயம் கற்பிக்க வேண்டி, சங்க இலக்கியங்களைத் தூற்றித் திரிவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். எந்தவிதத்திலும் தனித்தன்மை(சுயம்) இல்லாமல் தள்ளாடிகொண்டிருக்கும் நவின படைப்புகளுக்கு முட்டுக்கொடுக்கவும் அவற்றிலுள்ள பாலியல் பண்பழிப்புகளை நியாயப்படுத்தவும் வேண்டி சங்க இலக்கியங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் ‘பக்கா’ பத்தாம்பசளித்தனத்தைக் கைவிட வேண்டும்.

 

அகத்திணைப் பாடல்களோடு தங்களின் கீழ்த்தரமான படைப்புகளை ஒப்பிடுவது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, சொந்த முகத்திலே கரிபூசிக் கொள்ளுவதுமாகும்.

 

இவைவெல்லாம் நவின படைப்பாளிகளுக்கு நாம் கூறுகின்ற அறிவுரைகள் அன்று. மாறாக, நவின படைப்பாளிகள் மரபியலைப் புரிந்துகொள்வதற்கு நாம் எழுதும் முன்னுரைகள் மட்டுமே.

 

முன்னுரைகளைப் படிப்பதும் படிக்காததும் அவரவரின் தனியுரிமை. ஆனால், தமிழ் மரபியலை மதிப்பதும் மனதாரப் போற்றுவதும் ஒரு தமிழனுக்கும் ஒரு தமிழச்சிக்கும் பிறந்த தமிழர்க்குப் பிறப்புரிமை!

(முற்றும்)

சான்றாதாரம்:-

1.சங்க இலக்கிய ஒப்பீடு (முனைவர் தமிழண்ணல்)

2.சங்க இலக்கியம் (முனைவர் இரா.தண்டாயுதம்)

3.குறுந்தொகைச் செல்வம் (முனைவர் மு.வரதராசன்)

4.உங்கள் குரல் – சூன் 2004 (கவிஞர் சீனி நைனா முகம்மது)

தொடர்பான இடுகைகள்:-

1. தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 1)

2.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 2)

3.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 3)

4.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 4)

5. புத்திலக்கியவாணர்களுக்குத் தமிழும் தெரியாது தமிழுணர்வும் கிடையாது

பிரிவுகள்:Uncategorized

தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 4)

‘பாலியல்’ என்றாலே பதகளத்துடன் அணுகும் மலேசிய நவினப் படைப்பாளிகளுக்கு இந்தத் தொடர் பயனாக அமையலாம். பண்பட்ட மனத்தோடு பாலியலை அணுகுவதற்குரிய பண்பாட்டை அறிந்துகொள்ள இது உதவலாம்.
 
 

கடந்த பதிவு (பாகம் 3) பின்நவினம் பற்றிய ஒரு முழுமையான புரிதலை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. பின்நவினத்தை மேலோட்டமாகத் தெரிந்துகொள்ளுவதற்கு அல்லது இனி அதனைப் பற்றி ஆராய்ந்தறிவதற்கு உங்களை நகர்த்தியிருக்கலாம் என்று வேண்டுமானால் துணிந்து சொல்லுவேன்.

இதற்குக் காரணம், பின்நவினம் இன்னமும் முழுத் தெளிவோடு வெளிப்படுத்தப்படவில்லை என்பதுதான். இருந்தபோதிலும், பின்நவினம் மகா கேடானது; அடிப்படையே இல்லாதது என குருட்டாம்போக்காக முற்றும் முழுவதுமாக ஒதுக்கவேண்டியதும் அல்ல.

இரண்டுமுறை போர்களைச் சந்தித்துவிட்ட உலகம், கடவுள் உண்மை, மெய்ம்மம்(தத்துவம்), நேர்மை, மாந்தநேயம் ஆகிய அனைத்து நெறிகளின்மீது நம்பிக்கை இழந்துநிற்கிறது. நவினமயச் சூழலில், ‘எதிர்மறை பண்பாடு’ (Counter Culture) ஏற்படுத்திவரும் பல்வேறு தாகுறவுகளில் சிக்கிக்கொண்டு சின்னபின்னமாகிப் போயிருக்கும் இன்றைய உலகத்திற்குப் பின்நவினம் சில தீர்வுகளைகளை முன்மொழிகிறது. நவினச் சூழலுக்கு ஏற்ற புதியவகை ‘உணர்வுவாங்கலை’ (New Sensibility) கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.

தமிழ்ச்சூழலில் ‘பின்நவினம்’ சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகத் தெரியவிலை. மலேசியாவில், தமிழ்ப் படைப்பாளிகள் ‘பின்நவினம்’ என்பதை பிறழ்நிலையாகவே உணர்ந்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. ‘பின்நவினம்’ என்ற தளத்தில் எழுதப்படும் படைப்புகள் பெரும்பாலும் ‘பாலியல்’ சார்ந்ததாகவே அமைந்திருப்பது இதற்கான காரணமாக இருக்கலாம். அதோடு, பின்நவினப் படைப்பாளிகள் இன்னும் முதிர்ச்சி இல்லாதவர்களாகவும் இலக்கியத்தில் பரந்த நோக்கு இல்லாதவர்களாகவும் இருப்பதுமாகும்.

பின்நவினப் படைப்புகள் எழுதுவதற்கு எத்தனையோ கருக்களும் களங்களும் இருக்கும்போது, இவர்களின் எழுதுகோள் பாலியல் – பாலுறுப்புகளை மட்டுமே செக்குமாடு போல வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

இதனைச் சுட்டிக்காட்டினால், எம்பிக்குதித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே தவிர, அமைதியாக அணுகி ஆராய்ந்துபார்க்க மறுக்கிறார்கள். தமிழ் மரபு – பண்பாடு சார்ந்து பின்நவினம் அணுகப்பட வேண்டும் என்ற கூக்குரல்களில் இருக்கும் அடிப்படைகளை எண்ணிப்பாராமல், மரபிலக்கியங்களில் நயமாக – நாகரிகமாக சொல்லப்பட்ட ‘பாலியல்’ புனைவுகளைக் கொச்சைப்படுத்தி தங்கள் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள்.

சங்க இலக்கியப் பாக்களில் இழையோடும் காமம், காதல், களவு, கற்பு முதலான அகத்தினைப் புனைவுகள் அனைத்தும் மிக கவனமாகச் செய்யப்பட்டவை – மாந்தப் பண்பாட்டுக்கு உட்பட்டவை என்பதை முதலில் இவர்கள் புரிந்துகொள்வது நலமானது. இது, புரியாத காரணத்தால்தான், மரபுகளில் ‘பாலியல்’ இருப்பதால் நாங்களும் படைக்கிறோம் என்று கொச்சையாக – பச்சையாக எழுதுகின்றனர்.

தமிழ்ச் சூழலில் பாலியல் சார்ந்த படைப்புகள் எவ்வாறு சொல்லப்பட வேண்டும் என்று எழுத்தாளர் செயமோகன் தம்முடைய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு விவரிக்கிறார். எந்தவொரு மாற்றமும் செய்யாமல் அதனை அப்படியே இங்குத் தருகின்றேன்.

பாலுணர்வுக்கதை என்பது தன் மையக்கருவாகவே பாலுணர்வை எடுத்துக் கொண்டிருக்கும். அதைபற்றி கூர்ந்த அவதானிப்புடன் விவாதிக்கும். அதை நுண்ணிய விவரிப்புடன் சித்தரித்துக் காட்டும். அதன் மனநிலைகளை பல தளங்களில் விரித்துச் செல்லும்.

பாலுணர்வெழுத்திற்கும் பாலியல்கவர்ச்சி எழுத்துக்கும் என்ன வேறுபாடு? வெறுமனே சற்று நேரம் நமக்கு ஒரு மனச்சித்திரத்தின் இன்பத்தை மட்டுமே அளித்து நின்றுவிடுவது பாலியல்கவர்ச்சி எழுத்து. இலக்கியம் எந்த வகையானாலும் அது நம்மை நாமே அறியச்செய்யும். கூர்ந்து நோக்க வைக்கும். நமக்குள் நம்மைக் கொண்டுசெல்லும். அதுவே முக்கியமான வேறுபாடு.

என் நோக்கில், நல்ல பாலுணர்வெழுத்து என்பது சில இயல்புகள் கொண்டது. அது எந்நிலையிலும் அழகாகவே இருக்கும். பகற்கனவுகளுக்கு மட்டுமே உரிய மென்மையான அழகு அது. தொட்டால் பொலபொலவென உதிர்ந்துவிடக் கூடிய, பிறரிடம் பகிர முடியாத அழகு. நல்ல பாலுணர்வெழுத்து குறைவாகவே சொல்லி வாசகனின் கற்பனையைத் தூண்டும். அவனுடைய அந்தரங்கமான கனவுகளில் மட்டுமே அது முழுமையடையும்.

மனத்திரிபு நிலைகளை எழுதுவது பாலுணர்வெழுத்து அல்ல. அதை வேறு வகைமையில்தான் சேர்க்க வேண்டும். மனதை சிதைப்பதும் வதைப்பதும் பாலுணர்வெழுத்தின் இயல்பல்ல. பாலுணர்வெழுத்து இனிய மனக்கிளர்ச்சி ஒன்றை மட்டுமே அளிக்கும். அதன் உச்சியில் ஒரு வகை தனிமையின் துயரையும், இழப்பின் ஏக்கத்தையும் சொல்லி முடியக்கூடும். எப்போதும் அது மூளைக்குள் பரவும் இனிய தென்றலாகவும் கற்பனையில் விரியும் இளவெயிலாகவுமே இருக்கும்.

எங்கெல்லாம் இலக்கியம் இருக்கிறதோ அங்கெல்லாம் பாலுணர்விலக்கியமும் உண்டு. பழங்குடிப் பாடல்கள் முதல் பேரிலக்கியப் பரப்பு வரை. வேதங்களில், பைபிளில்.. இந்திய காவிய மரபின் இரு உச்சங்களான கம்பனையும் காளிதாசனையும் பாலுணர்வெழுத்தின் இரு சிகரங்களாகவே சொல்ல வேண்டும்.

ஏனென்றால் மனிதர்களுக்கு பாலுணர்வெழுத்து மிகவும் தேவையாகிறது. அது ஓர் அடிபப்டையான இச்சை. இச்சைகள் அனைத்துமெ ருசிகள். ருசிகளே அழகுகளாக ஆகின்றன. மனிதன் தன் கற்பனையை பாலுறவுசார்ந்து முடிவிலாது விரித்துக் கொண்டாகவேண்டியிருக்கிறது. அது அவன் வாழ்வின் மீது கொள்ளும் ஆசையின் ஒரு வெளிப்பாடேயாகும். நம் கலைகளில் பாலுணர்வென்பது வாழ்வாசையின் மன எழுச்சியாகவே எப்போதும் வெளிப்பாடு கொள்கிறது.

கற்பனையில் இருந்து எப்படி காமத்தை விலக்க முடியும்? நல்ல பாலுணர்வெழுத்தும் ஓயாத படிமவெளியை உருவாக்கக் கூடியது. சுவர்களை மறையச் செய்யக்கூடியது. நம்மை கட்டற்ற பசுமை வெளியில் நிறுத்தக் கூடியது. அத்தகைய எழுத்துக்கள் தமிழில் இனிவரும் காலத்தில் உருவாகுமென எண்ணுகிறேன்.

தங்களுடைய படைப்புகளில் ‘பாலியல்’ தொடர்பான கருவை எடுத்துக்கொள்ளும் படைப்பாளிகள் மேற்கண்ட கருத்துகளை ஆழமாகப் புரிந்துகொண்டால், நவின இலக்கியங்களையும் நல்ல – நயமான – நாகரிகமான இலக்கியங்களாகப் படைக்க முடியுமல்லவா?

அடுத்த தொடரில், தமிழ் மரபிலக்கியம் காமம் – காதல் அதாவது நவின மொழியில் சொல்லவேண்டுமானால் ‘பாலியல்’ எண்ணக்கருவை எவ்வாறு அணுகுகிறது என்பதைப் பார்ப்போம்.

(மரபியல் மீண்டும் மலரும்..)

தொடர்பான இடுகைகள்:-

1. தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 1)
2.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 2)

3.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 3)
4. புத்திலக்கியவாணர்களுக்குத் தமிழும் தெரியாது தமிழுணர்வும் கிடையாது

பிரிவுகள்:Uncategorized

தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 3)

மரபு வழியிலிருந்து இன்று உலகம் பின்நவினம்(Post-Modernism) வரையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. தொழிற்புரட்சியைத் தொடர்ந்து உண்டாகிய நவினக் காலத்தில் மரபு, பண்பாடு, ஒழுக்கம், நெறி, குடும்ப உறவு, பாலுணர்வு ஆகியவற்றில் மேலை நாட்டினர் பெரும் சிதைவுகளுக்கும் போராட்டங்களுக்கும் உள்ளாகினர். அதனையடுத்து, எழும்பியதுதான் பின்நவினம். இது இன்று எல்லாத் துறைகளையும் தழுவிக்கொண்டிருக்கிறது; விழுங்கிக்கொண்டிருக்கிறது.


மாந்த நாகரிகக் காலத்தைக் கற்காலம், செப்புக்காலம், இரும்புக்காலம், நவினக் காலம் என பிரிப்பது வழக்கம். இந்த வரிசையில் அனைத்திற்கும் இறுதியானதாக உருவாகியிருக்கும் காலத்தைக் குறிக்கவே ‘பின்நவினம்’ என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. மேற்கிற்கே உரிய பண்பட்டுப் பின்னணியில் தோன்றியதாக இருந்தபோதிலும் அது என்னவோ உலகம் முழுமைக்கும் உரிய புதிய எண்ணக்கருபோல காத்திரமாக(seriously) முன்னெடுக்கப்படுகிறது.

பின்நவினத்தைப் புரிந்துகொள்வதற்கு ‘காலம்’ என்பது முதலில் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது. ‘பின்நவினக் காலம்’ என்பது மின்னல்வேகத்தில் மாறிவரும் மேற்கத்திய நாடுகளின் காலத்தைக் குறிக்கிறது. மேலை நாடுகளின் இடத்தை – காலத்தை எட்டிப்பிடிக்க கிழக்கத்திய நாடுகளுக்கு இன்னும் காலம் தேவைப்படலாம். அதில், தமிழ் மக்களுக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது சிந்தனைக்குரியது.

இப்படிப்பட்ட சூழலில், மேற்கு நாடுகளில் பல்துறைகளிலும் ஊடுறுவி வியாபித்திருக்கும் ‘பின்நவின’ எண்ணக்கருவைக் கொண்டுவந்து நம்முடைய தலைக்குள் கொட்டுவது சரியல்ல என்று சொல்வதா இல்லை இப்போதைக்கு சாத்தியமல்ல என்று சொல்லுவதா?

இத்தனைக்கும், பின்நவினத்தின் வரையரைகள் பற்றி முடிவான கட்டுமங்கள் (Construct) இன்றுவரையில் மேற்குச் சமுகத்தாரிடம் ஏற்பட்டிருக்கவில்லை. பின்நவினம் மீது திறனாய்வு மேற்கொண்ட இகாப் அசான் (Ihab Hassan), அஃது இன்னமும் ஆய்வுக்குரிய ஒரு விடயமாகவே இருக்கிறது எனக் கூறுகின்றார்.

பின்நவினம் பற்றி இதுவரையில் வெளிவந்துள்ள ஆய்வுகளிலிருந்து அறியப்பட்ட உண்மை என்னவெனில், பின்நவினம் என்பது ஒழுங்குசெய்யப்பட்ட – ஒருமைப்பட்ட – ஒரு முழுமையான – செறிவான கோட்பாடு அல்லது கட்டுமம் அல்ல.

இந்தப் பின்நவினம் பின்வரும் இயல்புகளைக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

1. முழுமைப்படுத்தலுக்கும் ஒருமைப்படுத்தலுக்கும் எதிரானது. ஒவ்வொரு பகுதிகளையும் தொடர்புகளற்ற தனி அமைப்பாகக் காட்டுவது.

2. பெரும் தொகுதியான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளை – நெறிகளை – மரபுகளை மறுத்துரைப்பது.

3. ஒற்றைத் தன்மைக்கு எதிராக பன்முக அமைப்பைக் கொண்டிருப்பது.

4. மக்களின் மதிப்பைப் பெற்ற பெருநெறி, பெருங்கதையாடல்கள் (Meta Narratives) முதலானவற்றை மறுத்து சிறுங்கதையாடல்களை வரவேற்பது.

5. தன்னிலை(சுய) முரண்பாடுகளைக் கொண்டிருப்பது.

6. எதற்கும் உரிய பொதுவான தீர்வு என்று தனியாக எதுவுமில்லை என்கிறது.

7. அறிவியலே மேலான அறிவு என்ற வாதத்தைத் தகர்த்தெரிவது

8. எதனையும் மாற்றுவதோ அல்லது தீர்ப்பதோ அல்ல. மாறாக அனைத்தையும் மறுத்துரைப்பது.

9. வரலாற்று நிகழ்வுகளைத் திரும்பிப்பார்த்து புதிய பயணங்களை மேற்கொள்ளத் தூண்டுவது.

10. முதலாளியத்தின் (Capitalism) அடக்குமுறைக்குப் பின்னெழுந்த பின்முதலாளியம், பயனீட்டாளரியல் (Consumerism) ஆகியவற்றின் பின்னனியில் வருவது.

இப்படியாகப் பின்நவினம் பற்றிய பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. இதில் சிக்கல் என்னவெனில், நேரடிப் பட்டறிவுகள் எதுவும் இல்லாதச் சூழலில் அவற்றைப் புரிந்துகொள்வதில் கிழக்கத்திய மரபுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு சங்கடங்கள் நிறைய இருக்கின்றன. புரிந்துகொள்வதே சிரமாக இருக்கின்ற நிலையில் அவற்றை ஏற்றுக்கொள்வதென்பதைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

ஆளானப்பட்ட மேலைநாட்டு அறிஞர்களே திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் ‘பின்நவினம்’ பற்றி இங்கே இருக்கும் சிலர் கரைத்துக்குடித்துவிட்டது போல எழுதுவதும் பேசுவதும் கேள்விக்குரியதாகும். மாறாக, பொதுவுடைமை, நவினமயம், பின்நவினமயம் ஆகிய வாழ்க்கைச் சூழலில் ஒன்றன்பின் ஒன்றாக உழன்று – அழுந்தி – சிதைந்து – சீரழிந்து பின்னர் வாழ்வைத் தேடி அலையும் மேலையர்களுக்கு வேண்டுமானால் பின்நவினம் ஓரளவுக்குப் புரிதலுக்கு உரிய ஒன்றாக இருக்கலாம்; அவர்களின் வாழ்க்கைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கலாம்.

இருந்த போதிலும், பின்நவினத்தைப் பற்றி கருத்துகளை முன்வைத்த லெவின்(Harry Levin), பின்நவினமானது அடிப்படையில் அறிவாண்மைக்கு எதிரானது (Anti intellectual) என்று கூறியுள்ளார்.

இறுதியாக, தமிழ் விக்கிப்பீடியா பின்நவினம் பற்றி என்ன சொல்கிறது என்று பாருங்கள்:-

பின்னை நவீனத்துவம் (பின்நவீனத்துவம்) என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு சமீபத்திய மனோபாவமாகும்.
கலை இலக்கியம் எனும் எல்லைப்பாடுகளைக் கடந்து தற்போது அது தத்துவம், அரசியல், வாழ்க்கைமுறை, தொழிநுட்பம், கட்டடக்கலை, நாடகம், சினிமா போன்ற களங்களை நோக்கியும் விரிந்து வருகிறது. பின்னை நவீன யுகம் எனும் வரலாற்றுக் காலகட்டத்தை அது குறிப்பதாக பின்னை நவீன வாதிகள் கருதுகின்றனர். பின் அமைப்பியல் சிந்தனையாளர்களான மிஷேல் ஃபூக்கோ, லக்கான், தெரிதா போன்றோர், அவர்களைத் தொடந்து லியத்தார்ட், பௌதலியார்ட், டெலூஸ் ஆகியோர், இன்னும் சமீபத்தில் அறிமுகமாகிவரும் புதிய தத்துவவியலாளர்கள் போன்றோர் பின்னை நவீனத் தத்துவத்தின் தத்துவவியலாளர்களாகக் கருதப்படுகின்றனர்.
பின்னவீனத்துவம் என்பது நவீனத்துவத்துவத்துக்கான ஒரு மறுவினையாகும்.
இப்போக்கானது இரண்டாம் உலகப்போரின் பின்னான நம்பிக்கைச்சிதைவுகளின் செல்வாக்கால் எழுந்தது எனக் கூறப்படுகிறது.
ஒழுங்குபடுத்தும் கோட்பாடோ, ஒரு தெளிவான மையப் படிநிலையோ அற்ற கலாசார, புலமைத்துவ, கலைத்துவ நிலையாக பின்னவீனத்துவம் குறிப்பிடப்படுகிறது.
இது, தீவிர சிக்கற்றன்மை, முரண்பாடு, குழப்பநிலை, பல்வகைமை, தம்மிடைத் தொடர்புடைமை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.
சான்றாதாரம்:-

1.கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் (பேரா.முனைவர் சபா.செயராசா)
2. உயிர்நிழல்-பிரான்சு), செப்தெம்பர்-அத்தோபர், 1999 (கொ.றொ.கொன்சுரன்ரைன்)
3.உளவியல் முகங்கள் (பேரா.முனைவர் சபா.செயராசா)
4.தமிழ் விக்கிபீடியா

(மரபியல் தொடர்ந்து மலரும்)

தொடர்பான இடுகைகள்:-
1. தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 1)

2.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 2)

3. புத்திலக்கியவாணர்களுக்குத் தமிழும் தெரியாது தமிழுணர்வும் கிடையாது

பிரிவுகள்:Uncategorized

தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 2)

சங்க இலக்கியம், சங்கம் மருவிய இலக்கியம், பத்தி இலக்கியம், உரைநடை இலக்கியம் என்று காலந்தோறும் தமிழ் இலக்கியம் மாற்றங்கண்டு வந்துள்ளது. இன்றைய நிலையில் நவினம் (Modernism) என்பதையும் கடந்து பின்நவினம் (Post-Modernism) என்பது மிகப் பரவலாகப் பேசப்படுகிறது.
“தன் மொழி – தன் இனம் – தன் பண்பாடு – தன் வரலாறு – தன் முன்னோர் – தன் இலக்கியம் – தன் மெய்யியல் முதலான அனைத்திலும் பற்றுதலும் நம்பிக்கையும் இன்றையத் தமிழர்களுக்கு இல்லை. இந்தக் கீழ்த்தரமான மனச்சிதைவின் பயனாகப் பிறருடைய – அன்னியருடைய – ஏன் பகைவனுக்குச் சொந்தமானதை எல்லாம் கொண்டுவந்து தமிழுக்குள் புகுத்தியும் திணித்தும் தெரிந்தோ தெரியாமலோ தமிழ்ப் பண்பாட்டையும் குமுகாயத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

“மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்” என்ற தொல்காப்பியரின் எச்சரிக்கையை இவர்கள் நினைவில் கொள்ளுவது நல்லது. பன்முகத் தன்மைக்கு முதன்மை வழங்கும் ‘பின்நவினம்’ முதலான வடிவங்கள், மரபு நடைமுறைகளில் திரிபுகளையும் பிறழ்வுகளையும் உண்டாக்குவதால் சமுதாயத்தில் கேடுகளே விளையும்.

 

இது எப்படி என்கிறீர்களா?

பொதுவாகவே, தமிழர்கள் மட்டுமல்லாது கிழக்கத்திய மக்களிடம் ‘பாலுணர்வு’ தொடர்பாக வெளிப்படையான போக்குகளைக் காணமுடியாது. இதனைக் கிழக்கத்திய மக்களின் உளக்குறைபாடாகவும் ‘காமத்தை எதிர்கொள்ள வலிமையில்லை’ என்றும் பறைசாற்றுவது குற்றமாகும். காரணம், இவர்கள் வெளிப்படையான ‘பாலுணர்வு’ கருத்தாடல்களுக்கும் அணுகுமுறைகளுக்கும் இன்னமும் அணியமாகி (தயாராகி) இருக்கவில்லை என்பதுதான் நடப்பியல்(நிதர்சனம்).
நிலைமை இப்படியிருக்க, மனவியல் நிலையில் இன்னும் அணியமாகாத மக்களிடம் – பாலியல் கல்வியறிவு பெறாத மக்களிடம் – பாலுணர்ச்சி பற்றிய புரிதம்(பிரக்ஞை) அறவே இல்லாத மக்களிடம் ‘பின்நவினம்’, ‘பாலியல்’ என கொண்டுவந்து மண்டைக்குள் திணிப்பதும் புலன்களுக்குள் பூட்டுவதும் சரியான அணுமுறைதானா என்பது சிந்திக்கத்தக்கது.
இவ்வாறு திணித்தல் முயற்சியானது மக்களுக்கு அலற்சியை – ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது மிகமிக எளிமையான அறிவியல் உண்மைதானே. இப்படிப்பட்ட ஒவ்வாமைக்கு உள்ளாகும் மக்கள்நலம் பாழ்படும்.. இயல்பாக இவர்களுக்கே உரிய மரபை வலுக்கட்டாயமாக முறித்துப்போடுவதால் மனநலம் முடமாகும் என்பதை ‘பின்நவினக்கூட்டம்’ ஒத்துக்கொள்ள மறுப்பதேன்? உண்மைநிலவரத்தை மறைப்பதேன்?
இந்த நிலமைகளை முன்னுணர்ந்து “மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்” என்று சொன்ன நமது தொல்காப்பியத் தாத்தா நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார் அல்லவா?
இந்தத் தமிழ் மரபியல் அடிப்படையில்தான் நாம் ஒவ்வொரு அன்னிய ஊடுருவல்களைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் பார்வையில் அறியியல் நோக்கு இல்லை! உளவியல் அணுகுமுறை இல்லை! என்று மறுத்துவிடல் முறையாகுமா?

ஆகவேதான், புதியவரவாகிய எதுவானாலும் அவற்றை கண்ணை மூடிக்கொண்டு ஒதுக்கித்தள்ளாமல், ஏற்கனவே நம்மிடம் இருக்கும் மரபுகளோடு ஒத்துப்பார்த்து வேண்டியதை கொள்ளவும் ஆகாததைத் தள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்; அதற்குக் கொஞ்சம் மரபியல் சார்ந்த அறிவும் வேண்டும்.

மேலும், புத்திலக்கியவாணர்கள் தமிழியலை முன்படுத்தி அன்னிய வடிவங்களைக் கையாள வேண்டுமே – சிந்திக்க வேண்டுமே தவிர, அன்னிய வடிவங்களுக்காக ஏற்றமிகு தமிழ் மரபியலை வெட்டிக் குத்திக் குதறிப்போடும் குரோதங்களைக் கொஞ்சம் கைவிட வேண்டும்.
மரபியல் நமக்குச் சொல்வது என்ன?
கலை என்பது என்ன? “அஃது ஓர் உள்ளார்ந்த உணர்வை வெளிப்படுத்துவதிலும் தொடர்புப்படுத்துவதிலும் மனிதத்திறன் வெளிப்பட்டுத் தோன்றும் முறைமையாகும்” என்கிறார் ஓனிக்மன் (Honigmon).
“மனிதன் தன்னைச் சுற்றி நிகழும் நடப்புகளில் உய்த்துணரும் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் தம்முள்ளேயே மீண்டும் மீண்டும் எழச்செய்து அவற்றைத் திட்டவட்டமான வடிவங்களில் வெளியிடும்போது கலை பிறக்கிறது” என்கிறார் உருசிய அறிஞர் பிளாக்கனோவ் (Plekhanov).
இயற்கையின் அழகை ஒழுங்குப்படுத்தி மனிதப் புலன்களை நுண்ணுணர்வுத் திறத்தில் மேம்பட வைப்பதே கலையாகும். மெல்லிய உணர்வுகளின் வெளிப்பாடான அந்தக் கலையானது எழுத்து, இசை, நாடகம் என எதுவாகவும் இருக்கலாம். அந்தவகையில், எழுத்துக்கலைக்குரிய மரபை தொல்காப்பியம் இப்படி கூறுகிறது:-
சிதைவெனப் படுபவை வசையற நாடில்
கூறியது கூறல்; மாறுகொளக் கூறல்;
குன்றக் கூறல்; மிகைபடக் கூறல்;
பொருளில கூறல்; மயங்கக் கூறல்;
கேட்போர்க் கின்னா யாப்பில் ஆதல்;
பழித்த மொழியான் இழுக்கக் கூறல்;
தன்னா னொருபொருள் கருதிக் கூறல்;
என்ன வகையினும் மனங்கோ ளின்மை;
அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும்.
(தொல்.110)
சிதைவுகள்(எழுத்துப் படைப்பில்) என்று கூறப்படுபவை யாவையென்று குறையில்லாமல் ஆராய்ந்து பார்த்தால், 1.சொன்னதைச் சொல்லல், 2.முன் சொன்னதற்கு மாறுபாடாகச் சொல்லுதல், 3.குறைவாகச் சொல்லுதல், 4.மிகுதியாகச் சொல்லுதல், 5.பொருளற்றவைகளைச் சொல்லுதல், 6.மயக்க உணர்வு ஏற்படும்படியாகக் கூறுதல், 7.கேட்பவருக்குத் துன்பம் தரும்படியாக அமைதல், 8.பழிக்கப்பட்ட சொற்களோடு தாழ்வுண்டாகுமாறு கூறுதல், 9.தனக்குத் தானே ஒரு பொருளை எண்ணிகொண்டு கூறுதல், 10.எவ்வகைப் பொருளையும் உறுதியாகப் பற்றாமல் உணர்த்துதல் ஆகிய இவைகளும், இந்தத் தன்மைகளைக் கொண்ட பிறவுமாகும்.
தொல்காப்பியர் கூறும் இந்த அளவுகோள் இன்றும் பொருந்தும் என்பதை நேரிய உள்ளமும் கூரிய அறிவும் கொண்ட எவரும் ஒப்புவர்.
இப்படிப்பட்ட வரையரைகள் அன்னியப் பின்நவினத்தில் இருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். பின்நவினம் என்பதற்கு இன்னும் இலக்கணமே வரையரை செய்ய முடியாமல் தவிக்கிறது மேற்குலகம். “அனைவராலும் மதித்து ஏற்கப்பட்ட ‘புனிதங்களை’ மறுத்துரைப்பது; விதண்டாவாதம் பண்ணுவது” என்றுதான் இன்னமும் போய்க் கொண்டிருக்கிறது.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது, இந்த அளவுகோளைக்கொண்டு சிலர் எழுதித் தள்ளும் படைப்புகளை – நவின இலக்கியங்களை – பின்நவினங்களை அளவெடுத்துப் பார்த்து அவற்றில் இழையோடும் குற்றங்களைக் குத்திக்காட்ட வேண்டாம்; பண்போடு சுட்டிக்காட்டவும் வேண்டாம்.
காரணம், எது சரி.. எது தவறு என்று தீர்மானிப்பது அவரவர் உரிமையாகும்!
(மரபியல் இன்னும் மலரும்..)
 
 
தொடர்பான இடுகைகள்:-
பிரிவுகள்:Uncategorized

தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும்

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பிறந்த ஒவ்வொரு தமிழனும் தமிழ் மரபியலுக்குச் சொந்தமானவன். காலங்காலமாக வாழையடி வாழையென வந்த மரபியலைப் போற்றுவதும், எந்தச் சூழலிலும் அதனைக் கலங்கப்படுத்தாமல் இருப்பதும், அதற்கு நெருக்கடி நேரும்போது ‘தாய்க்கொரு பழிநேர்ந்தால் மகற்கில்லையோ’ என்ற உணர்வின் உந்துதலில் அரணாகி நிற்பதுவும் தமிழ் இனத்தில் பிறந்த ஒவ்வொருவனின் கடமையாகும்.

சொந்த மொழியை – இனத்தை – சமயத்தை – இலக்கியத்தை – பண்பாட்டை – வரலாற்றை – சான்றோரை இழுவுபடுத்தி இன்பம்காணும் பேதையர்கள் நிறைந்ததுதான் தமிழினம் என்பது காலம் கட்டியங்கூறும் வரலாறு.

‘நீசபாசை’ என்றும், ‘ஐந்தெழுத்தால் ஆனதொரு பாடை’ என்றும், ‘தமிழ் இலக்கியங்களுக்கு ஆரியமே மூலம்’ என்றும், ‘தமிழ் அறிவியல் மொழியாகுமா? என்றும், ‘தமிழ் தொழில்நுட்ப உலகில் தழைக்குமா?’ என்றும், ‘தமிழ் அடுத்த 100 ஆண்டுகளில் அழிந்துவிடும்’ என்றும் பறபல பரிகாசிப்புக்கு உள்ளாகிய வரலாறு தமிழுக்கு உண்டு.

இத்தனைக்கும், இத்துணைக் கொடுமைகளையும் செய்தவர்கள் வேற்று இனத்தாரில்லை. தமிழினத்தில் பிறந்த கோடரிக்காம்புகளும் – தப்பிப் பிறந்த தறுதலைத் தமிழர்களும் ஆகியவரோடு எப்போதுமே தமிழுக்குப் பகையாக நிற்கும் ஆரியப் பார்ப்பனக் கூட்டமும்தான்.

இந்நிலையில், காலந்தோறும் தமிழுக்கு எதிராக வீசப்பட்ட ஏவுகணைகளைத் தகர்த்தெரிந்து மொழியறிஞர் பாவாணர் குறிப்பிட்டதுபோல, 50,000 ஆண்டுகள் வரலாறுகொண்டதும், 3,000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே செவ்வியல் நிலைக்கு முன்னேறிவிட்ட மொழியாகவும் இன்றைய கணினி இணைய உலகிலும் நின்று நிலைக்கும் மொழியாகவும் தமிழ் இருப்புக்கொண்டிருப்பது உலகில் வேரெந்த மொழிக்கும் இல்லாத தனியுயர்ச் சிறப்பாகும்.

அப்படிப்பட்ட தமிழில், மொழிக்கென்று ஒரு மரபு உண்டு! இனமரபு உண்டு! சமய மரபு உண்டு! பண்பாட்டு மரபு உண்டு! கலை மரபு உண்டு! இசை மரபு உண்டு! இலக்கிய மரபு உண்டு! வாழ்வியல் மரபு உண்டு! இப்படி மாந்த வாழ்வியலைத் தழுவிய எல்லாவற்றிலும் மிக உயரிய மரபுகளை வகுத்தவர்கள் தமிழர்கள்.

அப்படியிருக்க, சொந்த இனத்தின் – சொந்த மொழியின் பண்பாட்டை மதிக்கத் தெரியாத இன்றையத் தமிழர்கள் சிலர் ‘தமிழை’ வழக்குமன்றத்தில் ஏற்றி மரபு என்பதற்கு ஒரு முழுமையான தெளிவான விளக்கம் கொடுக்கவும் என்றெல்லாம் வாதம் செய்கின்றனர்.

இது எப்படி இருக்கிறது என்றால், தன்னைப் பெற்றெடுத்து – பாலூட்டி – சீராட்டி – தாலாட்டி – மார்பிலும் தோளிலுமிட்டு – அன்பொடு அறிவையும் புகட்டி ஆளாக்கி வளர்த்தெடுத்த சொந்த அம்மாவைப் பற்றி சொல்லச்சொல்லி பக்கத்து வீட்டுக்காரனிடம் கேட்டக் கதையாக இருக்கிறது.

மேலை நாடுகளின் பண்பாட்டுச் சிதவுகளினால் உருவெடுத்த ‘நவினம்’, ‘பின்நவினம்’ முதலான வடிவங்களில் ஈர்க்கப்பட்ட இளையோர்கள் மட்டுமல்ல, முதுமையிலும் “இன்பம் எங்கே இன்பம் எங்கே” என்று தேடும் மூத்தவர் சிலரும் இப்படிப்பட்ட குருட்டுக் கணைகளை ஏவிவருவது வழக்கமாகிவிட்டது. அந்த முனைப்பில், தமிழ் மரபியலைச் சிறுமைபடுத்துவதும் சிதைவுக்குள்ளாக்குவதும் இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், தமிழைப் பழித்துக்கொண்டே – தமிழ் மரபியலைப் பழித்துக்கொண்டே – தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழித்துக்கொண்டே, அதே தமிழால் வந்துசேரும் பணம், பட்டம், விருது, புகழ், மேடை, மாலை, சிற்றிதழ், கவிதைத் தொகுப்பு, சிறுகதை, நாவல், இலக்கியக்கூட்டம் என்று பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் ‘சோற்றுப் பட்டாளம்’ ஒன்று தமிழகத்தில் கருவாகி இன்று உலகமெங்கிலும் பரவலாகி இருக்கிறது.

இவர்களுக்குத் தமிழின் மூக்குநுனி தெரிகிறதோ இல்லையோ. ஆனால், அன்னியரின் மூளை அணுக்கள்வரையில் துல்லியமாகத் தெள்ளெனத் தெரிகிறது.

அன்னியரின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வெறுக்கதக்கவை அல்ல. அன்னியர் கண்டுபிடித்தாலே அவை தமிழுக்கு அன்னியம் என ஒதுக்கத்தக்கவையும் அல்ல. மாறாக, அவர்களின் கண்டுபிடிப்புகளில் இருக்கும் உயர்வுகளை மட்டுமே மதித்து ஏற்கமுடியுமே தவிர, இழிவுகளையும் கழிசடைகளையும் அல்ல.

தங்கத்தை உரசிப்பார்க்கும் தமிழ்க்கல்லில் அன்னியத் தகரங்களைக் கொண்டுவந்து உரசுவது மடமையன்றி வேரென்ன? அப்படியேதான், தமிழ் மரபியலோடு ‘பின்நவினம்’ போன்றவற்றை உரசிப்பார்ப்பதுவும்.

‘பண்புடையார் பட்டுண்டு உலகம்’ என்ற தமிழ் மரபுக்கும் ‘உலகப் பொதுமை என்று என்று எதுவும் கிடையாது’ என்ற மேற்குலகப் பின்நவின மரபுக்கும் எத்துணை வேறுபாடு இருக்கிறது. ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்ற தமிழ் மரபு மாந்த இனத்தை உய்விக்கும் அளவுக்கு ‘மனித இனத்தின் முதன்மையான உந்துவிசை பாலுணர்வு வேட்கைதான்’ என்ற மேலையர் கண்டிபிடிப்பு எந்தளவுக்கு உய்விக்கும்?

இறைமையை ஒன்றாகவும்,

வாழ்வை இரண்டாகவும்,

மொழியை மூன்றாகவும்,

நெறியை – நிலத்தை நான்காகவும்,

திணையை ஐந்தாகவும்,

அறிவை – சுவையை ஆறாகவும்,

இசையை – கிழமையை ஏழாகவும்,

திசையை – மெய்ப்பாட்டை எட்டாகவும்,

மணிகளை – எண்களை ஒன்பதாகவும்,

கண்டு உலகத்திற்குத் தந்தது தமிழ் மரபியல் அல்லவா? இவை இன்றும் உலகத்திலே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது மட்டுமல்ல.. இன்றளவும் மாற்றத்திற்கு உள்ளாகாமல் இருப்பதுவும் உண்மையல்லவா?

‘மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது’ என்ற கோட்பாட்டைக் கடந்து உலகத்தில் இன்னமும் மாறாமல் இருப்பவை ஏராளம் இருக்கின்றன என்பதை முற்றிலுமாக மறுத்துவிட முடியுமா?

தமிழ் மரபியல் ஒன்றும் மாற்றத்தை மறுதளிக்கும் ஏற்பாடு கிடையாது. காலத்திற்கு ஏற்ற தேவையான மாறுதல்கள் தமிழிலும் ஏற்பட்டே வந்துள்ளன. ஆயினும், தமிழின் ஆணிவேரிலே கைவைக்கும் மாற்றங்கள் அடையாளம் தெரியாமல் பொசுங்கிப் போயுள்ளன என்பதே வரலாற்று உண்மை.

சான்றாக, வடமொழி ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் தமிழில் வழங்கிய ‘மணிப்பிரவாள’ நடை தோன்றி கோலோச்சியது. மணிப்பிரவாளத்தில் எழுதுபவரே மகா பண்டிதர் என்ற நிலை அன்று உருவாகியது. இதனால், தமிழ்ப் புலவோர் பலரும் மணிப்பிரவாளத்தில் எழுதத் தொடங்கினர். ஆனால், இன்று ‘பின்நவினம்’ பேசும் கத்துக்குட்டிகளுக்குத் தெரியுமா இந்த மணிப்பிரவாளம்? தெரியுமா இந்த வரலாறு?

ஓர் இடைக்காலத் தொய்வுக்குப் பின்னர் மீண்டும் தமிழ் மரபியலே தலையெடுத்தது. அப்படித்தான் இன்று, நவினமும் பின்நவினமும் பொங்கி எழும்புகிறது. ஆனால், அது விரைவிலேயே மரபியல் சமுத்திரத்தில் பெருங்காயமாகிக் கரைந்துபோகும்.

தமிழ் மரபியலுக்கு விளக்கம் கேட்போருக்கு நாம் ஒரே ஒரு சொல்லில் விளக்கம் சொல்லிவிடலாம். அந்தச் சொல் ‘தொல்காப்பியம்’.

ஆம்! ‘மரபு என்பதற்கு நிரந்திரமான தேசிய அங்கீகாரம் பெற்ற ஒரு முழுமையான தெளிவான விளக்கம் கொடுக்கவும்’ என்று இன்று கையைநீட்டி கேள்வி கேட்பவர்களுக்கு.. அன்றே நமது தமிழ் முப்பாட்டன் தொல்காப்பியன் பாட்டுவடிவில் பாடமே எழுதிவிட்டான்.

இதனைக்கூட அறியாதவர்கள் ‘இலக்கியம்’ என்று எதையோ படைக்கிறார்கள். இவர்களுக்கும், கருவிகள் எதுவும் இல்லாமல் உழவுக்குப் போகிறவர்களுக்கும்.. வாளைத் தீட்டாமல் போர்க்களம் புகுகின்றவர்களுக்கும்.. ஆண்மையே இல்லாதவன் ‘முதலிரவுக்காக’ முந்திக்கொண்டு ஓடுவதற்கும்.. எந்தவொரு வேறுபாடுமே கிடையாது.

தமிழ் மரபியல் என்பதற்கு விளக்கம் கேட்பவர்கள் தொல்காப்பியம் போன்ற நூல்களைப் தேடிப்பிடித்துப் படிப்பது நல்லது. படித்தாலும் புரியவில்லை என்றால் அதற்குப் பொறுப்பு தொல்காப்பியத் தமிழல்ல.. அதனைப் புரிந்துகொள்ள முடியாத மொழியறிவும் மொழிமானமும் கெட்டுப்போன தமிழன்தான்!

(மரபியல் மலரும்…)

பிரிவுகள்:Uncategorized

பின்நவீனத்துவம் – ஓர் அறிமுகம்

புத்தகம் எனும் நான்கு கரை ஆற்றில்
வலப்பக்கமும். இடப்பக்கமும்
எல்லாமும் பார்த்துக்கொண்டு
எதிலும் கலக்காமல் நிற்கும்
ஒல்லிப் பனைகள் வரிசையில்

– தேவதச்சன்

“பின் நவீனத்துவம்” என்ற வார்த்தையை இன்றைய சூழலில் ஒருவர் தன் விருப்பத்திற்கேற்ப எந்த அர்த்தத்திலும் பயன்படுத்தலாம் என்றாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் “பின்” என்ற சொல் இருப்பதனால் அதை மேலும் மேலும் நவீனக் காலத்திலிருந்து பின்னோக்கிக் கொண்டுப்போவதற்கான ஒரு முயற்சி கூட நடக்கிறது. முதலில் அந்த வார்த்தை கடந்த இருபது ஆண்டுக்காலமாக செயல்பட்டு வந்த எழுத்தாளர்கள் அல்லது கலைஞர்களை குறிக்கப் பயன்பட்டது. அதற்கு பிறகு இந்த நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திற்கு அந்த வார்த்தை கொண்டு செல்லப்பட்டது. கூடியவிரைவில் அந்த வார்த்தை கடந்த நூற்றாண்டுகளின் படைப்பாளிகளை குறிப்பிட நேர்ந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை.

உண்மையில் “பின்நவீனத்துவம்” என்பது ஒரு செயல்பாட்டு வழிமுறை. ஒவ்வொரு காலமும் தனக்கென ஒரு தனிப் பாங்கினைக் கொண்டிருப்பதுப் போல, ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான பின்நவீனத்துவத்தை கொண்டிருக்கிறது எனக்கூறலாம்.

நவீனத்துவத்தின் பரவல் எல்லை :

வரலாற்று ஆய்வுகள் உண்டாக்கிய தீங்குகள் குறித்து நீட்சே எழுதிய “Thoughts out of season” என்ற நூலில், அவர் விவரித்துள்ளது போன்ற சிக்கல்கள் நிறைந்த சந்தர்ப்பங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்து வந்திருக்கிறது. கடந்துபோன காலம் நம்மை கட்டுப்படுத்துகிறது, அதன் நிகழ்வுகள் நம்மை தொந்தரவு செய்கிறது, நம்மை மிரட்டுகிறது. நவீனத்துவம் வரலாறு சார்ந்த கடந்த காலத்தோடு தனக்கிருக்கும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முயற்சிக்கிறது. அதன் தொடர்ச்சியாக நவீனத்துவமானது கடந்த காலத்தை, அதன் அடையாளத்தை துடைத்துவிடுகிறது. இன்னும் மேலே சென்று அதை உருத்தெரியாமலாக்கிவிட்டு “அரூபம்” (Abstract) என்ற ஸ்தானத்தை அடைகிறது. இதனை தாண்டி நவீனத்துவம் போக முடியாதா என்ற சிக்கலான கேள்விக்கான பதில் பின்நவீனத்துவத்தில் உள்ளது எனலாம்.

காலத்தோடு பின்நவீனத்துவத்தின் அணுகுமுறை:

பின்நவீனத்துவத்தில் கடந்த காலம் குறித்த அணுகுமுறை தங்கியுள்ளது எனலாம்.

கடந்த காலம் என்பது முடிந்துபோய்விட்ட ஒன்றல்ல, அதனை அங்கீகரித்து அதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோருகிறது. அப்படியானதொரு மறுபரிசீலனை “கடந்தகாலத்தை” அறியாமையோடும், வெகுளித்தனத்தோடும் அணுகுவதாக இல்லாமல் முரண்நகையோடு (irony) அணுகுகிறது பின்நவீனத்துவம். அறியாமை, வெகுளித்தனத்தோடு அணுக முற்பட்டால் கடந்தகாலம் குறித்த சரித்திரத்தை நாம் பாடபுத்தகங்கள் வழியாக அறியலாம், படைப்புகள் வாயிலாக அல்ல.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் செதுக்கோவியங்களின் துணுக்குகளை ஒட்டி ஒட்டி உருவாக்கிய “சேர்க்கை ஓவியங்கள்” அல்லது “கொலாஜ்கள்” பின்நவீனத்துவம் சார்ந்தவைகளாக உள்ளன. ஏனெனில் அவற்றை விசித்திரமான கதைகளாக வாசிக்கமுடியும், கனவுகளை எடுத்துக் கூறுவனவாகக் கொள்ளமுடியும். அவை செதுக்கோவியங்களின் தன்மைகள் குறித்தொரு உரையாடலை எழுப்புகின்றன என்பதையோ அவை “கொலாஜ் ஓவியங்கள்” என்பதையோ புரிந்துக்கொள்ளாமலேயே கூட அவற்றை ஒருவர் பார்த்து விளங்கிக்கொள்ள முடியும். எழுத்தில், பின்நவீனத்துவம் வாசகர்களின் கனவுகளைக் கவர்ந்து, சந்தோஷமான வாசிப்பனுபவத்தை நல்குவதாக இருக்கிறது. வாசகர்களின் கனவுகளைக் கவர்வதென்பது அவர்களைத் தப்பிக்கத் தூண்டுவதென்று மட்டுமே அர்த்தமாகாது. அது, அவர்களை இறுதிவரை துரத்திச்செல்வதென்றும் கூட அர்த்தப்படலாம்.

பின்நவீனத்துவ நாவல்களின் அமைப்பு:

குறிப்பாக நாவல் என்பது ஒற்றைச் சட்டகமல்ல. அது பல்வேறு விதமான இலக்கிய வடிவங்களின் ஒன்றுசேர்ந்த முயற்சி. அதாவது ஒரு இசைக்கோர்வையை போல நாவல் தன்னுள் கவிதை, நாடகம், தத்துவம், ஓவியம் என்று பல்வேறு வகைப்பட்ட தளங்களைக் கொண்டிருக்கவேண்டும். அதுபோல காரண காரியங்களாகத் தொடரும் சம்பவங்களோ, நிகழ்வுகளின் வழியாக மட்டும் வளரும் கதைமுறையோ இனி அவசியமற்றது. அதற்கு மாறாக காரண காரியங்களுக்கு வெளியே முன் பின்னாக காலம் எப்படி கடந்து செல்கிறது என்பதையும் காலத்தின் பல்வேறு அடுக்குகள் எப்படி ஒன்றின்மீது ஒன்று படிந்திருக்கின்றன என்பதையும் கண்டறிதல் நாவலின் முக்கியப் பணியாகிறது.

லட்சியவாத உலகை சிருஷ்டி செய்வதோ அரசியல் கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்களை நிறுவுவதோ நாவலின் வேலையல்ல. மாறாக அரசியலின் ஆதார குணங்களான அதிகாரமும் வன்முறையும் பற்றி ஆராய்வது இங்கு நாவலின் முக்கிய பங்காகிறது. சரித்திரம் குறித்து நமக்கு கற்பிக்கப்பட்ட மனச்சித்திரங்களை அழித்து புதிய சித்திரங்களை வரைவதில்தான் புனைவு வெற்றிப்பெறுகிறது எனத் தெரிவிக்கின்றன பின்நவீனத்துவ நாவல்கள். கற்பனையின் புதிய சாத்தியங்களை உருவாக்குவதும் அந்த சாத்தியங்களை மெய்மையோடு ஒன்றுகலக்கச்செய்து புனைவின் வழியாகவே உலகை எதிர்கொள்வதுமே நம் கால நாவல்களின் பிரதானப்பாடு என்றிவை வெளிப்படுத்துகின்றன.

மேற்கூறிய நிலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாக:

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரான ஜோஸ் சரமாகோ (Jose Saramago) (இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்), 1995ல் எழுதிய “கல் தெப்பம்” (The Stone Raft), நம் காலத்திய முக்கியமான அரசியல் நாவலாகும். ஐரோப்பாவின் பைரீனி என்ற பகுதியில் ஒரு நாள் எதிர்பாராதவிதமாக ஒரு சாலையில் சிறிய கோடு போல பிளவு ஏற்படுகிறது. அன்று ஒரு நாய் அதை கண்டு ஊளையிடுகிறது. இதை பற்றிய புகாரை அரசாங்கம் பெரிதாக எடுத்துக்கொள்வதேயில்லை. ஆனால் விஷயம் பெரிதாக வளர்ந்தவுடன் இதை வைத்துக்கொண்டு எப்படி சம்பாதிக்கலாம் என்று அதிகாரவர்க்கம் திட்டமிடுகிறது. பிரச்சனை தீரவேயில்லை. முடிவில் சாலையில் ஏற்பட்ட அந்த சிறிய பிளவு கொஞ்சம் கொஞ்சமாக பெரிய பள்ளமாக விரிந்துக்கொண்டே போய் ஒரு நாள் ஒரு தெப்பம் மிதந்துப்போவது போல தனியே மிதந்து செல்லத்துவங்கிவிடுகிறது. இப்படி பிரிந்து செல்லும் கல்தெப்பத்தில் மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும், ஒரு நாயும் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த தெப்பம் தனியே ஊர்ந்துப்போய்க்கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்வு அந்நகரின் நிர்வாகத்திலும் தனிநபர்களின் சிந்தனையிலும் ஏற்படுத்தும் விளைவுகளும் பிரிந்துசெல்லும் தெப்பத்திலுள்ள கதாபாத்திரங்களின் மனோநிலையும் நாவலில் விவரிக்கப்படுகிறது. ஒரு தேசம் ஏதாவது ஒரு காரணத்தினால் துண்டிக்கப்பட்டு பிரிந்துபோகும் அபாயங்களின் பின்னணியில் இது போன்ற வேதனைகளும் வன்முறைகளும் உள்ளன என்று முன்னும் பின்னுமாக ஊடாடி நகர்கிறது நாவல்.

நேர்முகம் ஒன்றில் “சரமாகோ” இந்த நாவலை பற்றிக் குறிப்பிடுகையில் “ஸ்பெயினும் போர்ச்சுகலும் அருகருகே உள்ளன. இருப்பினும் கண்ணுக்கு தெரியாத ஒரு கோடு வழியாக இரண்டாக பிளவுப்பட்டு வருகின்றன. உண்மையில் ஐரோப்பா கண்ணுக்கு தெரியாத ஒரு இடைவெளியின் வழியாக பிளவுப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களும் அவர்களின் அதிகார அரசியலும்தான்” என்கிறார்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்காக பலமுறை சிபாரிசு செய்யப்பட்டவரும், இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் முதல் எழுத்தாளர் என்று விமர்சகர்களால் கொண்டாடப்படுபவருமான “மிலோராட் பாவிக்” பெல்கிரேடில் வசித்து வருகிறார். அவரது “கசார்களின் அகராதி” (Dictionary of the Khazars) என்ற நாவல் ஆண் பதிப்பு, பெண் பதிப்பு (male edition, female edition) என்று இரண்டு விதங்களில் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு பதிப்புகளுக்கும் உள்ள வேறுபாடு ஒரேயொரு பத்தி மட்டுமே. அதாவது பதினேழு வரிகள் மட்டுமே.

இந்த நாவல் அகராதியின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அகராதி கசார்கள் என்ற இனக்குழுவின் அறிவுத்திரட்டு போல புனையப்பட்டிருக்கிறது. மரபான அகராதியின் வடிவத்தில் இது எழுதப்பட்டிருப்பதால் எங்கிருந்தும் வாசிக்கும் சுதந்திரம் இந்த நாவலுக்கு ஏற்படுகிறது.

கசார்கள் என்ற இனக்குழு கருங்கடலுக்கு வடக்கேயுள்ள வோல்கா டெல்டா பிரதேசத்தில் வாழ்ந்த இனக்குழுவாகும். இவர்கள் ஒன்பதாம் நூற்றாண்டுவரை வலிமையான அரசாட்சி புரிந்து வந்தனர். கசார்களின் அரசனொருவன் தான் கண்ட கனவிற்கு பலன் சொல்வதற்காக தனது தேசத்திலுள்ள மூன்று முக்கிய மதங்களை சேர்ந்தவரகளையும் அழைக்கிறான். அதன்படி யூதமதம், கிறிஸ்துவம், இஸ்லாம் என்ற மூன்று மதப்பிரிவுகளின் பிரமுகர்களும் அரசனின் கனவை விளக்க முயற்சிக்கிறார்கள். மூவரில் எவருடைய விளக்கம் தன்னை திருப்தி செய்கிறதோ அவருடைய மதத்தை தனது தேசமே தழுவ செய்வதாக அந்த அரசன் அறிவிக்கிறான். இந்த சிறிய புனைக்கதையினை துவக்கமாகக் கொண்டு இந்நாவல் கசார்களின் வாழ்க்கை எப்படி மூன்றுவிதமான அறிவு முறையைக் கொண்டுள்ளது என்பதை தனித்தனி தொகுதிகளில் விவரிக்கிறது.

தனது எழுத்தைப் பற்றி “பாவிக்” குறிப்பிடுகையில் “எனது எழுத்து கட்டிடக் கலையும், ஓவியமும் ஒன்று சேர்ந்த இசைக்கோலம்” என்கிறார். நம்முடைய நாட்டார் கதைகளைப் போன்ற விந்தையான கதைப்போக்கும், கனவு நிலைப்பட்ட படிமங்களும், தத்துவத்தின் ஆழ்ந்த பார்வையும், மிகைக் கற்பனையும், சரித்திர உண்மைகளை மீள் ஆய்வு செய்வதும் இந்த நாவலின் தனித்துவமான அம்சங்களாகக் கொள்ளலாம்.

புரிதல் அணுகுமுறை:

பின்நவீனத்துவ நாவல்கள் எல்லாம் “குப்பைகள்”, “அசட்டுத்தனத்தின் உச்சம்”, “பேத்தல்கள்” என வெளிப்படும் வார்த்தைகள் அவற்றிடம் பரிச்சயமற்ற அறியாமையில் இருந்து வெளிப்படுபவை. “படைப்பை வாசித்துவிட்டு” புரியவில்லை என்று சொல்வது நாகரீகமாகிவிட்ட இன்றைய சூழலில், அந்தப் படைப்பு நாளையோ, அடுத்த வருடமோ, (நாம் உயிரோடு இருந்தால்) பத்து வருடங்களுக்கு அப்புறமோ நமக்குள் புரிதலை நிகழ்த்தலாம். அப்படியே புரியாமல் போய்விட்டால்தான் என்ன? வாழ்க்கையில் புதிர்வட்டத்திற்குள் எல்லா நிகழ்வுகளும் புரிதலின் அடிப்படையில்தானா நிகழ்கின்றன?

மொசைக் தளத்தில் வரையப்பட்ட ஓவியங்களென சிதறி கிடக்கும் பின்நவீனத்துவ நாவலின் பகுதிகள் வாசகனின் ஆழ்ந்த ஈடுபாட்டு அனுபவத்தையும், முன்முடிவுகளற்ற புரிதலையும் கோருகின்றன. அவையிரண்டும் ஒருசேர அமைகையில் நாவல் வாசகனின் மனதில் ஒன்றிணைக்கப்பட்ட சித்திரமாக, இணைவுபெற்ற புதிர்த்துண்டுகளில் ஒளிந்துக்கிடந்த புதையல் ரகசியமாக வாசகனை பரவசத்திற்குள்ளாக்குகிறது.

தன்னுடைய தாய்மொழியில் அல்லது தனக்கு பரிச்சயமான மொழியில் எழுதப்பட்ட நாவல்களை புரிந்துக்கொண்ட வாசகன், அதே அகந்தை மனநிலையில் ஒரு பின்நவீனத்துவ நாவலை அணுகும்பொழுது அது அவனுடைய “எட்ட நின்று குச்சியால் கிளறுவதே வாசிப்பு” என்ற மனோபாவத்தை பரிகசிக்கத் தொடங்கிவிடுகிறது. இதனால் கலவரமடைந்த வாசகன் அந்த பின்நவீனத்துவ நாவலை நிந்தித்து தூக்கி எறிவது இயல்பே. ஆனால் முன்முடிவுகளின்றி, அந்த எழுத்தோடு தன்னைப் பிணைத்துக்கொள்ளும் ஒரு வாசக நாடோடிக்கு வாஞ்சையான அணைப்பும், ரசவாதம் சித்தித்த கிளர்ச்சியும் அளிக்கின்றன பின்நவீனத்துவ எழுத்துக்கள்.

இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியாக எழுத்தாள நண்பரான திரு எஸ். ராமகிருஷ்ணனின் கூற்றோடு முடிப்பது பொருத்தமாக இருக்கும்.

“பொதுவாக தமிழ் எழுத்தாளர்கள் அன்றாட வாழ்வை தவிர வேறு எந்த விசயங்களில் ஈடுப்பாடு அற்றவர்கள். இவர்களின் கதையும் அன்றாட பிரச்சினைகளுக்குள் அடங்கியதுதான். இதை விடுத்து தங்கள் வாழ்விடங்களுக்கு அருகாமையில் இருக்கும் மலையை, குகையை, கானகத்தை என எதையும் காணவோ அதன் நுட்பங்களை அறிந்துகொள்ளவோ விருப்பமற்று இருக்கிறார்கள். இதைவிடவும் விளையாட்டிலும், விஞ்ஞானத்திலும் ஆர்வமிருப்பவன் இலக்கிய ரசனை அற்றவன் என்ற ஒரு பொய்யான கற்பிதம் வேறு தமிழ் எழுத்தாளர்களை பீடித்திருக்கிறது. உம்பர்த்தோ எக்கோ, இடாலோ கால்வினோ, பார்த்தல்மே, பிரைமோ லெவி போன்று சரித்திரத்தை மட்டுமல்லாது விஞ்ஞானத்தையே ஒரு புனைவாக உருமாற்றும் பின்நவீன எழுத்தாளர்கள் உருவாகிவிட்ட காலகட்டத்தில் நொய்ந்த வார்த்தைகளால் தமிழில் கவிதைகள், கதைகள், நாவல்கள் எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. “

நன்றிகள்:

1. திரு எஸ். ராமகிருஷ்ணன்

2. திரு. உம்பர்த்தோ எக்கோ

நூல் ஒப்பீடுகள்:

1. விழித்திருப்பவனின் இரவு – எஸ். ராமகிருஷ்ணன்

2. கால்வினோ கதைகள் – பிரம்மராஜன்

3. பிரைமோ லெவி கதைகள் – லதா ராமகிருஷ்ணன்

4. The castle of crossed destinies – Italo Calvino

5. If on a winter’s night a traveller – Italo Calvino

6. Reflections on the name of the rose (Umberto Eco)

பிரிவுகள்:Uncategorized

சாருவோடு ஒரு நேர்காணல்

தீராநதி – நேர்காணல்
 

வாழ்ந்து வாழ்ந்து அலுத்துவிட்டது. அதனால் அவன் வேறு ஒன்றைத் தேடுகிறான். இங்கே ஒரு இளைஞனும் அவனுடைய காதலியும் செக்ஸ் வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தால் கல்யாணம்தான் செய்துகொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் போலீஸ் பிடித்துவிடும். ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் கூட போய் தங்க முடியாது. உடனே ரெய்டு செய்து விபச்சார வழக்கில் உள்ளே தள்ளி விடுவார்கள்.

திருமணச் சான்றிதழ் வைத்திருக்கிறீர்களா என்று கேட்பார்கள். இதை பிராக்டிக்கலா நானே பல இடங்களில் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரியான இறுக்கமான ஒரு சமூகத்திற்குள் நாம் ஆசைப்படுவது எதுவும் கிடைப்பதில்லை. தடைசெய்யப்படுகிறது. கட்டுப்படுத்தப்படுகிறது. ஆக , இச்சமூகம் என்னை ஸ்திரீலோலனாகத்தான் இருக்க வைக்கிறது. அப்புறம் , நாம் எப்போதுமே வாழ்க்கையின் சௌகர்யமான இலக்கியத்தை மட்டுமே பேசிக்கொண்டு , சௌகர்யமான இலக்கியத்தை மட்டுமே படைத்துக் கொண்டி Ê ருக்கிறோம். நான் , பிரேதக் கிடங்கில் இருக்கக்கூடிய ஒருவன் எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறான் அவனுடைய வாழ்க்கை என்ன என்று ஆராய்ச்சி பண்ண நினைக்கிறேன். அதை வைத்து ஒரு கதை எழுதினால் உடனே இவன் பிரேதத்தைப் புணருகிறவன் என்றும் ; இவனுக்கு நெக்ரோஃபீலியா என்றும் பேசுகிறார்கள். அதற்கு நான் என்ன செய்யமுடியும் ?

தீராநதி: வழக்கமான வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு நீங்கள் வாழ்வின் வேறு பக்கங்களைப் பற்றி அதிகம் எழுதுகிறீர்கள். நீங்கள் ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டா ?

சாரு: போஸ்ட் மாடர்னிஸ்ட் என்று தன்னை ஒருவர் பிரகடனப்படுத்திக் கொள்கிறார் என்றால் அதைப்பற்றி நான் கொஞ்சம் சந்தேகப்படுகிறேன். ஏனென்றால் இந்தப் பிரகடனங்கள் இலக்கியத்தை உருவாக்காது. கோஸின்ஸ்கி , இடாலோ கால்வினோ , உமபர்தோ எக்கோ போன்றவர்களெல்லாம் இலக்கியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உமபர்தோ எக்கோ ஒருவர்தான் தியரிடீஷ்யன். அவர்தான் போஸ்ட்மாடர்னிசம் பற்றிப் பேசுகிறாரே தவிர , மார்க்கேஸ் இருக்கிறாரே அவர் என்ன போஸ்ட் மாடர்னிஸ்ட்டா ? அதெல்லாம் கிடையாது. அவர் தன் போக்கில் இலக்கியத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறார். போஸ்ட் மாடர்னிஸம் என்பது விஷயங்களை இன்னும் தெளிவாக இன்னும் ஜனநாயக ரீதியாகப் புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி. அவ்வளவுதான். நீங்கள் மாஜிக்கல் ரியலிஸ்ட்டா என்று கேட்டால் மகாபாரதமே மாஜிக்கல் ரியலிஸம்தானே. அதிலும் போஸ்ட் மாடர்னிஸத்திற்கான கூறுகளை நாம் பார்க்கலாம். தெரிதாவின் பல கோட்பாடுகளை கிருஷ்ணனுடைய கதைகளோடு நாம் பொருத்திப் பார்க்க முடியும். போஸ்ட் மாடர்னிஸ்ட் , மாஜிக்கல் ரியலிஸ்ட் என்பதெல்லாம் எனக்குப் பொருந்தாது. நான் ஒரு படைப்பாளி அவ்வளவுதான்.

தீராநதி: பின் நவீனத்துவ கோட்பாடுகளை அறிமுகம் செய்வது , அது சம்பந்தமான பிரதிகளை உருவாக்குவது , இதையெல்லாம் நீங்கள் செய்யும்போது , ஏன் ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டாக அடையாளப்படத் தயங்குகிறீர்கள் ?

சாரு: இங்கே போஸ்ட் மாடர்னிஸத்தை உள்வாங்கிக் கொண்டு எழுதியவர்களே ரொம்பவும் கம்மி. இதில் இன்னொரு பெரிய வேடிக்கை என்னவென்றால் இங்கு யார் முதலில் போஸ்ட் மாடர்னிஸ்ட்டாக எழுதினார்கள் என்று பார்த்தால் , தமிழவன் என்ற ஒருவர் எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதியதில் உயிரே கிடையாது. பிறகு எம்.ஜி.சுரேஷ் தன்னை ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டாக பிரகடனப்படுத்திக் கொண்டு எழுதுகிறார்.

அவரை தமிழவனின் வாரிசு என்றுகூடச் சொல்லலாம். இப்படி உயிரில்லாத சவத்தை உருவாக்குவதால் அவரை வாரிசென்று சொல்கிறேன். முதலில் இலக்கியம் என்றால் அது போஸ்ட் மாடர்னிஸமோ அல்லது வேறு எந்த இஸமோ , அதில் உயிர் இருக்கவேண்டும். உயிர் இல்லாத ஒன்றை எழுத்தென்றே ஒத்துக்கொள்ளமுடியாது. வெறும் லேபிள் ஒட்டி விற்கப்படும் பொருட்களைப் போன்றதுதான் அது. இன்னும் சில பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெயரைச் சொல்வதற்கே பயமாக இருக்கிறது. அப்புறம் மூன்று தலை உருளும் என்பார்கள். இவர்கள் எல்லாம் உயிர் இல்லாத எழுத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் பிரச்சினை. நீட்ஷே , ஃபூக்கோ பற்றி எவ்வளவு காலமாக நிறப்பிரிகையில் , படிகளில் எம்.டி.எம் , தமிழவன் , ரவிக்குமார் , அ. மார்க்ஸ் , நான் எல்லோரும் சேர்ந்து விவாதித்தோம். அதைப்பற்றிய மொழி பெயர்ப்புகள் செய்தோம். இதெல்லாம் என்னுடைய ஃபிக்ஷன் மேக்கிங்கிற்கு எவ்வளவு தூரம் உதவும்… அதற்கு மட்டுமே இவை. இந்த உலகத்தை எவ்வாறு பார்ப்பது , என்னுடைய கான்செப்ட் , விஷன் இவற்றிக்கு இவை மாற்றுப் பார்வையை கொடுத்திருக்கின்றன. அவ்வளவுதான் இவற்றின் முக்கியத்துவம். நான் என்ன போஸ்ட் மாடர்னிஸத்தின் தியரிடீஷ்யனா ? இங்கே மொத்தம் படிப்பவர்களே ஆயிரம் பேர்தான். இங்கே அதற்கெல்லாம் ‘ ஸ்கோப் ’ பே கிடையாது. நான் போஸ்ட் மாடர்னிஸ்ட் என்று சொன்னால் ஓ.கே. இருக்கலாம். நான் அதற்கான லிட்ரேச்சரை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கு முன்னால் நிறையப்பேர் இருக்கிறார்கள். அசோகமித்திரன் , எம்.வி.வெங்கட்ராமன் , கரிச்சான் குஞ்சு , கு.பா.ரா. , ப.சிங்காரம் இப்படி பலபேர்… கடல் மாதிரியான ஆட்கள் இருக்கிறார்கள். அசோகமித்திரனுக்கு போஸ்ட் மாடர்னிஸம் என்றால் என்னவென்று தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் அதைப் பற்றி எங்கேயும் எந்தக் கருத்தும் சொன்னதில்லை.

இங்கே போஸ்ட் மாடர்னிஸ்ட் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு வருபவர்கள் முன்னவர்களைவிட ரொம்ப ரொம்ப ‘ வீக் ’ என்பதுகூட சரியாகாது ; செத்துப்போன ஒரு t மீஜ் t டை உருவாக்குகிறார்கள். இவர்கள் மீது எனக்கு மரியாதை கிடையாது. நான் போஸ்ட் மாடர்னிஸத்தை ஒரு t ஷீஷீறீஆக , இந்த உலகத்தைப் பார்க்கும் ஒரு அணுகுமுறையாக எடுத்துக்கொள்கிறேன்.

தீராநதி: ஒரு t ஷீஷீறீஆக போஸ்ட் மாடர்னிஸத்தைப் பயன்படுத்துகிறேன் என்று சொல்கிறீர்கள். ஆனால் சிலர் ‘ உங்களுக்கு போஸ்ட் மாடர்னிஸமே தெரியாது. சாரு படிக்காமல் உளறுகிறார் ’ என்று சொல்கிறார்களே ?

சாரு: நான் புத்தகங்களைப் படிப்பதில்லை என்று சொன்னால் பிறவி மேதை என்று ஆகிவிடும். போஸ்ட் மாடர்னிஸத்தைப் பற்றி ‘ மாத்ரு பூமி ’ யில் ஒரு தொடர் கட்டுரை கேட்டிருக்கிறார்கள். அந்தத் தொடர் கட்டுரை பின்னால் புத்தகமாக வெளிவரும். இந்த மாதிரியான புத்தகங்கள் எழுதுவது ரொம்பவும் சுலபம். பின் நவீனத்துவத்தைப் பற்றி ஒரு 400 பக்க புத்தகம் எழுதுவது _ இதைவிட சுலபமான வேலை வேறு எதுவும் கிடையாது.

ஆனால் , இந்த 400 பக்கத்திற்குப் பின் நவீனத்துவக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ஒரு நாவல் எழுதுவதற்கு உங்களின் வாழ்க்கையையே நீங்கள் விலையாகக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கப்பட்டதுதான் ‘ ராஸலீலா ’. சொரணையுள்ள ஒரு சமூகத்தில் எழுதி வெளி வந்திருந்தால் , என்னை உள்ளே தூக்கிப் போட்டிருப்பார்கள். அதன் வெளியீட்டாளர் மனுஷ்ய புத்திரனிடம் ‘ இது வெளிவந்தால் நீங்களும் , நானும் சேர்ந்து ஜெயிலுக்குப் போக வேண்டி வரும். தயாரா ?’ என்று கேட்டேன். அவரும் ‘ நான் தயார். ஆனால் , கக்கூஸ் போவது மட்டும்தான் பிரச்னையாக இருக்கும் ’ என்றார். அதற்குப் பிறகுதான் நான் அவரிடம் அந்த நாவலைக் கொடுத்தேன். இவ்வளவு சீரியஸாக இருக்கிறோம் நாங்கள். ஏன் தெரியுமா ? 400 பக்கத்தில் பின்நவீனத்துவம் பற்றி ஒரு தியரி புத்தகம் எழுதுவது சுலபம் என்றேன். நாங்கள் ஃபூக்கோவைப் பற்றி இருபது முப்பது வருடமாக இங்கே ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கிறோம். ராஸலீலாவில் தண்டனை என்ற ஒரு வார்த்தை வருகிறதென்றால் , உடனே ஃபூக்கோ தண்டனை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று மேற்கோள் காட்டி எழுதி இருப்பேன். ‘ ஐ பியர் ’ என்பதுதான் ஃபூக்கோவின் முதல் புத்தகம். 100 வருடங்களுக்கு முன்னால் பியர் என்பவன் பத்துப் பதினைந்து கொலைகள் செய்திருப்பான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கும்போது ‘ ஐ பியர் ’ என்று ஆரம்பித்து நீதிமன்றத்தில் அவனுடைய வாக்குமூலத்தைச் சொல்கிறான். அது அப்படியே கருவூலத்தில் ஆவணமாக இருக்கிறது. அந்த ஆவணத்திற்கு ஃபூக்கோ எடுத்துப் போட்டு அறுபது , எழுபது பக்கத்திற்கு முன்னுரை கொடுத்தார். இதுதான் அவரின் முதல் புத்தகம். இப்படி 50 புத்தகம் , 100 புத்தகத்தைப் படித்துவிட்டு அப்படியே எடுத்து எடுத்து எடுத்து 400, 500 பக்கத்திற்கு பின் நவீனத்துவத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுவது என்பது ரொம்பவும் சுலபம். அது ஒரு அகாடமி ஒர்க். ஆனால் , நான் ‘ ஐ பியரை ’ படித்துதான் , குற்றம் என்றால் என்ன ? ஒரு குற்றவாளியை எப்படி அணுகுவது ? சமூகத்தில் குற்றம் எப்படி ஏற்படுகிறது ? எப்படி தண்டனை என்பது உருவாகுகிறது ? என்பதையெல்லாம் புரிந்து கொண்டேன். நீங்கள் என்ன சொல்லுவீர்கள் மாதா , பிதா , குரு , தெய்வம் என்பீர்கள். மாதா , பிதா , என்பதையே தண்டனை சிஸ்டத்திற்குள் வைத்து ஃபூக்கோவைப் பார்க்கிறேன். ஏனென்றால் , மாதாதான் உங்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறாள். உதாரணத்துக்கு சாதி உணர்வை எடுத்துக் கொள்வோம். இதை உருவாக்குவது அன்னைதான். இதையெல்லாம் நான் தெரிந்து கொண்டது ‘ ஃபூக்கோ ’ வைப் படித்து. எங்களுக்கு எங்கள் அம்மா கொடுக்கின்ற தாய்ப் பாலோடு சாதிய உணர்வு என்பது கலந்து இருக்கிறது. இதைவிட்டு நீ வெளியே வரவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்தவன் ‘ ஃபூக்கோ ’. நான் ஃபூக்கோவைப் படிக்கவில்லை என்று சொன்னால் , அப்போது என்ன அர்த்தம் ? நானே ஒரு ஃபூக்கோ. நன்றாகத்தான் இருக்கிறது.

தீராநதி: உங்களின் ‘ ராஸலீலா ’ நாவல் கோணல் பக்கத்தின் தொடர்ச்சியாகவே தென்படுகிறது. வழக்கமான நாவல் வடிவத் தன்மையில்லாமல் அது வெளியாகி இருக்கிறது. இந்தக் கருத்து சரியா ?

சாரு: இது ஒரு நல்ல அப்சர்வேஷன் என்றுதான் சொல்லவேண்டும். நான் ஒரு கட்டத்தில் மலையாளத்தில் மூன்று பத்திரிகைகளில் தொடர் எழுதிக் கொண்டிருந்தேன். ‘ மாத்ரு பூமி ’ யில் இசை குறித்தான கட்டுரை. ‘ ராஸலீலா ’ ‘ கலா கௌமுதியில் ’. ‘ மாத்யமம் ’ என்ற இதழில் பொதுவான விஷயங்களைப் பற்றியும் அரபி இலக்கியம் பற்றியும் எழுதினேன். அந்த நேரத்தில் ஒரு கட்டுரையை எழுதி இதை ‘ ராஸலீலா ’ வில் சேர்க்கலாமா ? இல்லை மியூசிக் கட்டுரையில் சேர்க்கலாமா ? என்பதை பிறகுதான் முடிவு செய்வேன். அப்போது அப்படி அப்படி இன்ன இன்னதில் தூக்கி கோர்ப்பேன். நான் எழுதுவதென்னவோ ஒரே விஷயம்தான். அதனால் இதில் ஒரு சௌகர்யம் கிடைத்தது.

மியூசிக் பற்றிய கட்டுரையில் பெரிய பிலாஸஃபர் ஒருவர் ‘ பீ ’’ யைப் பற்றியும் மூத்திரத்தைப் பற்றியும் ஆராய்ச்சி செய்திருப்பதைப் பற்றி எழுதி இருந்தேன். இது ஒரு சமூகவியல் ஆய்வுக் கட்டுரை. சென்ற மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் , ஆங்கில இலக்கியத்தில் பலப்பல விஷயங்களை எடுத்துக்கொண்டு அந்த பிலாஸஃபர் ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.

அந்தக் காலத்தில் ராணிகள் , அரசிளங்குமரிகள் எல்லாம் உப்பரிகையிலிருந்து நிலவைப் பார்த்து ரசித்ததைப்போல நிகழ்வுகள் வரும். விக்டோரியா காலத்தைச் சேர்ந்தவர்களின் உடைகளைப் பார்த்தால் கீழே அகண்டு இருக்கும். உள்ளாடை இறுக்கமாக ஓர் உறை போல இருக்கும். பெரிய பெரிய விருந்துகள் எல்லாம் நடக்கும் போது _ குறைந்தது ஒரு விருந்து நிகழ்ச்சி ஐந்து , ஆறு மணி நேரத்திற்கு மேலாக நடக்கும். அவர்கள் இயற்கை உபாதைகளை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள். அந்தப் பெரிய பெரிய உடைகளை கழற்றுவதற்கே குறைந்தது அரை மணி நேரம் பிடிக்கும். இது ஒரு பெரிய காரியம். உடனே ஆடைகளைக் களைந்துவிட்டு மலஜலம் கழிப்பதென்பது அந்த உடையில் சாத்தியமில்லை. அதனால்தான் அவர்கள் உப்பரிகையில் நின்று கொண்டு ஒன்றுக்கு அடித்திருக்கிறார்கள். நிலவையெல்லாம் ரசிக்கவில்லை என்று அவ்வாராய்ச்சியாளர் கண்டறிந்திருக்கிறார். இதை எப்படி அவர் கண்டுபிடித்தார் ? வெறும் ஊகத்தினால் அல்ல ; அந்தக் காலகட்டத்தில் வெளியான பத்திரிகை விளம்பரம் ஒன்றை வைத்து இதைக் கண்டுபிடித்து நிரூபித்திருக்கிறார். அந்தப் பத்திரிகை விளம்பரம் என்ன சொல்கிறதென்றால் , ஆடைக்குள்ளாகவே ஒரு டியூப்பை பொறுத்தி அதன் மூலம் நீங்கள் சிறுநீர் கழிக்கலாம் என்கிறது.

அந்த வசதிகளுடன் ஒரு புதிய ஸ்கர்ட் விற்பனைக்கு வந்திருக்கிறது என விளம்பரம் சொல்கிறது. உடனே அந்த ஆராய்ச்சியாளன் என்ன நினைக்கிறான் ? அப்படியானால் அதற்கு முன் என்ன செய்திருப்பார்கள் என்று யோசிக்கிறான். இப்படி விரியும் கட்டுரை அது. நான் இதைப் படிப்பதற்கு முன்னாலேயே இந்தியாவிலுள்ள முக்கால்வாசி அரண்மனைகளுக்கும் கோட்டைகளுக்கும் சென்று இருக்கிறேன். அங்கு பல் துலக்கும் இடம் , உப்பரிகை , நீச்சல் குளம் , குளியலறை எல்லாம் இருக்கும். ஆக்ரா கோட்டையில் மீன்காரன் ஒருவன் அரண்மனைக்குள்ளாகவே யமுனை நதியோடு மீன் கொண்டுவர ஒரு இடம் இருக்கிறது. ஓடிப்பிடித்து விளையாட , இசைக் கச்சேரிகள் நடத்த இப்படி பல இடங்கள் இருக்கிறது. ஆனால் , எங்கும் கக்கூஸ் மட்டும் இல்லை. அரண்மனைக்குள் எவ்வளவு பெரிய ஜனக்கூட்டம். அவர்கள் எப்படி கக்கூஸ் போய் இருப்பார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கிறது. இப்படி நான் எழுதும் விஷயங்கள் எல்லாமே ஒன்றுதான். எழுதி முடித்த பிறகுதான் இதை நாவலில் சேர்க்கலாம் , இதை கட்டுரையாகக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்கிறேன்.

தீராநதி: போர்னோகிராஃபி வகையறா எழுத்துகளுக்கும் உங்களின் எழுத்திற்கும் என்ன வித்தியாசம் ?

சாரு: அது உங்களுக்கே தெரியுமே ?!

தீராநதி: வாசகனுக்கு விளக்கச் சொல்கிறேன்.

சாரு: ஃபோர்னோகிராஃபியில் இரண்டு வகைகள் இருக்கிறது. ஒன்று _ கமர்ஷியல் ஃபோர்னோ. அதைத்தான் இங்கு செக்ஸ் புத்தகங்கள் என்று சொல்லி போலீஸ் பறிமுதல் செய்து கொண்டிருக்கிறது. அதில் வெறும் வல்காரிட்டி மட்டுமே இருக்கும். எந்த ஃபோர்னோ கலாபூர்வமான அனுபவத்தைக் கொடுக்கிறதோ , அது கிரியேடிவ் ஃபோர்னோகிராஃபி. நான் எழுதுவது கிரியேடிவ் ஃபோர்னோ கிராஃபி கூட கிடையாது.

அலினா ரேயிஸ் என்று ஒரு பிரெஞ்ச் எழுத்தாளர் இருக்கிறார். கேத்தி ஆக்கரையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் கேத்தியின் ஃபோர்னோவில் ஆன்மீகமும் உண்டு. அதனால் கேத்தியை முழுக்க முழுக்க போர்னோ எழுத்தில் அடைக்க முடியாது ‘ புஸ்ஸி ’ என்று ஒரு நாவல் எழுதி இருக்கிறார் கேத்தி. அது போர்னோ வகையைச் சேர்ந்தது. அலினா ரேயிஸ் எழுத்து ஃபோர்னோ வகையைச் சார்ந்தது. இது எல்லாமே ஆர்ட்டிஸ்டிக் ஃபோர்னோவைச் சார்ந்தது. நான் எழுதுவது ஃபோர்னோ வகையையே சார்ந்தது. இல்லை என்று ஏன் சொல்கிறேன் என்றால் , என் 700 பக்க நாவலில் 50 பக்கம் மட்டுமே போர்னோ கிராஃபி இருக்கும். ஒரு 1000 சதுர அடி வீட்டில் 100 சதுர அடி அளவுக்கு பெட்ரூம் இருப்பதுபோல்தான் அது. சொல்லப்போனால் ஃபோர்னோவுக்குள் நான் இன்னும் போகவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தீராநதி: ‘ செக்ஸைப் பற்றிய பொதுவான மதிப்பீடுகளைத் தாண்டி ஆழ்மன ஏக்கம் என்ற ஒன்றிற்குள் சென்று பிணாத்திக் கொண்டிருக்கிறார் சாரு. ’ _ இப்படி ஷோபாசக்தி ஒருமுறை குறிப்பிட்டார். இது ஆழ்மன நிம்மதியின்மையால் எழுகின்ற பிரச்னையா சாரு ?

சாரு: பெரிய செக்ஸ § வல் சர்வே ஒன்றை எடுத்தால்தான் இதற்கு பதில் தெரியும். அப்புறம் ஒருவனின் செக்ஸ் அனுபவம் என்பது இன்னொருவனுக்கு பொய்யாகவும் , புனைவாகவும்தான் தெரியும். தன்னுடைய செக்ஸ § வல் பார்ட்னர் , அதாவது மனைவியின் முழு நிர்வாணத்தைப் பார்த்த இந்தியர்களே இங்கு கம்மி. பெர்லினில் ஒரு இடம் இருக்கிறது. பத்து இருபது பெண்கள் எப்போதும் நிர்வாணமாக அங்கே இருப்பார்கள். அங்கு ஒரு நீச்சல் குளம். நீங்கள் விரும்பினால் அப்பெண்களுடன் குளத்தில் ஜலக்கிரீடை செய்யலாம். இதை நான் எழுதினால் ‘ இது மாதிரியெல்லாம் எங்கேயுமே இல்லை ’ என்பார்கள். அப்படிச் சொன்னால் ‘ போடா பொக்கா ’ என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதான். என்னிடமே ஒருமுறை ஷோபா சக்தி நேரிலேயே சொன்னார். ‘ ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலியல் உறவு என்பது நீங்கள் சொல்வது போலெல்லாம் இருக்காது ’ என்றார்.

என் நண்பர் மனுஷ்ய புத்திரன் அடிக்கடி கூறுவார் ; ‘ எவனொருவன் ஒரு கலைப் படைப்பை அணுகும்போது அது உண்மையா , பொய்யா ?’ என்று கேள்வி கேட்கிறானோ அவனோடு எனக்கு எந்த சம்பாஷணையும் சாத்தியமில்லை ’ என்று. நான் ஒரு கலைஞன். நான் பொய்யை எழுதுவேன் ; உண்மையை எழுதுவேன். எதை வேண்டுமானாலும் எழுதுவேன். கலைஞன் என்பவன் உலக மக்களின் சுபிட்சத்திற்காக தன் சட்டைப் பையில் பல உண்மைகளை வைத்து விநியோகித்துக் கொண்டிருப்பவன் அல்ல , உண்மையைச் சொல்வது என் வேலை அல்ல. அதற்குப் பல தீர்க்கதரிசிகளும் உபதேசிகளும் இருக்கிறார்கள்.

மேலும் செக்ஸ் என்பது கடலைப் போன்றது. இந்தப் பூமியில் எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான செக்ஸ் இருக்கிறது. ‘‘ நான் எழுதுவது போன்ற செக்ஸ் இல்லை ; அது ஃபாண்டஸி ’’ என்று கூறுவது மிகவும் பத்தாம்பசலித்தனமானது. ஃப்ரான்ஸில் வசித்தாலும் பத்தாம் பசலிகளுக்கு விடிவே இல்லை என்பதையே ஷோபா சக்தியின் கூற்று நிரூபிக்கிறது. இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால் , இந்தியாவில் தீவிர இடது சாரியாக உள்ளவரும் மதவாதிகளின் மொழியிலேயே பேசுவதும் சிந்திப்பதும்தான். ஷோபா சக்தியின் மேற்கண்ட கூற்று இங்கே இந்துத்துவவாதிகள் செக்ஸ் பற்றி கொண்டுள்ள அதே பழைய கருத்தையே பிரதிபலிக்கிறது.

சரி , ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். ஷோபா சக்தியின் ‘ ம் ’ நாவலில் ஒரு அப்பனுக்கும் மகளுக்கும் இடையிலான பாலுறவு மிக விஸ்தாரமாகக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இம்மாதிரி incest உறவுகள் சரீர வேட்கையின் காரணமாகவே நடப்பவை. ஆனால் ‘ ம் ’ மில் அது ஒரு ‘ காதலாக ’ சொல்லப்படுகிறது. ஆக , உலகத்தில் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறதா ? இதன் மூலம் திருவாளர் ஷோபா சக்தி கூறும் ‘ உண்மை ’ என்ன ?

மேலும் ஒன்று , நான் ஒரு womanieser என்ற வகையில் எனக்கு பெண்களைப் பற்றியும் , காமத்தைப் பற்றியும் , போகத்தைப் பற்றியும் சற்றே அதிகம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ‘ உள்ளே ’ போகப் போகத்தான் ‘ கற்றது கைம்மண்ணளவு ; கல்லாதது உலகளவு ’ என்பது தெரிய வருகிறது. எனவே ஷோபா சக்தி போன்றவர்கள் இவ்விஷயத்தில் அடக்கம் காட்டுவது நல்லது.

தீராநதி: உங்களின் ‘ நேநோ ’ சிறுகதைத் தொகுதி தமிழ் நான் _ லீனியர் ரைட்டிங் ஸ்டைலுக்குக் கிடைத்த நல்ல தொகுதி. ஏன் நீங்கள் சிறுகதைப் பரப்பில் தொடர்ந்து இயங்கவில்லை ?

சாரு: அது ஒரு காலகட்டம். அவ்வளவுதான். ‘ நேநோ ’ வில் வராத சில கதைகள் என்னிடம் இருக்கிறது. ‘ கர்நாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் ’ என்ற கதை ரொம்பவும் முக்கியமான சிறுகதை. இந்தக் கதையை வெளியிடுவதற்குக் கூட வழி கிடையாது. அது எந்தப் பத்திரிகையிலும் வெளிவரவேயில்லை. எனக்காக நாகார்ஜுனனே போய் டைப் பண்ணி , புத்தகமாகத்தான் வெளிவந்தது. அதேபோல் நாடகம்…

‘ ரெண்டாம் ஆட்டம் ’ என்று மதுரையில் ஒரு நாடகம் போட்டோம். நான்தான் அதை கன்சீவ் பண்ணேன். நம் நண்பர்கள் எல்லாம் நடித்தார்கள். நானும் நடித்தேன். எல்லோரையும் அடித்து தூக்கிப் போட்டு மிதித்தவர்கள் எல்லாம் பொதுமக்கள் கிடையாது. நாடகத்தில் பிஹெச்டி வாங்கியவர்கள் , சக நாடகக் கலைஞர்கள். சண்டையை விலக்கியவர் மு. ராமசாமி என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் , சண்டையை மிகத் தீவிரமாக மூட்டிவிட்டவர் அ. மங்கைதான். ‘ அடிங்கடா அவனை ’ என்ற வார்த்தைகள் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இந்த நாடகம் சம்பந்தமாக நான் 500 பக்கம் உள்ள புத்தகத்தை அகஸ்தோ போவாலைப் பற்றி ‘ ஃபாரம் தியேட்டர் ’ என்று ‘ வெளி ’ பத்திரிகையில் மொழி பெயர்த்திருக்கிறேன். இப்படி அடித்தவுடன் அதற்குப் பிறகு நாடகத்தையே விட்டு விட்டோம்.

தொடர்ந்து நீங்கள் செயல் வீரனாக இருக்க வேண்டுமென்றால் அடிவாங்க வேண்டும். நீங்கள் பெரிய ‘ கொரில்லா ’ மாதிரி இருக்க வேண்டும். அந்த அளவுக்கெல்லாம் சமூகத்தில் நமக்கு இடமே கிடையாது.

தீராநதி: பொது மக்களைவிட எழுத்தாளனுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவர்கள் சக படைப்பாளிகளாக இருக்கிறார்கள் என்கிறீர்களா ?

சாரு: ஆமாம். நிச்சயமாக கோடிட்டு உறுதியாகச் சொல்கிறேன். பொதுமக்கள் எப்போதும் பாதுகாப்பான ஆட்கள். பொது மக்களிடம் சென்று நீங்கள் நாடகம் போடலாம். அவர்களிடம் நமக்கு எந்தப் பிரச்னையும் வராது. சக படைப்பாளிகள்தான் ஜனநாயக உணர்வே இல்லாத ஆட்களாக இருக்கிறார்கள். நம்முடைய காம்ரேட் என்று சொல்லிக்கொள்பவர்கள்தான் ஆபத்தானவர்கள்.

தீராநதி: ஜனநாயகத்தைக் கோரியும் , மனித உரிமைகளின் அடி ஆழம் வரை சென்றும் விவாதிக்கும் படைப்பாளிகள் பொதுமக்களைவிட வன்முறையாகச் செயல்படுகிறார்களே , ஏன் ?

சாரு: அது எனக்குத் தெரியவில்லை. யார் அதிகமாக ஜனநாயகத்தைப் பற்றி படிக்கிறானோ , அவனே பாசிஸ்ட்டாகி விடுகிறான். ‘ ஒருவிதமான ‘ ஐரனி ’ தான் இது. அல்லது விதி. கம்யூனிஸம் என்பது மிகப்பெரிய ஜனநாயகக் கோட்பாடு. எல்லா மனிதனும் சமமாக இருக்க வேண்டும் என்று சொல்லும் உயரிய சித்தாந்தம். ஆனால் அது எப்படி பாசிஸமாக மாறியது ? உதாரணம் ; மாவோ. இது ஏதோ கம்யூனிஸத்தில் மட்டும் நடக்கவில்லை. ஆன்மிகத்திலும் நடக்கிறது. ஆன்மிகவாதி என்ன சொல்கிறான். ‘ நான் சொல்வது மக்களுக்காக. நான் சொல்வது ரொம்ப ரொம்ப நிஜம் ’ என்று அவன் நினைப்பதனாலேயே அதை மற்றவர் மீது திணிக்கப் பார்க்கிறான். இப்படி அதீத ஜனநாயகம் பேசுபவன் சர்வாதிகாரியாகவும் , அதீத ஆன்மிகம் பேசுபவன் பாசிஸ்ட்டாகவும் ஆவதெல்லாம் இந்த உள் முரண்களால்தான். இதற்கு நேர்வாழ்க்கையில் உங்களுக்குத் தெரிந்த பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். ஆனால் , அது அநாவசியம் , வேண்டாம்.

தீராநதி: இளையராஜாவின் இசையை விமர்சித்து கோணல்பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறீர்கள் ?’ உங்களின் இசை ரசனை பற்றி விளக்கமுடியுமா ?

சாரு: ‘ ஆல் இண்டியா ரேடியோவின் சங்கீத் ’ சம்மேளன் மூலமாக ரவிசங்கரின் இசைக் கச்சேரிகளைக் கேட்க ஆரம்பித்ததிலிருந்து என் இசைத் தேடல் தொடங்கிவிட்டது. அதற்கு முன்னாலேயே எங்கள் ஊர் பள்ளி வாசல்களில் கேட்கும் ‘ நகரா ’ இசை மூலம் என் இசை ரசனையைப் பெருக்கிக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் , இலக்கியத்தைவிட எனக்கு இசையின் மேலும் சினிமாவின் மேலும்தான் ஆர்வம் அதிகம். சினிமா சம்பந்தமாக நான் நிறைய எழுதி இருப்பதால் அச்சந்தேகம் யாருக்கும் எழவில்லை. இசை பற்றி நான் அதிகம் எழுதாதது கூட அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். 25 வருடங்களுக்கு முன்னால் ‘ மீட்சி ’ இதழில் ‘ சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம் ’ என்ற எஸ்.ராமநாதன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து கர்நாடக இசைக்கும் , நாட்டுப்புற இசைக்கும் உள்ள இணைத்தன்மைகள் பற்றி ஒரு ஒப்பீட்டுக் கட்டுரை எழுதி இருக்கிறேன். ‘ ஷங்கர்லால் இசைவிழா ’ என்று கணையாழியில் ஒரு கதை எழுதி இருக்கிறேன். அதைப் பாராட்டி அப்போது அசோகமித்திரன் கூட ஒரு கடிதம் போட்டார். நான் டில்லியில் இருந்தபோது பல இசைக் கலைஞர்களின் கச்சேரியை நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு இசை என்றால் அவர்களின் வரம்பிற்குள் கர்நாடக இசையும் இந்துஸ்தானியும்தான் இருக்கிறது. இசை என்பது உலகம் பூராகவும் இருக்கின்ற ஒன்று. இவற்றையெல்லாம் இசையென்று நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களுடைய செவியும் அறிவும் உணர்வும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த ரசனை இல்லாதவர்களெல்லாம் இசை ரசனையே இல்லாதவர்கள் என்றுதான் சொல்வேன்.

இளையராஜாவை விட யுவன் ஷங்கர்ராஜா பல மடங்கு இசை ரசனையுள்ளவர். ‘ புதுப்பேட்டை ’ யில் அவர் கொடுத்திருக்கும் இசை பெரிய சிம்பொனி மாதிரி இருக்கிறது. மேற்கத்திய இசையில் ரொம்பவும் ஆழமான ரசனை உள்ளவனால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அதே போல ஏ.ஆர்.ரஹ்மான் ‘ குரு ’ படத்திற்குப் போட்டிருப்பதும் உயர்தரமான இசை என்று சொல்ல முடியும். நான் எழுதிய இசைக் கட்டுரைகள் ‘ கலகம் காதல் இசை ’ என்று தொகுக்கப்பட்டு சமீபத்தில் ஒரு புத்தகமாக வந்திருக்கிறது. இதுதான் எனக்கும் இசைக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் சான்று. இளையராஜா பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவருக்கும் மேலாகச் சென்று இசையில் சாதனை செய்தவர்கள் சுமாராக பதினைந்து பேரையும் மறந்துவிட்டு , மறுத்துவிட்டு இவர் இருப்பது நன்றி கெட்டதனம். ஒருவன் தன்னை இசைஞானி என்று கூப்பிட்டால் , எனக்கு முன்னால் பதினைந்து ஞானிகள் இருந்திருக்கிறார்கள் என்று தன்னடக்கத்துடன் அவர் சொல்லியிருக்க வேண்டும்.

இளையராஜா கொடுக்கின்ற பேட்டிகளில் எல்லாம் தனக்குத் தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைத்து உளறிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் நான் அவரை விமர்சிக்க வேண்டி இருக்கிறது. ‘ பாப் மார்லி ’ யை குப்பை என்கிறார். கத்தாரை குப்பை என்கிறார். ஆந்திராவில் சென்று கத்தாரை குப்பையென்று சொல்லிப் பாருங்கள். அப்புறம் என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

தீராநதி: யுவன் ஷங்கர் ராஜாவின் இசை குறித்து பேசியதால் கேட்கிறேன். இளையராஜாவின் இசையைக் கேட்கும்போது அதில் ஒரு மன அமைதியின்மை நிலவுகிறது. அதே யுவன் ஷங்கர்ராஜாவின் இசையைக் கேட்டால் ஒரு விளிம்பு நிலை கலாச்சாரத் தன்மையுடன் கூடிய ஒரு கொண்டாட்டம் பீறிடுகிறது. இது சரியான ஒப்பீடா ?

சாரு: யுவனைப் பொறுத்த அளவில் நீங்கள் சொல்வதை நானும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் , இளையராஜாவின் இசையில் நீங்கள் சொல்வது போன்ற ஒரு குணாம்சம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதை நான் உணர்ந்திருந்தால் அவரைக் கொண்டாடி இருப்பேன். எனக்கு அவரிடம் அப்படி ஒரு குணாம்சமே இருப்பதாகத் தோன்றவில்லை. ஒருவேளை அதற்குக் காரணம் _ என் எரிச்சல் சார்ந்ததாகக்கூட இருக்கலாம். அவர் செய்கின்ற பல ‘ லந்து ’ களால் என் புலனுணர்வுக்கு அது எட்டாமலேகூட போய் இருக்கலாம். ஒருவேளை உங்களுடைய அனுமானம் சரியாக இருந்தால் , அதற்கு அவரின் ஆன்மிகத் தேடல் ஒரு காரணமாக இருக்கலாம். ஆன்மிகத் தேடல் இருந்தாலே அது ஒருவித அமைதியையும் , அமைதியின்மையையும் ஒருங்கே ஏற்படுத்திவிடும்.

தீராநதி: உங்களுடைய எழுத்துகளில் சொல்லத்தகுந்த அறமாய் ஒரு மெலிதான திராவிட அரசியல் தன்மை இழையிடுவதாகத் தெரிகிறது. அந்தக் குரல் ஒலித்துக் கொண்டேயும் இருக்கிறது. திராவிட அரசியலின் தொடர்ச்சியில் வரும் ஒரு எழுத்தாளனாக உங்களை நீங்கள் உணருகிறீர்களா ?

சாரு: இதற்கு முன்னால் அப்படி இருந்த ஒரு எழுத்தாளரை உங்களால் சொல்ல முடியுமா ?

தீராநதி: நிறைய இருக்கிறார்கள். குறிப்பாக பிரமிள் ?

சாரு: இவ்வளவு அப்ஜெக்டிவ்வாக நான் இதுவரை யோசித்ததில்லை. ஆனால் , எனக்கும் திராவிட அரசியலுக்குமான ஒரு தொடர்பு முப்பது வருடமாக இருந்து கொண்டேதான் இருக்கிறது. இல்லை என்றால் கருணாநிதிக்கு ஒரு கடிதம் என்னால் எழுதியிருக்க முடியாது. திராவிட இயக்கத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் வைத்தே ஒரு நாவல் எழுதும் எண்ணம் எனக்கிருக்கிறது. அதை ஏன் யாரும் செய்யவில்லை என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கிறது. உலக அளவில் இப்படி எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்ட ஓர் இயக்கமாக சீலேவில் பெரோன் மூமெண்ட்டை மட்டுமே சொல்லலாம். அதற்கடுத்தது திராவிட இயக்கம்.

வேறு எங்கேயும் இப்படிப்பட்ட தீவிரமான ஒரு வளர்ச்சி குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே ஒரு வீழ்ச்சி இவ்வளவு டிராமாடிக்காக நடந்ததில்லை. சிவாஜி கணேசனும் கருணாநிதியும் ஒரே மேடையில் கட்டித் தழுவிக் கொண்ட காட்சியை உங்களால் மறக்கமுடியுமா ? எப்படிப்பட்ட நாடகத் தன்மை கொண்ட காட்சி அது! இவற்றையெல்லாம் தொடர்ந்து மனதில் நான் பதிவு செய்து கொண்டே இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் அத்தன்மை என்னிடமும் இருக்கத்தான் செய்யும்.

நன்றி – குமுதம் தீராநதி

பிரிவுகள்:Uncategorized

‘ஷேக்ஸ்பியர் சங்கர பாஷ்யம் படித்திருப்பாரா?’

‘ஷேக்ஸ்பியர் சங்கர பாஷ்யம் படித்திருப்பாரா?’
இந்திரா பார்த்தசாரதி

அண்மையில் ஆங்கிலத்தில் ஓர் இலக்கிய விமர்சனக் கட்டுரை படித்தேன். ஹாம்லெட் அலுத்துக் கொள்வது போல வார்த்தைகள்! வார்த்தைகள்! வார்த்தைகள்!‘. ஆங்கிலத்தில் இதை விளக்க ஓர் அருமையான சொல் உண்டு. ‘Phoney’. அதாவது, கிட்டத்தட்ட சொல்லப் போனால், ‘பாசாங்குத்தனம்என்று சொல்லலாம். சென்னைப் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளுக்கு முன் ஏராளமான பொருட்செலவில் வெளியிட்டிருக்கும், ‘ஆங்கிலதமிழ் சொல்லகராதியில் என்ன பொருள் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தேன். அந்த அகராதியில் அந்தச் சொல்லே இல்லை! தமிழ்ப் பண்பட்டில், ‘பாசாங்குத்தனம்இல்லை என்று அர்த்தம் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். காரணம் அதைத் தொகுத்தவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர். அவரே ஓரிடத்தில் கூறியிருக்கிறார்: பண்பாட்டுக்கு ஒவ்வாச் சொற்களை விடுத்து, பழந்தமிழ் அருஞ்சொற்களைத் தமிழின் அன்றாட உரையாடல்களில் பெய்து எம்தம் தமிழர் கழற வேண்டுமென்பது என் வேணவா‘. ‘Phoney’ என்றால் இப்பொழுது புரிகிறதா?

தில்லி அறிவுஜீவிப் பாசாங்குத்தனத்தின் தலைநகரம். பல ஆண்டுகளுக்கு முன், அமெரிக்கப் பல்கலைக்கழகக் கூடாரங்களில் மிக உயர்வாகப் பேசப்பட்ட

I.A.Richards என்பவரின் தலை மாணாக்கர் ஒருவர் கீட்ஸ்பற்றி நிகழ்த்திய சொற்பொழிவுக்குப் போயிருந்தேன். ‘A thing of Beauty is a joy for ever’ என்ற கீட்ஸின் வரியை அவர் கணித ரூபமாக நிறுவிக் காட்டினார்! தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு இதில் ஆச்சரியமொன்றுமில்லை! திருக்குறளின் பழைய பதிப்பொன்றுக்கு முன்னுரை எழுதிய சாத்தூர் வழக்கறிஞர் டி.எஸ்.கந்தசாமி முதலியர் எம்.. அவர்கள் செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றலரிதுஎன்ற குறளைக் கணித வழி நிறுவியிருக்கிறார். நஷ்டம், இலக்கியம். லாபம், கணிதம்!

தில்லிப் பல்கலைக் கழக இலக்கிய ஆய்வுக் கூட்டத்தில் பல பேராசிரியர்களும், விமர்சகர்களும் கலந்து கொள்வதுண்டு. ஒரு கூட்டத்தில், பாசாங்குத்தனம் ஏதுமில்லாத, தாம் படித்த அநுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஒரு நியாயமான ஆசையுடன், ஓர் இளைஞர் கட்டுரை படித்தார். கூட்டத்துக்கு வந்திருந்தவர்களோ பாசாங்குத்தனத்தில் ஜாம்பவான்கள். புலிகளுக்கு நடுவே அகப்பட்ட ஆட்டுக் குட்டியைப் போல் அவர் எனக்குத் தோற்றமளித்தார்.

அவர் தம் கட்டுரையில் அந்த நூல் அவருக்கு ஏன் பிடித்திருந்தது என்று கூறினாரே தவிர, இலக்கிய விமர்சன அளவுகோல்களை அள்ளி வீசவில்லை.

அவர் கட்டுரையைப் படித்து முடித்ததும், சிறிது நேரம் அங்குப் பொருள் பொதிந்த அமைதி நிலவியது. கட்டுரை படித்தவர், ஒவ்வொரு பேராசிரியர் முகத்தையும் கூர்ந்து நோக்கினார்.

சில நிமிஷங்களுக்குப் பிறகு, ஒரு பேராசிரியர் தம் சோடாபாட்டில் மூக்குக் கண்ணாடியை கைகுட்டையினால் துடைத்துக் கொண்டே அடங்கிய குரலில்

(அடங்கிய குரல் ஆழ்ந்த சிந்தனைக்கு அடையாளம்! ) சொன்னார்: நல்ல கட்டுரைதான். ஆனால் நாவலின் ‘architectonics’ எப்படி வந்திருக்கின்றது என்பதைப் பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே?’

கட்டுரை படித்தவர் இந்தச் சொல்லைக் கேள்விப்பட்டதேயில்லை என்று தோன்றிற்று.

மெத்தப் படித்தவர்களிடையே தம் அறியாமையைக் காட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவோ என்னவோ, மிகவும் நன்றாக வந்திருக்கிறதுஎன்று பொதுப் படையாகச் சொன்னார்.

நன்றாக வந்திருக்கிறதுஎன்றால்? எனக்குப் புரியவில்லையே நீங்கள் சொல்வது.என்று கூறிக்கொண்டே, கண்ணாடியைப் போட்டவாறு மற்றவர்களை ஒரு புன்சிரிப்புடன் நோக்கினார் சோடாபாட்டில்.

கட்டுரை வாசித்தவருக்குச் சங்கடமாகப் போயிற்று. அதாவதுமற்றைய நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்நூலில்..என்று ஆரம்பித்தவருக்கு, சோடாபாட்டில் எந்த வார்த்தையை விமர்சன ஆயுதமாகப் பிரயோகித்தார் என்பது மறந்துவிட்டது. சில விநாடிகள் தடுமாற்றம்..பிறகு தொடர்ந்தார். ‘இந்நூலில் நீங்கள் சொன்னது மிகவும் சிறப்பாக வந்திருக்கின்றது..

சோடாபாட்டிலைப் பிடிக்காத மற்றொரு ஜாம்பவான், கட்டுரை வாசித்தவருக்கு ஆதரவு தரும் வகையில், ‘ மன்னிக்கவும், பிராட்லி தெளிவாகவே சொல்கிறான், ‘architectonics’ காவியங்களுக்குத்தாம், மற்றைய இலக்கிய வடிவங்களுக்கு இல்லை. இது நாவல். பேராசிரியர் மறந்துவிட்டார் போலிருக்கிறது.

நாவல் என்பது காவியத்தின் வாரிசுதானே? இங்கிலாந்தில் தொழிற்புரட்சிக்குப் பிறகு,

பிரபுத்வ சமூக அமைப்பு..என்பதற்குள்,’ இது மார்க்ஸிய சித்தாந்தம். Please spare literature..’ என்றார் இன்னொருவர். இதை ஒட்டிச் சூடான விவாதம் நிகழத் தொடங்கியது.

கட்டுரை வாசித்தவர் எழுந்து போய்விட்டார் என்பதை யாரும் கவனிக்கவில்லை!

தில்லியில் எனக்கு ஆங்கிலப் பேராசிரிய நண்பர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டுக்குப் போனால் அவர் படிக்கும் அறையில் ஒரு பெரிய அட்டவணை தொங்கும். உலகத்து இலக்கிய விற்பன்னர்கள், எந்த மொழியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய பிறந்த தேதி, இறந்த தேதி எல்லாம் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். எந்த இலக்கியக் கர்த்தாவுடைய பிறந்த தேதி என்று வருகின்றதோ அன்று தில்லிச் செய்திப் பத்திரிகையின் வார இதழில் அவரைப் பற்றி என் நண்பர் எழுதிய கட்டுரை வந்துவிடும்.இன்று இத்தாலியப் பெரும்புலவர் லுடோவிகோ அரியோஸ்டோவின் ஜென்மதினம். கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டில் அவர் புரிந்த இலக்கிய சாதனைகள்என்கிற மாதிரிக் கட்டுரைகள்! ஸ்பானிஷ் புலவர்கள், ஸ்வீடிஷ் நாவலாசிரியர்கள் யாரும் அவர் வீசும் இலக்கிய விமர்சன வலையினின்றும் தப்ப முடியாது!

இன்னொருவகையான பேராசிரியர்களுமுண்டு. அவர்களுக்குப் பேச்சைக் காட்டிலும் மௌனந்தான் வலிமையான ஆயுதம். மிகச்சிறந்த அறிவாளிஎன்று ஒரு பரவலானஅபிப்பிராயத்தைத் தம்மைப் பற்றி உருவாக்கியிருப்பார். இதுவே அவர் இலக்கிய மூலதனம். ஓரிரண்டு வார்த்தைகள்தாம் அவ்வப்பொழுது உதிர்ப்பார். திருமூலர் திருவாக்காக மற்றவர்கள் அதற்கு வியாக்கியானம் காண்பார்கள்.

ஷேக்ஸ்பியரைப் பற்றி நிகழ்ந்த ஒரு செமினாரில் இவரை நான் சந்தித்தேன். அப்பொழுதெல்லாம் புகைபிடிப்பது தடை செய்யப்படவில்லை. நண்பர் பீடிதான் புகைப்பார். அவர் அறையில் நுழைந்ததும், அவருடைய மகத்தான சன்னிதானத்தில் மௌனந்தான் செங்கோலோச்சியது. புன்முறுவலுடன் அவர் கடைசி வரிசையில் ஓரமாக உட்கார்ந்தார்.

கட்டுரை வாசித்தவர் எக்ஸிஸ்டென்ஷியலிஸம்‘, ‘பினாமிலிஸம்‘, ‘சூப்பர் ரியலிட்டி‘,

போன்ற வார்த்தைகளைப் போட்டு ( அந்தக் காலக்கட்டத்தில், ‘ஸ்டரக்சரிலிஸம்‘, ‘போஸ்ட் மாடர்னிஸம்போன்ற வார்த்தைகள் வழக்காற்றில் இல்லை) கூட்டத்துக்கு வந்தவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார்.

கட்டுரை வாசித்து முடித்தவுடன் கட்டுரை ஆசிரியர் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த நண்பரை ஆவலுடன் நோக்கினார். கூட்டத்துக்கு வந்திருந்த எல்லாருடைய பார்வையும் ஒட்டு மொத்தமாக அவர் திசையில் நிலைகுத்தி நின்றது. விமர்சனப் பிதாமகர் அல்லவா?

அவர் நிதானமாக பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு, சிறிது நேரம் பேசாமலிருந்தார்.

நண்பர் பெயரைச் சொல்லி அழைத்து அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்று கூட்டத்துத் தலைவர் கேட்டார்.

‘Oh! Me!’ என்று ஆச்சரியப்பட்டவரைப் போல் கேட்டார் பிதாமகர்.

‘Yes! You!’ என்றார் கூட்டத்துத் தலைவர்..

மௌனம். உலகம் ஸ்தம்பித்து நிற்பது போலிருந்தது.

ஒரே ஒரு சந்தேகந்தான்.. For this relief much thanks என்று ஹாம்லெட்டில்வருகின்றதே, இதற்கும் மாயாதத்துவத்துக்கும் சம்பந்தம் இருக்கலாமோ?’

சிறிது நேரம் மௌனம்.

இருக்கலாம்என்றார் கட்டுரை வாசித்தவர்.

மாறி மாறிக் காவல் செய்யும் இரண்டு அரச சேவகர்களில் ஒருவன், இன்னொருவனை வேலையினின்றும் விடுவிக்கும்போது, இவ்வாறு சொல்வதாக, ‘ஹாம்லெட்டில் வருகிறது.இதற்கும் மாயா தத்துவத்துக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குப் புரியவில்லை.

இதற்கும் மாயா தத்துவத்துக்கும் என்ன சம்பந்தம்? என்று நான் கேட்டேன்.

பிதாமகர் பதில் கூறாமல் புன்னகை செய்தார்.

ஏன் இல்லை?காண்பதெல்லாம் மாயை, இது நம்மைப் பந்தத்துக்கு உள்ளாக்குகிறது.

ஆகவே இதினின்றும் ஓய்வு பெற வேண்டுமென்பதுதானே, மெய்மைத் தத்துவம்? எது மாயை? ‘ஹாம்லெட்டின் இறந்த தந்தையின் ஆவியா? அல்லது, இந்தத் தோற்றத்தைக் காணப் போகும் காவலர்களா?’ என்று மற்றொரு பேராசிரியர் பேசிக் கொண்டே போனார்.

அல்லது நாடகத்தைப் பார்க்க வந்தவர்களா?’ என்றார் ஒருவர். அவர் ஸீரியஸாசொல்லுகின்றாரா அல்லது கிண்டல் செய்கிறாரா என்று யாருக்கும் புரியவில்லை.

‘For this relief’ என்பதில் ‘r’ பெரிய எழுத்தில் போட்டிருக்க வேண்டும்என்றார் ஒருவர்.

பிதாமகர் சொன்னார்: அப்படியொரு பாட பேதம் உண்டு. 1698இல் ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் தேதி வேல்ஸில் கிடைத்த ஒரு பிரதியில் இப்படி இருக்கிறது..

ஷேக்ஸ்பியர் சங்கர பாஷ்யம் படித்திருப்பாரோ?’

இதை அடுத்த பிராஜக்ட்டாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது ஷேக்ஸ்பியர் பிறந்த, ‘ஸ்ட்ராட்ஃபோர்ட் அப்பான் ஏவனில் நடந்தால்தான் சிறப்பாக இருக்கும். இப்பொழுதே பல்கலைகழக மான்யக் குழுவுக்கு விண்ணப்பிகலாம்என்றார் கூட்டத்துத் தலைவர்.

அனைவரும் ஆமோதிக்கக் கூட்டம் கலைந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பிரிவுகள்:Uncategorized