தொகுப்பு

Archive for திசெம்பர், 2009

தீராநதியிலிருந்து எம்.ஜி.சுரேஷின் நேர்காணல்

போஸ்ட் மாடர்னிஸம் என்று அழைக்கப்படும் பின்நவீனத்துவத்திற்கு இப்போது வயது முப்பத்தெட்டு. 1966_ம் ஆண்டு ழாக் டெரிடா (Jacques derrida) என்ற பிரெஞ்சு சிந்தனையாளர் நிர் _ நிர்மாணம் (Deconstruction) என்ற சொற்பிர யோகத்தை முதன் முதலாக கையாண்டதில்தான் பின்நவீனம் பிறந்தது. அதற்கு, முன்னமே ஐம்பது வருஷங்களுக்கு முன் ஜான் வாட்கின்ஸ் சாப்மேன், ருடோல்ஃப் பான்விட்ஸ் போன்றவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த��
ம் ‘போமோ’ அங்கீகரிக்கப்பட்ட பிறப்பென்பது 1966_ல்தான் தொடங்கியது. இதையட்டிய கோட்பாடுகளை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்களில் எம்.ஜி.சுரேஷ் முக்கியமானவர். பின்நவீனக் கோட்பாடுகளை முணுமுணுக்கும் நபர்கள் கூடவே தவிர்க்க முடியாமல் உச்சரிக்கும் பெயரல்ல; ஒரு சொல் எம்.ஜி.சுரேஷ். ஐந்து நாவல்கள், மூன்று குறுநாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுதிகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள். ‘இஸங்கள் ஆயிரம்’ ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ ஆகிய இரண்டு கோட்பாட்டு அறிமுக நூல்கள், என்று பல படைப்புகளை தமிழுக்குத் தந்திருப்பவர். zero degree writing வகைமையைக்கொண்டு இவர் எழுதிய சமீபத்திய நாவல் ‘37’. இவரை தசரதபுரத்திலுள்ள அவரது வீட்டில் தீராநதிக்காகச் சந்தித்தோம். அவரது எழுத்து நடையைப் போலவே பேச்சும் எளிமையாக அமைந்தது.

தீராநதி : கார்க்கி இதழில்தான் உங்களுடைய முதல் கதை பிரசுரம் கண்டிருக்கிறது. அது கம்யூனிஸ தத்துவத்தை மையமாக வைத்து இயங்கி வந்த ஒரு பத்திரிகை. அதன் ஆசிரியர் இளவேனில் கூட ஒரு கம்யூனிஸ்ட். ஆக, நீங்களும் அப்போது கம்யூனிஸ்ட்டாக இருந்தீர்களா?
எம்.ஜி.சுரேஷ்: இல்ல. நான் கம்யூனிஸ்ட்டா இல்ல. முதல்ல நான் ஒரு வாசகரா இருந்தேன். கையில கிடைக்குற எதுவானாலும் படிப்பேன். குமுதம், விகடன், இப்படி எது எது கிடைக்குதோ அதயெல்லாம் படிப்பேன். ஒரு வேர்க்கடலை பொட்டலம் வாங்கினா சாப்பிட்டு முடிஞ்ச பின்னால அந்த பேப்பரை படிப்பேன். அது நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த பேப்பர் எங்கிருந்து கிழிக்கப்பட்டதுன்னு தேடிப் போவேன். குமுதம், விகடன்னு தொடர்ந்து படிச்சிக்கிட்டு இருக்குறப்ப இவையெல்லாம் ஒரு கட்டத்துல போதாம போயிடுச்சு. ஏதோ நம்மள ஒரே மாதிரியே ஏமாத்துது இந்தக் கதைகள்லாம்னு தோண ஆரம்பிச்சது. இத கடந்து நாம போகணும்னு, நினைச்சேன். அன்றாட வாழ்க்கையில ஏதோ ஒரு விஷயத்தை நாம் எதிர்கொள்கிறோம். முதல்ல வெறுக்கிறோம். அப்புறம் விரும்புறோம். அடுத்ததா அதைக் கடந்து போறோம். அடுத்த கட்டமா கடந்து போகணும்_ அடுத்த அடுத்த லையனுக்கு கடந்து போகணும். இலக்கியத்துலயும் அதே மாதிரிதான். முதல்ல தேடித் தேடி படிக்க ஆரம்பிப்போம். அதுக்கப்புறம் நமக்குத் தெரிஞ்சு போகும், சுஜாதான்னா இந்த மாதிரி எழுதுவாரு. இந்த இந்த வார்த்தைகளை இங்க இங்க போடுவாரு. தி. ஜானகிராமன்னா இந்த மாதிரி எழுதுவாரு. ஜெயகாந்தன்னா இப்படித்தான் எழுதுவாரு. இப்படி எல்லாமே பேட்டன் ஆயிடுது இல்லையா? ‘பெரடைம்’ (Paradigm) மாதிரி. ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு சட்டகம் இருக்கு. இதைத்தாண்டி வேற ஏதாவது நமக்கான எழுத்து இருக்கான்னு தேட ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்துலதான் சோவியத் புத்தகங்கள் எனக்குக் கிடைச்சது. ரஷ்யன் ரைட்டர் தாஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய், மார்க்ஸிம் கார்க்கி, துர்க்கனீவ், குப்ரின் இதுபோல படிக்க ஆரம்பிச்சப்போ சரி, இதுதான் நமக்கான எழுத்துன்னு நினைச்சு நிறைய வாசிக்க ஆரம்பிச்சேன். தமிழ்லயும் நிறைய வாசிக்க ஆரம்பிச்சேன். தமிழ்ல சுஜாதா மாதிரியான எழுத்துக்கள படிச்சிகிட்டு இருந்தப்ப, ஜெயகாந்தன் கதைகள் வித்தியாசமா இருந்தது. அவர் ரைட்டிங் ஸ்டைல் வேற மாதிரி இருந்தது. அப்போ ஜெயகாந்தன் எழுத்து நமக்கான எழுத்துன்னு நினைச்சு தொடர்ந்து படிக்கிறேன். அந்த காலிபர்ல கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி, நகுலன், இந்த மாதிரி வாசிச்சேன். அதே போலதான் பத்திரிகைகள்லயும் கணையாழி, கசடதபற, தீபம்னு இப்படி இலக்கிய பத்திரிகையா வாசிச்சேன். அப்போதான் ‘கார்க்கி’ பத்திரிகையையும் வாசிச்சேன். இளவேனிலோட புரோஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது பைபிள் மாதிரியான நடை. பைபிளையும் நான் படிச்சிருக்கேன். பைபிள் அற்றதைக் கூட பைபிள் நடையில எழுதலாம் போலிருக்கேன்னு தெரிய வருது. அதுக்கப்புறம்தான் இளவேனிலோட நட்பு எனக்குக் கிடைச்சது. அவரோடு நெருங்கிப் பழகினேன். மத்தபடி பொலிடிக்கல் லைன்ல கம்யூனிஸ்ட்டா என்னை நான் அடையாளப்படுத்திக்கல. ஆனா, கம்யூனிஸ்ட் புக்ஸ்செல்லாம் படிச்சிருக்கேன். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ட்ராஸ்கி இதுமாதிரி கம்யூனிஸ்ட் லிட்ரேச்சர் நிறைய படிச்சிருக்கேன். ஆனாலும் அதுல எதனாலயோ என்னால ஒன்ற முடியல. ஏதோ ஷீtலீமீக்ஷீ ஒரு மற்றமையா உணர்ந்தேன். மனிதன் குறையுடையவன், பிரபஞ்சம் குறையுடையது. இப்படி எந்த ஒரு தியரியிலயும் ஒரு குறை இருக்குற மாதிரி ஓர் எண்ணம் எனக்கு. ஒரு விஷயத்துல குறையிருக்குறதாலதான் நாம் வேற ஒண்ணை தேடிப் போறோம். ஒரே விஷயத்துக்குள்ளேயே நாம இருக்குறதில்லையே? ஸயன்ஸ், ஃபிலாஸ`ஃபி, லிட்ரேச்சர், இப்படி நாம எதுலயும் பிடிக்கலையின்னா அடுத்த விஷயத்துக்குப் போயிடுறோம். இது எல்லாத் துறைக்கும் பொருந்தும்_ விஞ்ஞானத்துக்கும் பொருந்தும். ஜாமண்ட்ரி தியரி, யூக்ளிட் இப்படி… யூக்ளிட் சமதளத்துக்கான தியரி. பூமி வந்து உருண்டையானது. ஆனா, பூமிக்கும் யூக்ளிட்டை வெச்சித்தான் பார்த்துக்கிட்டு இருக்கோம். சின்ன அளவா இருந்தா யூக்ளிட் தியரி சரியா இருக்கும். பெரிய அளவா இருக்கும்போது அது தப்பாயிடும்னு தெரிய வருது இல்லையா? ஒரு தியரி, கொஞ்ச நாட்கள்லேயே செல்லாம போயிடுது. அதே மாதிரிதான் மார்க்ஸியத்துலயும் பிரச்னைகள் இருக்கு.

தீராநதி: இதெல்லாம் தொடர்ந்து படித்துக்கொண்டு வரும்போது பிடிபடுகிற விஷயங்கள். ஆனால் முதலில் இதை நீங்கள் உணர வாய்ப்புகள் கம்மி இல்லையா? அச்சூழலுக்குள்ளாகப் பொருந்தி இருந்தும் உங்களை கம்யூனிஸ்ட் ஆகவிடாமல் தடுத்தது எதுவாக இருக்கும்?

எம்.ஜி.சுரேஷ்: அப்போ அந்தச் சமயத்துல அந்தப் பிரச்னைகள் எனக்குத் தெரியாது. போஸ்ட் மாடர்னிஸம் புக்ஸ்செல்லாம் படிக்கும்போது, இந்த விஷயங்கள்லாம் பின்னாடி நமக்குத் தெரிய வந்தது. அப்புறம் தியரிட்டிக்கலா மார்க்ஸியம் என்பது சிறந்ததுன்னு வெச்சிக்கோங்க. அதுக்கான ஆல்டர்நேடிவ் கிடையாதுன்னே சொல்லலாம்.

ஒடுக்கப்படும் மக்கள் போர்க்குணம் பெறுவதற்கு, ஒன்றுகூடி போராடுறதுக்கு… இந்த மாதிரி விஷயங்களுக்கு மார்க்ஸியம் தேவையானதுதான். அப்புறம் அது முன் வைக்குற சோஷலிஸ விடுதலைக்கும், பொருளாதார சமத்துவத்துக்கும் அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் சம்பந்தமா வர்றதுக்கெல்லாமே கரெக்ட்தான். ஆனா, அதுக்கப்புறம் இம்பிலிமெண்டேஷன்னு வர்றப்ப சார்த்தர் சொல்வாரு ‘‘எல்லா கோட்பாடுகளும் நடைமுறைப்படுத்தும் போது நிறுவனமயமாகி விடுகிறது. நிறுவனம் ஆகுறப்ப அதனுடைய அடிப்படை தப்பாயிடுது’’ன்னு சொல்வாரு.

தீராநதி: சார்த்தர் corrupt ஆகிவிடுகிறது என்றுதானே சொன்னார்?

எம்.ஜி.சுரேஷ்: ஆமாம். corrupt ஆகிடுதுன்னுதான் சொல்றார்.அஃப்கோர்ஸ் அதுமாதிரியேதானே ஆச்சு. சோவியத் யூனியன்ல மார்க்ஸியம் முதல்ல வந்தப்ப ரொம்ப எழுச்சியோடவே இருந்தாங்க. பின்னாடி அது நீஷீக்ஷீக்ஷீuஜீt ஆயிடுச்சு இல்லையா?. அவங்களும் பிரிவிலெட்ஜ்டு சொஸைட்டியாதானே இருந்தாங்க. பெரிய பெரிய கார்ல போனாங்க. வசதியும், ஆடம்பரமுமா வாழ ஆரம்பிச்சாங்க. இவங்க செஞ்ச மாதிரியேதான் வேற கோணத்துல முசோலினியும், ஹிட்லரும் செஞ்சாங்க. இவங்களும் தன்னை மக்களின் பிரதிநிதியா அறிவிச்சிகிட்டுதான் தீமைகள் செய்ய ஆரம்பிச்சாங்க. மக்களை சர்வாதிகாரம்ங்குற பேர்ல ஒடுக்குனாங்க. ஏதோ தனிப்பட்ட விரோதத்தால இது நடக்கல. மக்களின் நன்மைக்குன்னு சொல்லித்தான் நடத்துனாங்க.

சோவியத் யூனியன்லயும் ‘சோவியத் ஒர்க்கிங் கிளாஸ்’ங்குற பேர்ல சில தீமைகள் நடந்தது. மக்களின் மீதான ஒடுக்குமுறை நடந்தது. அங்க நாஜி வதை முகாம்ல செஞ்ச மாதிரி சைபீரிய வதைமுகாம்ல இவங்க செஞ்சாங்க. கொள்கைகள் வேறு வேறாக இருந்தாலும் தீமைகள் ஒண்ணுபோலதான் இருந்தன. அதனாலதான் என்னை நான் பொலிட்டிக்கலா கம்யூனிஸ்டுன்னு அடையாளப்படுத்திக்கல.

தீராநதி : கேள்வி கம்யூனிஸ நண்பர்களுடன் பழக்கம் இருந்த காலத்திலும் நீங்கள் ஏன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்பதுதான். பிற்காலத்தில்தான் ‘போமோ’ எழுத்துக்களைப் படித்துவிட்டு இவற்றையெல்லாம் நிராகரிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஆனால் இளவேனிலுடன் தொடர்பு இருந்த நேரத்தில் உங்களிடம் மார்க்ஸியத்தை எதிர்ப்பதற்கும், இது சரியானதல்ல என்று புறம் தள்ளுவதற்கும் தர்க்க ரீதியாகவோ, அல்லது tமீஜ்tடாகவோ உங்களிடம் எந்த மெட்டீரியலும் இல்லை. இருந்தும் இடதுசாரியாக அடையாளப்படத் தயங்கி இருக்கிறீர்கள். அது ஏன்?

எம்.ஜி.சுரேஷ்: முதல்ல இடதுசாரிங்குறது வேற, கம்யூனிஸ்ட்டுங்குறது வேற. கம்யூனிஸ்ட் இல்லாதவர்களும் இடதுசாரியாக இருக்கலாம். கியூபாவுல முதல்ல அவங்க புரட்சி பண்ணப்போ அவங்கயெல்லாம் கம்யூனிஸ்ட்டே கிடையாது. சேகுவேரா, காஸ்ட்ரோ கம்யூனிஸ்ட் கிடையாது. ‘சே’வும் அவர் நண்பர்களும் மோட்டார் பைக்கை எடுத்துகிட்டு லத்தின் அமெரிக்கா முழுக்க ஒரு இடம் விடாம சுத்துனாங்க. ஊர் ஊரா, கிராமம் கிராமமா போய் மக்கள் படுகிற அந்த அவலங்களையெல்லாம் நேர்ல பார்த்தாங்க. அதனால கொதித்தெழுந்து புரட்சி செஞ்சாங்க. பின்னாடி அவங்க ஆட்சிக்கு வந்த பிறகுதான் மார்க்ஸ், ஏங்கல்ஸ் எல்லாம் படிக்க ஆரம்பிச்சாங்க. அதுமாதிரி பார்த்தா நான் முதல்ல இடதுசாரி சிந்தனையாளனாத்தான் இருந்தேன். இப்பவும் இருக்கேன்.

தீராநதி: சரி, நீங்கள் சொல்வது மாதிரி இடது சாரித்தன்மை கம்யூனிஸ்ட் இரண்டும் வேறு வேறுதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் நீங்க ஏன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை?

எம்.ஜி.சுரேஷ்: நான் ஆர்கனைசேஷன் சார்ந்த இடதுசாரியா இல்லையான்னு வர்றப்போ நான் சுத்தமான மார்க்ஸிஸ்ட்டா இல்லை. அதுக்கும்மேல் போய் சொன்னா நான் நூறு சதவீதம் மார்க்ஸிஸ்ட்டா இருக்கல.

தீராநதி: சார்த்தர் சொல்லும் corrupted என்ற வார்த்தையை எந்த விஷயத்திலேயும் நம் சௌகர்யத்திற்கு ஏற்ப போட்டுப் பார்த்துக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு தத்துவத்தின் மீதும் போட்டுப் பார்த்துக் கொண்டே போனால் ஒரு உயரிய லட்சியத்திற்காக இதைச் செய்கிறோம் என்பதை எப்படி நாம் அடைய முடியும்? லட்சியம் என்பதே தேவையில்லையா?

எம்.ஜி.சுரேஷ்: போஸ்ட் மாடர்னிஸம் என்ன சொல்லுதுன்னா ஒவ்வொன்னுக்கும் ஒரு சட்டகம் (Paradigm)இருக்குன்னு சொல்லுது. மார்க்ஸிஸம் தொழிலாளி, முதலாளின்னு ரெண்டா நம்மள பிரிக்குது. இரண்டாயிர வருஷ கலை, இலக்கிய வரலாற்றை அனலைஸ் செஞ்சிட்டு அதையே போஸ்ட் மாடர்னிஸம் மையம், விளிம்புன்னு ரெண்டாப் பிரிக்குது. மார்க்ஸிஸ்ட் சொல்ற தொழிலாளி வர்க்கத்தை எடுத்துக்கிட்டாகூட அதுலயும் மையம், விளிம்புன்னு இருக்கு. ஜாதின்னு எடுத்துக்கிட்டாலும் தலித்துக்குள்ளயே கூட மையம், விளிம்புன்னு இருக்கு. அதனால விஷயத்தை இப்படித் துல்லியமா பிரிச்சுக்கச் சொல்லுது போஸ்ட் மாடர்னிஸம். மையத்துக்கும் விளிம்புக்குமான ஒரு யுத்தம் உள்ளுக்குள்ளேயே நடந்துகிட்டே இருக்கு. அப்ப மையம், விளிம்புங்குற விஷயம் கலைக்கப்படணும்னு சொல்லுது. அப்பதான் இந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வரும்னு சொல்லுது.

தீராநதி: மையத்தையும், விளிம்பையும் கலைப்பதால் மீண்டும் அது ஒரு மையமாகத்தானே ஆகும்?

எம்.ஜி.சுரேஷ்: அப்படி ஆகக்கூடாது. அது மாதிரியா கலைக்கப்படணும்.

தீராநதி : சபால்டன் என்ற ஒன்றிருக்கிறது. மையம் என்ற ஒன்றிருக்கிறது. சபால்டன், மையம் கலைக்கப்பட்டால் அது மறுபடியும் ஒரு மையமாக அல்லது சபால்டனாக ஏதோ ஒன்றாகத்தானே ஆக முடியும்?

எம்.ஜி.சுரேஷ்: கலைக்குறதுங்கறது ஒரு அஜெண்டா. ஸோ… உடனடியா கலைக்க முடியாது. முதல்ல வந்து அனைவரும் சமம்ங்குற மாதிரி ஒரு விஷயத்தை நம்மகிட்ட சொன்னாங்க. ஆனா, பிராக்டிக்கலா ஒரு பொதுமைப்படுத்துற முயற்சி இது. மார்க்ஸியமோ தொழிலாளி வர்க்கம்னு எல்லா உழைப்பாளர்களையும் ஒரு பொதுமைப்படுத்திடுது. நானும் தொழிலாளி, எனக்குக் கீழாக இருக்குற தலித்தும் ஒரு தொழிலாளின்னா சரியா வராது. ஆக பொதுமைப்படுத்துறங்கறது இங்க பொருந்தி வரல. போஸ்ட் மாடர்னிஸம்; பெண்ணியம், தலித்தியம்ங்கற மாதிரி ஒவ்வொரு விளிம்பு மக்களும் பாதுகாக்கப்படணும்னு சொல்லுது. இது வரைக்கும் நாம நாத்திகம் பேசினோம். இப்ப வந்து சிறு தெய்வ அடையாளங்களை மீட்டெடுக்கணும், நம்மோட தொன்மங்கள் மீட்கப்படணும்னு சொல்றோம். அப்பதான் நாம யாருங்கறது தனியாக காப்பாத்தப்படும். இந்தப் பொதுமை என்ன பண்றதுன்னா புல்டௌசரை போட்டு எல்லா அடையாளத்தையும் இடிச்சிடுது.

தீராநதி: கேள்வி corruptionன்னு சொல்லிக் கொண்டே போனால், உயரிய லட்சியங்களுக்காக செய்வது என்பது இனி சாத்தியமில்லையா?

எம்.ஜி.சுரேஷ்: அது வந்து அப்படி கிடையாது. சொல்லப்போனால் போஸ்ட் மாடர்னிஸமே ஒரு லட்சியத்தோடதான் இருக்கு. மையம், விளிம்பு கூடாதுன்னு சொல்றது கூட லட்சியம் தானே. எல்லோருக்கும் சுதந்திரம்னு நாம சொல்றோம். ஆனா, நமக்கு இங்க சுதந்திரம் இருக்கான்னு பார்த்தா உண்மையான சுதந்திரம் இல்ல. நாம சொல்லிக்கிட்டு இருக்குற சுதந்திரமும், நடப்புல இருக்குற சுதந்திரமும் ஆக்சுவலி ஒண்ணு இல்ல. நாம பிறந்து வளர்றப்பவே நம்மோட சுதந்திரம் தடுக்கப்படுகிறது. நான் ஒரு பொயட் ஆகணும்னு விரும்புறேன். ஆனா, சமூகத்துல என்னுடைய அடையாளம் கவிஞன் கிடையாது. கவர்மெண்ட் ஆபீஸ§ல ஒரு வேலையில இருக்கறது, அதான் என்னுடைய அடையாளம். நான் விரும்புற அடையாளம் அது கிடையாது. அப்படிங்கறப்போ சுதந்திரமே இங்க இல்லியே. நீங்க யார்? என்பதை உண்மையான அடையாளத்தோட பார்க்கப்படணும்னு போஸ்ட் மாடர்னிஸம் சொல்லுது. தனித் தனி அடையாளங்களும் காப்பாத்தப்படணும்னு சொல்றது எவ்வளவு பெரிய லட்சியம்.

தீராநதி : ஏறக்குறைய செக்குரலரிஸம் மாதிரியா இது?

எம்.ஜி.சுரேஷ்: ஆமாம். தனிப்பட்ட உரிமை, மொழி வேணும்னு சொல்லுது. இட்டிஷ் மொழிய எடுத்துக்கோங்க அது வெறும் நூறு இருநூறு பேர் பேசுற மொழிதான். ஆனா சைனீஸ்ஸை எடுத்துக்கிட்டா லட்சம், கோடிக்கணக்குல பேசப்படுற மொழி. அப்ப உலகம் பூராவும் மெஜாரிட்டியான மொழியா இருக்குறதால சீன மொழியே உலக மொழியா இருக்கணும், இன்ட்டிஷ் மொழியெல்லாம் தேவையில்லைன்னு சொல்ல முடியாது. அது இருநூறு பேர் பேசுற மொழியா இருந்தாலும் மரியாதைகள், கௌரவங்கள், அந்த மக்களுக்கு வழங்கப்படணும்னு கேட்குது. அப்படிங்குறப்ப இத வந்து தனித்தனியா பிரிச்சு பார்க்குறதல அர்த்தம் இல்ல. எல்லோருக்கும் இந்த உலகத்துல ஒரு வெளி இருக்கு. இந்த ஸ்பேஸ் காப்பாத்தப்படணும்னு சொல்லுது. இப்ப வெளியான ‘வெயில்’ படத்தை எடுத்துக்கோங்க. பெரும்பாலும் வெற்றி பெறுறவங்களைப் பத்திதான் நாம கவலைப்படுறோம். தோத்துப் போறவனைப் பத்தி நாம கவலைப்படுறதில்ல. தோத்துப் போறவன்தான் மெஜாரிட்டியா இருக்கான். அவனாலயும்தான் இந்த உலகம் இயங்குது. இந்த விஷயத்தை ‘வெயில்’ படம் சொல்லுது. தலித்தியம், பெண்ணியம்னு அவங்க அவங்களுக்கான ஸ்பேஸை உறுதிப்படுத்த வைக்குது. பிரான்ஸில பார்த்தீங்கன்னா, யூதர்களை மதிக்கமாட்டாங்க. ஆப்பிரிக்கர்களை கருப்பர்கள்னு அவமானப்படுத்துவாங்க. இன்னைக்கு அங்க கலவரம் நடக்குது. ஏன்னா அவங்களை மற்றமையா பார்த்தாங்க. டிசுயம், மற்றமைன்னு ரெண்டு விஷயம் இருக்கு. அடிப்படையிலேயே மனிதன் அதிகாரத்தை விரும்புறவனா இருக்கான். நீட்ஷே ‘‘ஒவ்வொரு மனிதனுக்கும் அதிகாரத்திற்கான, ஆற்றலுக்கான விருப்பு இருக்கு’’ன்னு சொல்றார். இது எல்லா மனுஷனுக்கும் பொருந்தும். விரும்புறதை நான் அடைஞ்சே ஆகணும்னு நினைக்கிறான். என்னுடைய விருப்பத்துக்கு உங்க விருப்பம் குறுக்கீடா இருக்கு. உங்க விருப்பம் என் விருப்பத்தைத் தடை செய்யுது. அப்ப நான் என்ன பண்ணணும்னா அதிகாரத்தை கைக் கொள்ளணும். அதிகாரம் என் கைக்கு வந்துடுச்சுன்னா நான் நினைச்சதை அடைஞ்சுடலாம். அதிகாரம்ங்குறது ரெண்டு நுனிகளைக் கொண்டது. ஒன்று செலுத்துபவனின் நுனி; இன்னொன்று பெறுபவனின் நுனி. செலுத்துற எடத்துக்கு நான் வந்துட்டேன்னா என்னுடைய விருப்பம் நிறைவேறும். நீங்க உங்க விருப்பத்தை தியாகம் பண்ணணும். என்கிட்ட அதிகாரம் வந்துடுச்சு, இப்ப நான் உங்களை கண்ட்ரோல் பண்றேன். என் விருப்பத்தை நிறைவேற்றிக்குறேன். நீங்க வந்து ரெகுலரா என்னை எதிர்த்துப் போராடுறீங்க, எதிர்ப்புத் தெரிவிக்கிறீங்க. அப்ப வந்து ரெவில்யூஷன், புரட்சிக்காரன், காந்தி, பகத்சிங் எல்லாமே நீங்கதான். இதுமாதிரி வரலாறு முழுக்க நடந்திருக்கு. அலெக்ஸாண்டர் காலத்துல கூட நடந்திருக்கு. அலெக்ஸாண்டர் ஒரு இனத்தையே அழிச்சான். இது மாதிரி ஏன் நடந்திருக்குன்னா அதிகாரம் ஒரு இடத்துல குவிஞ்சு இருந்ததால நடந்திருக்கு. அப்போ அதிகாரம் ஒரே இடத்துல இல்லாம பகிர்ந்தளிக்கப்பட்டா corruption வராதுன்னு போஸ்ட் மாடர்னிஸம் சொல்லுது.

தீராநதி : அப்போ பின்நவீனத்துவ அரசியலை நடைமுறைப்படுத்தினால் அதிகாரம் யார் கையில் இருக்கும்?

எம்.ஜி.சுரேஷ்: அதிகாரம் நிச்சயம் ஒருத்தர் கையில இருக்காது. அதிகாரம் ஒருத்தர் கையில இருந்தா மிருகம் மாதிரி ஆயிடும். அதிகாரம் வெச்சிருப்பவனும் மிருகம் போலவே ஆயிடுவான். பிரித்தளிக்கும்போது இது நடக்காது. இதைத்தான் சோவியத் யூனியன்ல செஞ்சாங்க. அதிகாரம் முழுக்க முதல்ல மாஸ்கோவுல இருந்தது. பின்னால அதிகாரத்தைப் பகிரணும்னு யூனியனில் கூட்டாக இருந்த நாடுகளை அவங்க பிரிச்சுவிட்டாங்க. ஒரு இடத்துல அதிகாரம் மொத்தமா இல்லாத மாதிரி பண்ணாங்க. அது போலதான்.

தீராநதி : இந்தியாவில் கூட மாநிலங்களுக்கான அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். குறிப்பாக, தமிழகத்தில் தி.மு.க. முன் வைக்கின்ற மாநில சுயாட்சி மாதிரியாக இருக்க வேண்டும் என்கிறீர்களா?

எம்.ஜி.சுரேஷ்: தி.மு.க.வுல மாறன் போன்றவங்க கூடி மாநில சுயாட்சின்னு ஒரு கருத்தை முன் வைச்சாங்க. அது இதோட ஒத்துவரக்கூடிய ஒன்றுதான். மாநில சுயாட்சியின் மூலமா அதிகாரத்தை மத்தியில மையமா வைச்சி இருக்காம பிரிச்சளிக்க முடியும். அப்போ அதிகாரம் பரவலாயிடும். ஸோ… corruption க்கு வேல இல்லாம போயிடும்.

தீராநதி : உலக மயமாக்கலுக்குப் பின்பும், புதிய பொருளாதார கொள்கைக்குப் பின்பும் கம்யூனிஸம் தன் அடுத்த கட்ட நகர்வை செய்ய முடியாமல் திணறி, பின்னடைவு அடையவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. சமீபத்தில் கூட, கொல்கத்தாவில் புத்ததேவ் அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தொடர் உண்ணாவிரதத்தை அறிவித்து 23 நாட்கள் தாண்டி பலதரப்பட்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னால் சமரசத்திற்கு வந்திருக்கிறார். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு டாடா போன்ற நிறுவனங்கள் தேவையாக இருக்கிறதென்றும், அவற்றை தவிர்க்க முடியாதென்றும் கம்யூனிஸ்ட்டுகளே கொல்கத்தாவில் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். பின்நவீனம் குறித்து விவாதிக்கும் இக்காலத்திற்கு கம்யூனிஸத்தின் தேவை இருக்கிறதா?

எம்.ஜி.சுரேஷ்: இப்போ பின்நவீனத்துவவாதிகள்னு சிலரைச் சொல்றோம் இல்லையா, அவங்க எல்லாமே மார்க்ஸிஸ்ட்டா இருந்து வந்தவங்கதான். பின்நவீனவாதிகளில் சிலர் நேரடி கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்திருக்காங்க. அல்லது ஆதரவாளராக இருந்தாங்க. சார்த்தர் கூட ஒரு கம்யூனிஸ்ட்டா இருந்தவருதான். நேரு கூட ‘‘முப்பது வயசுக்குள்ள ஒருத்தன் கம்யூனிஸ்டா இல்லையின்னா அவன் முட்டாள். அதுக்கப்புறமும் கம்யூனிஸ்டா இருந்தா அவன் பைத்தியக்காரன்’’னு சொன்னார். அப்படிச் சொன்ன நேருவும் கம்யூனிஸ்டா இருந்தவர்தான். முதல்ல கம்யூனிஸ்டா இருந்தவங்க அதுக்கப்புறம் அதுமேல அதிருப்தி அடைஞ்சு இது சரியாயில்லைனு வெளியேறிடுவாங்க. இது தவறான போக்குன்னு எடுத்துக்கக்கூடாது. அதுக்குப் பேரு கடந்து செல்வதுன்னு சொல்லலாம். அடுத்த கட்ட நகர்வுன்னு எடுத்துக்கலாம். ஒரு விஷயம் தியரி, பிராக்டிக்கல்னு ரெண்டு விதமா இருக்கு. கொள்கை அமலாக்கம்னு வர்றப்ப, வெறும் கொள்கையா இருந்து வந்தது அமலாக்கப்படுத்தும் போது அப்படியே நிகழ்றதில்ல. அதுல சில பிரச்னைகள் வந்துடுறது. இந்த ஆட்டத்துக்கு நான் வர்லப்பான்னு சிலர் போயிடுவாங்க. சிலர் வேற வழி இல்லாம இத விட்டு வேற எங்கயும் போக முடியாம தங்கிடுவாங்க. இதுலயே இன்வால்வ் ஆயிட்டோம், இத்தனை வருஷங்களை ஓட்டிட்டோம்னு இருந்துடுவாங்க. 50 வருஷமா நடிகனா இருந்தவன் பொழைக்க வழி இல்லன்னா கேமிரா மேனாவோ, இல்ல மேக்கப் மேனாவோ எப்படி ஆக முடியாதோ அதே மாதிரி இதுலயும் பிரசினைகள் இருக்கு. இப்படித்தான் மார்க்ஸிஸ்டுகள் அடுத்த கட்டம் நோக்கிப்போக முடியாம வீழ்ச்சி அடைஞ்சுட்டாங்க. அப்புறம் பரிணாம வளர்ச்சின்னு ஒண்ணு இருக்கு. ஒரு பேப்பரை எடுத்துக்கிட்டா அது வெறும் தனிப் பொருள் இல்ல. இத மரத்தூள்ல இருந்து பண்ணாங்க. இந்த மரத்தூள் இதுக்கு முன்னால ஒரு நல்ல மரமா இருந்தது. இப்ப அதே பேப்பரை எரிச்சிட்டா கரியாகிடும். பவுத்தம் இப்படித்தான் ஒரு பொருளைப் பார்க்கச் சொல்லுது. மார்க்ஸியமும் அப்படித்தான் சொல்லுது. எல்லா பொருளும் இயங்கிக்கிட்டே இருக்கு. ஓடிக்கிட்டே இருக்கு. ‘உலகம் பற்றி எரியும் தீ’ன்னு புத்தர் சொன்னாரு. இந்தத் தீ எரிஞ்சுக்கிட்டே இருக்கு. புதிய புதிய தழல்கள் வந்துகிட்டே இருக்கு. முதல்ல எரிஞ்ச தீ இப்ப அணைஞ்சு போயிடுச்சு. அப்புறம் இன்னொரு தீ… இன்னொரு தீ… அதுமாதிரி எல்லாமே தொடர்ந்து ஒரு இயக்கத்துல இருக்கு. எல்லாமே மாறுது இல்லையா? தொழிலாளி, முதலாளி எல்லாமே மாறுறாங்க.

இன்னைக்கு மார்க்ஸ் காலத்து முதலாளித்துவம் இல்ல. virtual முதலாளிகள் வந்துட்டாங்க. அவன நேரில பார்க்க முடியாது. BPO வுல வேல செய்யுறவங்க அவங்க முதலாளிய நேர்ல பார்த்திருக்கவே மாட்டாங்க. முதலாளியும் இவங்கள பார்த்திருக்க மாட்டான். எங்கிருந்தோ அவன் அனுப்புறத மெயில் வழியா இங்கிருந்து வேல செஞ்சு அவனுக்கு இவங்க பதில் அனுப்புவாங்க. USல ஒரு டாக்டர் இருக்காருன்னா, அவர் ஒரு நாளைக்கு பத்து பேஷண்ட் பார்க்குறார்ன்னா தன்னோட கேஸ் ஹிஸ்டரி, ரெக்கார்டு எல்லாத்தையும் இங்க அனுப்புவான். அத டோட்டல் ஃபைலா உருவாக்கி இவங்க இங்க பத்திரமா வைச்சிருப்பாங்க. இத வைச்சிதான் அந்த டாக்டரால அங்க பீஸ் வாங்க முடியும். அவன் அப்படி வாங்குற பீஸை வைச்சிதான் அவன் இவங்களுக்குச் சம்பளம் தரமுடியும். இதுபோல பல துறைகள் இன்னைக்கு இயங்கிட்டு இருக்கு. தொழிலாளர் நலன் பத்தி இங்க நாம பேச முடியாது. ஏன்னா இவங்க முதலாளிய பார்க்குறதே இல்ல. இத வெச்சு தொழிற்சங்கம் எல்லாம் கட்டமுடியாது. பொலாரிஸ் மாதிரியான சாஃப்ட்வேர்ல வேலை செய்யறவங்க அமெரிக்காவுல இருக்குற முதலாளிக்காக இங்க சின்ஸியரா உழைக்குறாங்க. இருபது, முப்பது ஆயிரம்னு சம்பளம் கூட அவன் இவங்களுக்கு அதிகமா தர்றான். இவ்வளோ சம்பளம் வாங்குறவன் முதலாளிக்கு எதிரா புரட்சி பண்ணணும்னு நினைக்கக் கூட மாட்டான். இவங்களுக்கே அவன் இவ்வளவு சம்பளம் தர்றான்னா அவன் எவ்வளவு சம்பாதிப்பான்! இது மாபெரும் சுரண்டல் இல்லையா? மார்க்ஸ் காலத்து சுரண்டல விட மிகப்பெரிய சுரண்டல். ஆனா, இவங்களை எல்லாம் திரட்டி போராடவே முடியாது. இது virtual முதலாளி, virtual தொழிலாளி. இதெல்லாம் மார்க்ஸ§க்கு தெரியாது. காரணம், அப்ப இந்த நிலவரம் இல்ல. இதுக்கு. மார்க்ஸியத்துலயும் தீர்வு கிடையாது. மார்க்ஸ் எல்லாத்தையும் பொருள் மதிப்பா பார்த்தாரு. கார்ன்னா யூடிலிட்டி வேல்யூ_ பயன் மதிப்போட பார்த்தாரு. But இன்னைக்கு வந்து என்னா ஆகிப்போச்சு. எல்லாத்தையும் அர்த்தமா பார்க்க வேண்டி இருக்கு. ஒரு பொருளுக்கு போஸ்ட் மாடர்னிஸம் பல மீனிங்ஸ் சொல்லுது. ‘படி’ன்னு சொன்னா ‘படி’க்குறது, அளக்குற‘படி’, ‘படி’க்கட்டு, ‘படிப்படி’யா முன்னேறுவது, தலையை ‘படி’ய வாரினான். இப்படி எவ்வளவோ மீனிங்ஸ் வருது. அதே மாதிரி காருக்கும் மீனிங் இருக்கு. நான் BMW கார் வாங்கி இருக்கேன்னா யாருமே வாங்காத BMW காரை நான் வாங்கி இருக்கேன்னு ஒரு அர்த்தம் வருது. BMWயும் கார்தான், மாருதியும் கார்தான். ஆனா, மாருதி கார் வாங்கினவன் BMW கார் வாங்கினவன பார்த்தா பயப்படுவான். ‘பரவா இல்லப்பா நீங்க கார் வாங்கிட்டீங்க’ன்னா ‘இதெல்லாம் ஒரு காரா சார்’ன்னு சொல்லுவான். ஆக, ஒரு பொருளை வாங்கும்போது அதோட அர்த்தத்தையும் நாம சேர்த்து வாங்குறோம்.

இந்த ஏரியா மார்க்ஸியத்துல இல்ல. இந்த ஏரியாவை மார்க்ஸ் கவனிக்கல. அல்லது அதற்கான தேவை அப்ப இல்ல. அப்ப மார்க்ஸியம் பரிணாம வளர்ச்சிக்கேற்ப மாற்றி அமைக்கப்படணும். ஒரு செடி எப்படி பேப்பரா மாறுச்சோ மாக்ஸியம்ங்கற செடியும் இந்த பேப்பரா மாறணும். அப்படி மாறுச்சா? மாறல. கம்யூனிஸ்ட் என்ன பண்றாங்கன்னா மறுக்குறாங்க. இல்ல, மறைக்குறாங்க. மார்க்ஸியத்தின் தடுமாற்றங்களை அமெரிக்காவோட பொய் பிரச்சாரம்னு பேசிக்கிட்டே இருக்காங்க. ஈ.எம்.எஸ்.கிட்ட, ‘‘கம்யூனிஸம் போய் மீண்டும் முதலாளித்துவம் வருமா’’ன்னு கேட்டப்போ ‘‘கருவாடு மீனாகாது’’ன்னு பதில் சொன்னார். ஆனா, கருவாடு மீனாயிடுச்சு. ரஷ்யாவில் செங்கொடி இறக்கப்பட்டு வேற கொடி பறந்தது. இத நம்பூதிரி நினைச்சுப் பார்க்கல. ஏன் இப்படி பிரச்னை வருதுன்னா பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப மார்க்ஸியம் வளர்த்தெடுக்கப்படல. மார்க்ஸியம் தோத்துடுச்சு, மார்க்ஸியம் பொருந்தாது என்பதைவிட, அது வளர்த்தெடுக்கப்படணும். இந்தப் புதிய வாழ்நிலைக்கு ஏற்ப வளர்த்தெடுக்கப்படணும். ஆனா, இன்னைக்கும் இவங்க பழைய அறிக்கைதானே வாசிக்குறாங்க. கம்யூனிஸ அறிக்கையில இருக்குற பல விஷயங்களை முதலாளித்துவ அரசுகளே செஞ்சுடுச்சு. ரயில்துறை மாதிரியான பெரிய துறைகள் தேசியமயமாக்கப்படணும்னு அதுல இருக்கு. அத இந்திராகாந்தி அரசு; அப்புறம் வந்த பல அரசுகள் செஞ்சுடுச்சு. ஆனா இன்னைக்கும் அதே அறிக்கை வாசிக்குறாங்க.

சிலர் மார்க்ஸிஸம் காலாவதியாகிடுச்சுன்னு சொல்லுவாங்க. நான் அப்படிச் சொல்ல மாட்டேன். வளர்தெடுக்கப்படணும்னு சொல்றேன்.

தீராநதி: meta marxismமும் நீங்கள் சொல்லும் Hyper marxismமும் எந்த விதத்தில் வேறுபடுகிறது?

எம்.ஜி.சுரேஷ்: நிக்கோஸ் கஸான்ஸாகிஸ் ஒரு கம்யூனிஸ்ட்டா இருந்து அதன் செயல்பாடுகள் பிடிக்காம விலகிப்போனவர். அவர் meta marxism என்கிற கருத்தை முன் வைச்சார். இப்போ இம்பிலிமெண்ட்டேஷன்னு வரும்போது என்ன பிரச்னைகள் வருதோ அது வராமலிருக்க நாம் கம்யூனிஸத்தை கடந்து போகணும்னு சொன்னார். metaன்னா கடந்து போவதுன்னு அர்த்தம்.

Hyper-marxism என்கிற வார்த்தையை நான் பயன்படுத்தியது, நாளையதினம் ஒரு Hyper marxism வரலாம்னு சொன்னேன். இந்த உலகம் வந்து ‘ஹைப்பர் ரியல்’னா; அதீத உண்மை, நிஜமற்ற நிஜம், நகல் உண்மை, இப்படியெல்லாம் அர்த்தப்படுத்திக்கலாம். இன்னைக்கு நாம பிம்பங்களால் ஆன உலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கோம். ரஜினிங்கற பிம்பம், இன்னும் ஏதேதோ பிம்பங்கள் நம்மை ஆட்சி செய்யுது. ரஜினிங்கற உண்மையை விட பிம்ப ரஜினிக்கு வால்யூ ஜாஸ்தி. நாளைக்கு ஒரு தேர்தல்னா பிம்ப ரஜினியை பார்த்துத்தான் மக்கள்ஓட்டுப் போடுவாங்க. அப்ப இந்தப் பிம்பம் என்பது நகல் உண்மை. இந்த நகல் உண்மை. அசல் உண்மையைவிட உண்மையாக இருக்கு. வீட்டுல இருக்குற டெலிவிஷனை எடுத்துக்கிட்டா இதே பிம்பங்கள்தான் ஆட்சி செலுத்துது.

மெகா சீரியல பார்த்து நம்ம ஜனங்க நம்பிகிட்டு உட்கார்ந்திருக்காங்க. நாம் வந்து பிம்பங்களின் அடிமை ஆகிறோம். உளவியல் ரீதியாவே மனிதன் பிம்பங்களின் அடிமைதான். மனுஷன் முதல்ல பிம்பத்தின் பின்னாடிதான் போவான். இத ஒரு விஞ்ஞானி பரிசோதனை பண்ணார். ஒரு கோழியை முட்டைகளை அடைகாக்க வச்சார், கோழி அடைகாத்து குஞ்சு வெளிய வந்த பின்னாடி கோழிய தூக்கிட்டு தாய்க் கோழிக்குப் பதிலா தன்னோட ஷ¨வை வைச்சிட்டார். இப்ப குஞ்சுகள் பார்க்குற முதல் பொருள் ஷ¨தான். அந்தப் பிம்பம் அதுங்களுக்கு முதல்ல பதியுது. அப்புறம் ஷ¨வை எடுத்து மாட்டிக்கிட்டு அவர் நடக்க ஆரம்பிச்சார். அந்தக் குஞ்சுகள்லாம் அவர் பின்னாடியே போகுது. பார்வை வந்த உடனே முதல்ல பிம்பம்தான் மனசுல படியுதுன்னு அவர் புரூஃப் பண்ணார். நமக்கு தாய்தான் முதல் பிம்பம். குழந்தை, தாயும் நாமளும் ஒண்ணுன்னே முதல்ல நம்புது. இதோட நீட்சியாதான் நாம நடிகர்கள் பின்னாடி போகுறது. இந்தப் பிம்பங்கள் ஷிஃப்ட்டாகிட்டே இருக்கு. முதல்ல அம்மாங்கற பிம்பம், அப்புறம் தலைவர்ங்கற பிம்பம், சேகுவேரா, காரல்மார்க்ஸ் எல்லாம் ஒரு பிம்பமா இருக்குறாங்க. அதுக்காக சேகுவேராவும் மார்க்ஸ§ம் நடிகனும் சமமானவங்கன்னு நான் சொல்லல. பல்வேறு ‘லெவல்’ல இந்தப் பிம்பங்கள் பின்னாடி நாம போறோம். நகல் உண்மையை நோக்கிப் போவது நல்லதில்லை. அப்ப என்ன செய்யணும். எந்த ஒரு விஷயத்தையும் விசாரணை பண்ணணும். பகுப்பாய்வு பண்ணணும். பின்நவீனத்துவம் அதுதான் பண்ணுது. ஏன் லிட்ரேச்சர்கூட அதைத்தான் செய்யுது. எல்லாக்காலத்திலும் இலக்கியம் தன்னுடைய காலத்துக்கு எதிரா இருந்திருக்கு. தன்னுடைய சமூக அமைப்புக்கு, அதிகாரத்துக்கு எதிரா நின்னு செயல்பட்டிருக்கு. Hyper marxismங்கறது இதுதான் செய்யச் சொல்லுது. Hyper marxismம்னா செழுமை செய்யப்பட்ட, பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட marxismம்னு அர்த்தம். இப்போதைய அரசியல் அமைப்புகள் எல்லாமே படிநிலை (hierarchy) தன்மையா இருக்கு. இதுல அதிகாரம் மேலிருந்து கீழ்நோக்கிப் போகும். Hyper marxism சமூகத்தில் அதிகாரம் கீழிருந்து மேல்நோக்கிப் போகும். இன்னைய அமைப்பு செங்குத்தானது. (Vetical) மேல் கீழ் பாகுபாடுகள் கொண்டவை. நமக்குத் தேவை கிடைமட்டமான அமைப்பு (Horizonta) கிடைமத்தில் மேல் கீழ் இல்லை. இவையெல்லாம் Hyper marxismமட்டுமே சாத்தியம்.

தீராநதி: பிம்பங்கள் பற்றி பேசியதால் கேட்கிறேன். தங்களின் வசதிக்கேற்ப பிம்பங்களை அரசியல் சாயலோடு மறு வடிவமைப்பு செய்வதும் நடந்துவருகிறது. உதாரணமாக ஒளவையின் நிஜ பிம்பம் இன்று சொல்லப்படவில்லை. ஏதோ பொய்மையைக் கொண்டு நிரப்பி வேறுவிதமாக கட்டமைக்கப்பட்ட பிம்பமே ருஸ§ வடிவமாக உள்ளது. இதைப்பற்றி உங்களின் கருத்து?

எம்.ஜி.சுரேஷ்: முன்னாடி நாம பேசினோம் இல்ல. அத மாதிரி பின்நவீனத்துவ அடிப்படையில இத கேள்விகேட்பதாலயும், விசாரணை செய்யறதாலயும் நிஜ பிம்பத்தை நாம அடைய முடியும். அப்ப இந்தப் பிரச்னை வராது.

தீராநதி: ஒரு கேள்வி மறுபடியும் ஒரு கேள்வியைத்தானே உண்டாக்கும்?

எம்.ஜி.சுரேஷ்: விசாரணையின் மூலமாதான் நாம உண்மைய அடைய முடியும். நாம சொல்ற உண்மைங்கறது ஒற்றை உண்மையல்ல; ஜெர்மன் விஞ்ஞானி எர்வின் ஷ்ரோடிங்கர் ‘கேட் தியரி’ன்னு ஒரு பரிசோதனை செஞ்சுகாட்டினார். உங்களுக்கும் தெரிஞ்சு இருக்கும். ஒரு டப்பாவுக்குள்ள ரெண்டு தட்டு வெச்சு ஒரு தட்டுல விஷமும் இன்னொரு தட்டுல உணவும் தனித்தனியா வெச்சார். ஒரு பூனையை அதுக்குள்ள போட்டு மூடிட்டார். இப்ப அந்த உணவைச் சாப்பிட்டா பூனைக்கு ஒண்ணும் ஆகாது. விஷத்த சாப்பிட்டா பூனை செத்துடும். இப்ப நாம பொட்டிய திறக்குற வரைக்கும் ரெண்டு உண்மை இருக்கு. ஒண்ணு: பூனை உயிரோட இருக்கு இரண்டு: பூனை செத்துடுச்சு. இத வைச்சு ஒரு உண்மைங்கறது கிடையாதுன்னு நிரூபிச்சார். இப்ப நாம திறந்து பார்க்காத இடத்துல இருக்கோம். திறந்து பார்த்துட்டா ரெண்டு உண்மைக்கு எடம் இல்லியே. நாம மூடப்பட்ட பெட்டியின் முன்னால நிற்குறோம். நம் வாழ்க்கைச் சூழல் பொதுவாக அப்படி இருக்கு. பொதுவா நாம பல உண்மைகளோட இருக்கோம். அதுக்குதான் இந்தக் கேள்வியும், விசாரணையும்.

கேள்விக்கு உள்ளாக்குதல் என்பது ஒரு விஷயத்தை நிராகரிக்குறது அல்ல; அதாவது பின்நவீனத்துவவாதியென்பவன் தன் முன்னோர்களை நிராகரிக்க மாட்டான். அதேசமயத்துல அவர்களைப் பின்பற்ற மாட்டான்.

தீராநதி: நீங்கள் சொல்வது மாதிரி விசாரணைக்கு உட்படுத்துதல், கேள்வி எழுப்புதல் இப்படிச் சகல வசதிகள் இருந்தும் நம் வரலாற்றையே கொட்டிக் கவிழ்த்த மாதிரி தமிழில் ஒரு பிரதி கூட வெளிவரவில்லையே ஏன்?

எம்.ஜி.சுரேஷ்: நீங்க சொல்றது உண்மைதான். உம்பர்டோ ஈகோவின் ‘நேம் ஆப் எ ரோஸ்’ டான் பிரவுனின், ‘டாவின்ஸி கோடு’ மாதிரியான ஒரு படைப்பு தமிழ்ல இன்னும் வரல. இத்தனைக்கும் ‘டாவின்ஸி கோடு’ ஜனரஞ்சகமான ஒரு படைப்பு. அதுபோல கூட தமிழ்ல வரல!

இப்ப நான் அந்த முயற்சியிலதான் இருக்கேன். இத சொல்றதால என்னை நான் அவங்களோட அவங்க அளவுக்கு ஒப்பிட்டுக்குறதா நினைச்சுடக்கூடாது. உம்பர்டோ ஈகோ, இடாலோ கால்வினோ எல்லாம் பெரிய ஆளுமைகள்.

‘டாவின்ஸிகோடு’ல யேசு கிறிஸ்துவுக்கு ஒரு மனைவி இருந்தாள், ஒரு மகள் இருந்தாள்னு ஒரு விஷயத்தைச் சொல்றார். அப்ப ரெண்டாயிர வருஷத்து பைபில கொட்டிக் கவிழ்த்துட்டார். யேசுவுக்கு மனைவி இருந்தான்னு சொல்லி அவர கேவலப்படுத்தல. ஆனா, இப்படியும் ஒண்ணு இருந்தது, எல்லாம் சேர்ந்து மறைச்சுட்டாங்கன்னு சொல்றார்.

இதேபோல நம்முடைய களப்பிரர் காலத்தை எடுத்துக்கிட்டா கேள்விக்குரிய பிரசினைகள் எவ்வளவோ இருக்கு. பத்தாயிரம் சமணர்களை ஆசனவாயில் கழுவேத்திக் கொன்னாங்க. கழுவுல ஏத்துனா உடனே செத்துடமாட்டான். இதயம், மூளையில பாதிக்கப்பட்டாதான் உடனே ஒருத்தன் சாவான். ஆசனவாயில் ஏற்றப்பட்ட கழுமரம் அங்க குத்தாம வேற எங்காவது குத்துனா மணிக்கணக்கா சாகாம துடிதுடிச்சிகிட்டே கிடப்பான். இது எவ்வளவு பெரிய கொடுமை. இப்படி செத்த உடல்களை எரிச்சு அந்தச் சாம்பல்ல ஏறி குதிச்சு சந்தோஷமா ஆட்டம் போட்டாங்க. அவங்க உடல் எரிக்கப்பட்ட சாம்பல உடல் முழுக்க பூசிக்கிட்டாங்க. இன்னைக்கு விபூதி பூசுறாங்களே அதோட ஆதாரம் இதுதான். சைவர்கள் மையமாக இருந்தப்ப சமணர்கள் விளிம்பு நிலையாக்கப்பட்டாங்க. சமணர்களும் தமிழன்தான். இந்த வரலாற்றை யாராவது இதுவரைக்கும் எழுதுனாங்களா? இல்ல.

தீராநதி: தைரியம் கொடுக்கும் கோட்பாடு இருந்தும் தமிழில் ஏன் வரவில்லை? சல்மான் ருஷ்டி அளவுக்கு கூட வரவில்லையே? தைரியம் போதவில்லையா?

எம்.ஜி.சுரேஷ்: ஆமாம். சல்மான் ருஷ்டி அளவுக்கு கூட தமிழில் வரல. நீங்க சொல்ற தைரியமின்மையை கூட மன்னிச்சுடலாம். ஆனா, இவங்க ஆதாயங்களுக்காக செயல்படுறாங்க. அதனால இவங்கள மன்னிக்கக்கூடாது. ஜெயகாந்தன் முதல்ல ‘ஹர ஹர சங்கரா’ எழுதுனார். ஞானபீடம் கிடைச்சதுக்கு அப்புறம் சங்கராச்சாரியார தூக்கி பிடிச்சு மறுபடியும் எழுதுறார். ஜெயமோகன் ‘விஷ்ணுபுரம்’னு ஒரு நாவல் எழுதுனாரு. விஷ்ணுபுரத்தோட முதல் பதிப்பு அட்டைப் படத்த பார்த்தீங்கன்னா தாமரை படம் போட்டுருக்கும். தாமரை பி.ஜே.பி.யோட சிம்பல். விஷ்ணுபுரத்தோட ‘மெயின் தீம்’ என்னான்னு பார்த்தா, ஆதியில் விஷ்ணுபுரம்னு ஒண்ணு இருந்தது. விஷ்ணு புரண்டுபடுத்தார் _ நம்ம ஐதீகத்துல வருது முதல் முறை விஷ்ணு புரண்டு படுத்தப்ப விஷ்ணுபுரம் இருந்துச்சு. மீண்டும் புரண்டு படுத்தப்ப முகலாயர்கள் வந்துட்டாங்க. அதனால அந்த விஷ்ணுபுரம் அழிந்தது. இப்ப திரும்ப புரண்டு படுத்திருக்காருன்னு வருது. அப்படீன்னா பி.ஜே.பி. ஆட்சி வந்துட்டதுன்னு மறைமுகமா எழுதுறார். அதன் விளைவு, பொள்ளாச்சி மகாலிங்கம் அத நூற்றுக் கணக்குல வாங்கி இலவசமா தர்றாரு. அதனால அது அதிகமாக விற்குது. நியாயமா இவரு என்ன செய்யணும்? உம்பர்டோ ஈகோ, டேன் பிரவுன் மாதிரி நமது இந்திய நாட்டுல என்ன கொடுமைகள் இருந்தது, ‘அன்பே சிவம்’னு சொல்லறாங்க, நிஜமா இருந்திருக்காங்களான்னு கேள்வி எழுப்பி இருக்கணும்.

அதச்சொன்னா அவருக்கு என்ன ஆதாயம். அவருக்கு என்ன பலன் கிடைக்கும். இந்துத்வா கொள்கைகளை எழுதினா நாளைக்கு அவர் ஒரு எம்.பி.யாகூட ஆகலாம். பி.ஜே.பி. கவர்மெண்ட் வர்றப்ப சாகித்ய அகாடமி விருதுகூட கிடைக்கும். இதனால அவர் எழுத்து பல மொழிகள்ல மொழி பெயர்க்கப்படும். பலவாரியான இந்து மக்களுக்கு ஆதர்ஸமா அவர் இருப்பார். அதனால இப்படி எழுதுறாரு. ஆக, தைரியமில்லாம இருப்பதைவிட ஆதாயவாதியாக இருப்பது கொடியது.

தீராநதி: அப்படி ஒரு படைப்பும் வராதபட்சத்தில் இந்தக் கோட்பாடுகள் வீணாக எதற்கு?

எம்.ஜி.சுரேஷ்: நம்மளோட கடமை ஊதுற சங்கை ஊதிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். யாராவது இத செய்வாங்கன்னு நம்பி செஞ்சிட்டு இருக்கோம். இப்ப ‘நாஸா’வுல இருக்குற விஞ்ஞானிகள்லாம் பிரபஞ்ச வெளியில சவுண்டை அனுப்புறாங்க. … பீப்பீப்பீப்பீன்னு சவுண்டை அனுப்புறாங்க. பிரபஞ்ச வெளில வேற எங்காவது உயிரினம் இருக்கலாம் அந்த உயிரினம் பதிலுக்கு என்றைக்காவது எதிர்வினை செய்யாதான்னு நம்பி செஞ்சிக்கிட்டு இருக்காங்க. நாமலும் அதே மாதிரி செய்யுறோம் அவ்வளவுதான்.

தீராநதி: ஆரம்பகாலங்களில் நீங்கள் கவிதை எழுதி இருக்கிறீர்கள். அதில் கவிதைகளின் அம்சம் குறைவாக இருப்பதால் நிராகரித்துவிட்டதாக சொல்லியிருந்தீர்கள். இன்று கவிதைகளுக்கான அம்சத்தையெல்லாம் உரை நடை கொண்டு போய்விட்டது. அப்படி இருக்க நீங்கள் ஏன் மறுபடியும் அ_ கவிதை எழுதக்கூடாது?

எம்.ஜி.சுரேஷ்: பொயட்ரிங்கறது ஏற்கெனவே இருக்குற ஒரு விஷயத்தை மேலும் சிக்கலாக்குறதால பின்நவீனத்துவவாதிகள் பொயட்ரியை நிராகரிக்கிறாங்க. கவிதை வாசிக்குறவன்கிட்ட கவிதைய பத்திய பொதுபுத்தி ஒண்ணு இருக்கு. அவன் உரைநடையைப் படிக்கும்போது அத அப்படியே எடுத்துக்குறான். ஆனா, இதுவே கவிதையின்னு வரும்போது வேற அர்த்தம் தேடுறான். ‘கவிதை என்பது அர்த்தங்களின் சுமைகளாகத் தடுமாறுகிறது’ன்னு ரொலன்பார்த் சொல்றார். கவிதை வந்தது வேற எடத்துக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் வந்திருக்கு. எப்படி கேமிரா வந்ததும் ஓவியம் தன் வெளிப்பாட்டை மாத்திக்கிடுச்சோ அது மாதிரி கவிதையும் வேற லெவலுக்குப் போய் ஆகணும்.

தீராநதி: அதை ஏன் நீங்கள் செய்யக்கூடாது?

எம்.ஜி.சுரேஷ்: பண்ணணும்ங்கற எண்ணம் எனக்கிருக்கு. மீ கவிதை (Hyper poem) மாதிரி பண்ண ஒரு திட்டம் வைச்சிருக்கேன்.

தீராநதி: inter-text ஊடிழைப் பிரதி என்று சொல்லப்படுகிறதே அதை விளக்க முடியுமா?

எம்.ஜி.சுரேஷ்: ஒரு கதையைத் தொடர்ந்து சொல்லிக்கிட்டே போனால் சில தவறுகள் நடந்துடும். அதையே பிரேக் பண்ணி பிரேக் பண்ணி சொன்னா தப்பு வராது. அதுக்குதான் ஊடிழைப் பிரதி தேவைப்படுது.

ஜெயகாந்தன் ‘அக்னி பிரவேசம்’னு ஒரு சிறுகதை எழுதுனார். அதயே பெருங்கதையாடலாக்கி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எழுதுனார். சிறுகதையில ‘கங்கா’ங்கற கேரக்டர் கெட்டுப்போயிடுவா. அப்ப அவள ‘நீ தல குளிச்சுடுடீ.. சீத வந்து அக்னி பிரவேசம் பண்ண பிறகு சுத்தமாயிடுவா. குளிச்சா நீ சுத்தமாயிடுவே’ன்னு சொல்லி இருப்பார். அதுல நம்ம பழைய ஒழுக்கக் கட்டமைப்புகளையெல்லாம் கொட்டிக் கவித்திருப்பார் அதுவே பெருங்கதையாடல்ல எப்படி வரும்னா இந்த ‘கங்கா’ங்கறவ ஏற்கனவே லவ் பண்ணவன பார்ப்பா. அவன் தண்ணி அடிச்சிக்கிட்டு கிடப்பான். முடிவுல அந்தக் கதையில ஒரு விபச்சாரிபோல நடந்து போவா கங்கா. கார் ஒண்ணு போகும். இவள பார்த்த ஒடனே நின்னு பின்னாடி வரும். அதுல இருந்து ஒருத்தன் சிகரெட் பத்த வைச்சிகிட்டு இவள பார்ப்பான். இவ உடனே ‘ஈ’ன்னு சிரிச்சிகிட்டு நிற்பா. இப்படி முடியும் கதை. அப்படின்னா அவள விபச்சாரியாக்கிட்டாரு. அக்னி பிரவேசத்துல சிறப்பா பண்ணவரு, அவள ஒரு விபச்சாரியாக்குறதுக்கு இவ்வளவு பெரிய கதைய எழுதணுமா? Inter text ன்னு எழுதும்போது இந்த விஷயங்களை ஷார்ப்பா கையாளலாம்.

தீராநதி: ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸை வைத்து ‘37’ என்ற நாவலை எழுதி இருக்கிறீர்கள். பிரைமேலெவி போல மாற்று அறிவியல் நாவலது. தத்துவம், அறிவியல் கோணங்களில் எழுதி வாசகனை பிரமிக்க வைப்பது என்பது அதன் சாராம்சம். எதிர் நபரை தன் அறிவைக்காட்டி பிரமிக்க வைப்பதென்பதும் Intellectual Terrorism மாகாதா?

எம்.ஜி. சுரேஷ்: அறிவைக்காட்டி பிரமிக்க வைக்குறது கூட இல்ல இது. சில நிகழ்வுகளைக் காட்டி பிரமிக்க வைக்கிறது. panaromic Spectacle மாதிரி, உடை, தோற்றம், ஜோடனைகளைக் காட்டி பிரமிக்க வைக்குறது. அவ்வளவுதான். நம்ம மனோகர் நாடகம் மாதிரி. அறிவு ரீதியா பிரமிப்பும் பண்ணலாம். டெரிடா, பூக்கோவோட அறிவாற்றல கண்டுதானே நாம பிரமிக்கிறோம். நான் நிறைய படிச்சிருக்கேன், எனக்கு நிறைய தெரியும்னு மத்தவங்களை அறிவைக்காட்டி பயமுறுத்துறதுதான் Intellectual Terrorism.

தீராநதி: அதுபோல வேலையும் இங்கு நடக்கிறது இல்லையா?

எம்.ஜி. சுரேஷ்: ஆமாம். நடக்குறதுதான். அந்த டெரரிஸத்தை நான் எதிர்க்குறேன்.

தீராநதி: தனக்குக் கிடைக்கும் ஓர் அழகான பேனாவை அல்லது தகவல்களை யாருக்கும் சொல்லாமல் நமக்கானதாக பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது மனிதனின் அடிப்படைக் குணங்களில் ஒன்று. ஆனால் நீங்களோ அதற்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறீர்கள். அறிவு பரவலாக்கல் செய்கிறீர்கள். இந்த அறிவுப் பரவல் மனப்பான்மையை எப்படிப் பெற்றீர்கள்?

எம்.ஜி. சுரேஷ்: நம்ம ராமானுஜர் தனக்குத் தெரிஞ்ச ‘ஓம் நமோ நாராயணா’ங்கற மந்திரத்தை மக்கள் எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டாரு இல்ல… அததான் நான் செய்றேன். ஒரு அறிவுங்கறது பலருக்கும் பகிர்றதா இருக்கணுமே ஒழிய, மிரட்டறதா இருக்கக் கூடாது. அறிவுங்கறது மக்களுடையதுன்னு நான் நினைக்கிறேன். அதுக்காக என்னுடைய எல்லா புத்தகத்துலயும் ‘உரிமை மக்களுக்கு’ன்னு போட விரும்புறேன். மக்கள்தான் என்னை உருவாக்குனது. otherதான் என்னை உருவாக்குனது. அப்படின்னா பலரால் உருவானவன் நான். பலரால் உருவான நான் சமூகத்துக்கு பதிலுக்கு ஏதாவது செய்யணும்னு வரப்ப இத செய்யறேன். நான் எழுதின ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ புத்தகம் பல காலேஜ்ல பாடத் திட்டத்துல வைச்சிருக்காங்க. பேராசிரியர்கள்லாம் இந்தப் புத்தகத்த சிபாரிசு செய்யுறாங்க. அத பார்த்துட்டு ஓர் இலக்கிய நண்பர் ‘என்ன நீங்க இவ்வளவு சிம்பிளா பண்ணிட்டீங்க. நாளைக்கு நம்மளைப் பார்த்து யாரும் பயப்பட மாட்டாங்க. நீங்க தப்பு பண்ணிட்டீங்க’ன்னு சொன்னாரு. இப்படி நினைக்குறதே ஒரு டெரரிஸம் போலதான்.

தீராநதி: நோபல் பரிசு பெற்ற சால்பெல்லோ ஒரு மோசமான ப்ளே பாய் இதழில் எழுதியிருக்கிறார். மார்க்குவேஸ், ஜான்அப்டைக் போன்றவர்கள் கூட பெரும் பத்திரிகைகளில் எழுதியவர்கள்தான். மார்க்குவேஸை, ஜான் அப்டைக்கை கொண்டாடுகிற நம்மவர்கள் சிறுபத்திரிகை படைப்புகள் மட்டுமே உன்னதமானது என்பதுபோல ஒரு ஃபோபியாவில் மாட்டித் தவிக்கிறார்களே?

எம்.ஜி. சுரேஷ்: தாஸ்தாவெஸ்கியும் ஒரு வெகுஜன எழுத்தாளர்தான். வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவது கீழானது. சிறு பத்திரிகையில் எழுதுவது உன்னதமானது அப்படி நினைக்குறதும் ஒரு ஹிப்போகிரஸிதான்.

தீராநதி: இதையட்டியே ஒருகேள்வி. பெரும் பத்திரிகைதான் சிற்றிதழின் எழுத்து நடையையே தீர்மானிப்பதாக நான் நினைக்கிறேன். உதாரணமாக ஒரு காலத்தில் சிறு பத்திரிகையில இயங்கிய பாலகுமாரன் வெகுஜனத்திற்குப் போனார். அது வெகுஜன நடையானது. பிறகு ஜெயகாந்தன் போனார், அப்போதும் மாறியது. இன்று ஜெயமோகன், ராமகிருஷ்ணன் எல்லாம் வெகுஜனத்திற்கு போய்விட்டார்கள். இதுவரை சிறுபத்திரிகை நடையாக இருந்தது வெகுஜனமாக மாறி இருக்கிறது. இப்போது வேறு நடைகள் சிறு பத்திரிகைக்கு தேவையாகிறது. இந்த ‘வேக்கம்’தான் சிறுபத்திரிகையின் நடையை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தை தீர்மானிக்கிறது என்று நினைக்கிறேன், இது சரியா?

எம்.ஜி. சுரேஷ்: இது ரெண்டு விதமாகவும் Vice Versa இருக்குன்னு நான் நினைக்கிறேன். நீங்க சொல்ற மாதிரி அப்படியும் இதைப் பார்க்கலாம்.

தீராநதி: பின்நவீன எழுத்தை அறிமுகம் செய்ய உங்களுக்கு என்று ஓர் இதழ் முன்னால் தேவைப்பட்டது. இன்றோ வெகுஜன இதழ்களே பின்நவீன எழுத்துகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. பிறகு உங்களுக்கென்று ஓர் இதழ் தேவையா?

எம்.ஜி. சுரேஷ்: பின்நவீன எழுத்தை வெளியிடறதுக்கும், அந்தக் கோட்பாடுகளை அறிமுகம் செய்யறதுக்கும், விவாதிக்குறதுக்கும் ஒரு இதழ் தேவைப்பட்டது. அதனால் பன்முகம் இதழைத் தொடங்கினோம். அதுக்கு முன்னாடி இயங்கிகிட்டு இருந்த நிறப்பிரிகை, கிரகணம் மாதிரியான இதழ்கள் நின்னுபோனதால இந்தத் தேவை உண்டாச்சு. இப்ப நீங்க சொல்ற மாதிரி பெரிய பத்திரிகைகளே போஸ்ட் மாடர்னிஸ எழுத்துக்களைப் பரவலா வெளியிட ஆரம்பிச்சுட்டாங்க. அப்ப எனக்குன்னு ஒரு பத்திரிகை தேவை இல்ல. இன்னொன்று, ஒரு சிறு பத்திரிகை தொடர்ந்து வரக்கூடாது. வந்தா அது நீர்த்துப் போயிடும். கொஞ்ச நாள் நிறுத்திட்டு அப்புறம் கொண்டு வரலாம். இப்போ பன்முகத்தை போன டிசம்பரோட (2006) நிறுத்திட்டோம்.

தீராநதி: அண்மையில் உலகையே உலுக்கிய சதாம் தூக்கு பற்றி?

எம்.ஜி.சுரேஷ்: அடிப்படையில நான் மரண தண்டனையை எதிர்க்குறேன். சதாம் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அந்தப் பிரச்னையில அமெரிக்கா தலையிட முடியாது. சதாமை அந்த மக்கள்தான் தண்டிக்கணும். அதுகூட தூக்குப் போட்டு தண்டிக்குறது சரி இல்ல. சதாம் தப்பு பண்ணலையான்னு ஒரு கேள்வி வரும். யாருதான் தப்பு செய்யல. வரலாறு என்பதே வன்முறையின் வரலாறுதானே. பல வரலாறுகள் நம்மகிட்ட முன்னுதாரணமா இருக்கு. தமிழர்களுடைய ‘நாலடியார்’ங்குற எட்டாயிரம் பாடல்களை பாண்டிய மன்னன் ஆற்றுல தூக்கிப் போட்டான். அதுல மிஞ்சின நாலாயிரம் பாடல்கள் தானே நாலடியார்? அதுவும் ஒரு வரலாறு. வன்முறைங்கறது காலம் காலமா நிகழ்ந்துகிட்டே இருக்கு. இத சதாம் மட்டுமே செய்யலியே. ஆனாலும் வன்முறைக்குத் தீர்வு வன்முறை இல்ல.

சந்திப்பு : கடற்கரய்

பிரிவுகள்:Uncategorized

தமிழகச் சூழலில் பின்நவீனத்துவம்

பலபேர் பின்நவீனத்துவத்தையும் பின்னமைப்பு வாதத்தையும் ஒன்றாக்கிக் குழப்பிக் கொள்வதைத் தமிழகச் சூழலில் நான் கண்டிருக்கிறேன். பின்நவீனத்துவம் ஒரு இலக்கிய-கலாச்சார இயக்கம், பின்னமைப்புவாதக் கொள்கைகளுக்கும் பின்நவீனத்துவக் கொள்கைகளுக்கும் பல இணைப்புச் சங்கிலிகள் உண்டு என்றாலும் இரண்டும் ஒன்றல்ல. நவீனத்துவக் கொள்கைகளுக்குப் பின்னால், அதன் கொள்கைகளுக்கு உடன்படாமல் எழுந்த இயக்கம் பின்நவீனத்துவம், நவீனத்துவம் முன்வைத்த கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று கலைப்படைப்பின் சுதந்திரத் தன்மை (autonomy of the works of art). ஆனால் பின் நவீனத்துவத்தின் மிக முக்கியப் பண்போ நிச்சயமற்ற தன்மை (indeterminacy). ஹைஸன்பெர்கின் நிச்சயமில்லாக் கொள்கை, ஹெரால்டு ப்ளும் கூறிய செல்வாக்கின் கவலை, சராசீன் நாவலை பார்த்து பகுப்பாய்வு செய்த முறை போன்றவை எல்லாம் நிச்சயமற்ற தன்மையை எடுத்துக் காட்டுபவை.

தமிழ்ச் சூழலில் நிச்சயமற்ற தன்மை என்பது ஆழமாக உணரப்படவில்லை. மேற்கு நாடுகளைப் போன்று உலகப் போர்களினால் உருவான சூழல்களைச் சந்திக்காததனாலோ, கூட்டுக் குடும்பச்சிதைவு என்ற நிகழ்வு ஏற்பட்டாலும் தனிக்குடும்ப அமைப்பு ஆழமாக வேரூன்றியிருப்பதனாலும் கடவுள் கோட்பாட்டிலும் சாதி போன்ற சமூக அமைப்புகளில் உறுதியான நம்பிக்கை இருப்பதனாலும் தமிழ்நாட்டில் பின்நவீனத்துவத்திற்கான சூழ்நிலை இன்னமும் உருவாகவில்லை என்றே சொல்லவேண்டும். மேற்கு நாடுகளில் பின்னப்படுதல் (fragmentation) மனிதனுக்குள் முழுமையாக நிகழ்ந்துவிட்ட நிலையில் வேறுவித இலக்கியம் அல்லது கலைகளை அங்கு யோசித்துப் பார்க்க முடியாது. மதங்களும் செவ்வியல் நூல்களும் காட்டும் முழுமைத் தன்மை அங்கு இழந்த ஒன்றாகிவிட்டது. நமக்கு அப்படியில்லை. அதனால் தான் நமது பின் நவீனத்துவப் படைப்புகள் வெற்றிபெற முடியவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அங்கு கடவுளின் மரணம் சம்பவித்த பின் உலகம் பின்னப்பட்டுவிட்டது. குடும்பமும் பின்னப்பட்டுவிட்டது. பின்னப்படுதல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. பின்நவீனத்துவத்தில் இது வடிவங்களின் சிதைவிலும், மோன்டாஜ் கொலாஜ் போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்துவதிலும், வடிவங்கள் பலவற்றை எதிர்பாராமல் போட்டுக் கலப்பதிலம் வெளிப்படுகிறது.

பின்நவீனத்துவக் கலாச்சாரம் வெகுஜனக் கலாச்சாரம், நுகர்வுக் கலாச்சாரம் என்பதால் அதில் எல்லா மதிப்பீட்டுச் சட்டகங்களும் (canons) அர்த்தமிழக்கின்றன. (தமிழ்நாட்டில் நவீனத்துவத்தின் வருகையே பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் இங்கு மதிப்பீட்டுச் சட்டங்கள் நவீன இலக்கியத்திற்கு அறவே உருவாகவில்லை. அதனால் இங்கு வெகுஜனக் கலாச்சாரம் என்பதே அளவுகோலாக ஏற்கப்பட்டுவிட்டது என்பது வெட்கத்திற்குரிய நிலை). ஆகவே வரன்முறையான மதிப்புகள் பின்நவீனத்துவத்தில் தலைகீழாகின்றன. கலாச்சாரம் மதிப்பீட்டுச் சட்டகங்கள் அற்றுப்போகிறது. கலை மேன்மையிழந்து கேளிக்கை யாக்கப்படுகிறது.

பின்நவீனத்துவம் – சில அடிப்படைகள்

கேளிக்கையாக்கல் (carnivalization) ஓர் அபத்த / தமாஷான சூழலை நமக்குக் காட்டுகிறது. வால்டர் பெஞ்சமின் பாரீஸ் நகரத்தில் புதிய வகை வணிகஸ்தலங்கள் திறக்கப்பட்டபோதே 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலேயே பின்நவீனத்துவம் தோன்றிவிட்டது என்கிறார். தொழிற்புரட்சி பிரிட்டனில் தோன்றினாலும் நுகர்வோரியத்தை (consumerism அல்லது நுகர்வியத்தை) முதன் முதலில் உருவாக்கியது பிரான்சு நாடுதான். பாரீசுக் கலாச்சாரம்தான். இரசனையை ஜனநாயகப்படுத்துவதில் காணப்பட்ட அலாதி வெறுப்பு நவீனத்துவத்தைத் தோற்றுவித்தது என்றால், நுகர்வுக் கலாச்சாரம் பின்நவீனத்துவத்தைத் தோற்றுவித்தது. வெகுஜனக் கலாச்சாரத்தின் சக்திக்கு நவீனத்துவம் மிக எளிதாக வழிவிட வேண்டி வந்தது. கிட்ச் கலாச்சாரத் தேவைகளுக்கு முன் அது நிற்க இயலவில்லை. பின்நவீனத்துவம் கணநேர இன்பம் – நம் முன்னோர்களின் சொற்களில் “சிற்றின்பம்” (monokrones hedonis) என்பதை வலியுறுத்துகிறது. எளிதான விஷயங்கள்தான் வேண்டும் இரசிப்பதற்கு என்கிறது. இதனால் எண்ணற்ற கலை வடிவங்களும் இலக்கிய வடிவங்களும் எல்லையற்று ஒன்று கலந்து பார்க்கப்படுகின்றன. அழகியல் மதிப்புகளும் கருத்தியல் சிந்தனையும் ஒன்று கலக்கப்படுகின்றன. திரைப்படமும் இலக்கியமும் – முன்னணிக் கலையும் வெகுஜனக்கலையும் – துன்பியலும் இன்பியலும் – மேன்மையானதும் கீழானதும் – உள்மனப் பேச்சும் ஜால யதார்த்தமும் என்னும் யாவும் ஒன்றாக்கப்படுகின்றன. இன்றைய நுகர்வு – வணிகமய – பன்னாட்டு – உலகமயமாக்கல் சூழலுக்கு ஏற்றவாறான ஒரு அழகியல் உருவாக்க முனைதல் நிகழ்ந்திருக்கிறது.

இனி பின்நவீனத்துவ இலக்கியத்தின் அடிப்படைகளுக்கு வரலாம். டேவிட் லாட்ஜ், பின்நவீனத்துவப் புனைவுகளில் பயன்படுத்தப்படும் ஆறு எடுத்துரைப்பு உத்திகளைப் பட்டியலிட்டார் (இவ்வாறு பட்டியலிடுதல் மிக எளிமையான புரிந்துகொள்ளலுக்கும் கையாளுதலக்கும் வழிவகுக்கும் என்ற பயம் எனக்கு இருப்பினும், அடிப்படைகளைத் தமிழில் எளிதில் கொண்டு வருவதே இன்றைய தேவையாக நான் உணர்வதால் இவற்றை எழுதுகிறேன்). அவை முரண்படுத்தல் (contradiction), வரிசைப்படுத்துதல் (permutation), தொடர்ச்சியின்மை (discontinuity), மிகை (excess), துழாவும் தன்மை (randomness). குறைச்சுற்று (short circuit) என்பனவாகும்.

அலைன் ரோபே கிரியேவின் in வாந டயலெசiவோ நாவலில் முதல் வாக்கியம் மழை பெய்கிறது என்று சொல்லிவிட்டு அடுத்த வாக்கியம் சூரியன் பிரகாசிக்கிறது என்கிறது. இம்மாதிரி எழுதுவதன் காரணம், யதார்த்தத்திற்கும் மொழிக்குமான தொடர்பை அறுப்பது என்று சொல்லப்படுகிறது. பெக்கட்டின் மலாய் (molloy) நாவலின் நாயகன் தனது sucking stone-fis ஒரே வரிசையில் வைத்துச் சுவைக்கவேண்டும் என்று முயல்வது வரிசைப்படுத்தல்-பெர்ம்யுடேஷன் எனப்படுவதற்கு ஒரு உதாரணம். வரிசைப்படுத்தல் தொடர்ச்சியின்மைக்கும் பிரதியின் துழாவும் தன்மைக்கும் இட்டுச் செல்கின்றன. (பின்நவீனத்துவப் படைப்பாக இல்லாவிட்டாலும் இத்தகைய வரிசைப்படுத்தலுக்குப் பழந்தமிழ் இலக்கியத்தில் ஒரு நல்ல உதாரணம், குறிஞ்சிப்பாட்டில் வரும் பூக்களின் வரிசை). பி.எஸ். ஜான்சனின் நாவல்களும் சவுல் சபோர்ட்டாவின் நாவல்களும் தழாவும் தன்மைக்கு நல்ல உதாரணங்கள். இங்கு வாசகன் பல்வேறு சம்பவங்களுக்குள் ஏதொன்றையும் துழாவியெடுத்து தனக்கேற்ற வரிசைமுறையில் அமைத்துக் கொள்ளலாம். ஒரு விளையாட்டுப் போல பல்வேறு வரிசைமுறையில் அமைத்தும் பார்க்கலாம். மிகை என்பது வாசகனுக்குத் தேவையற்ற விதமாக மேலும் மேலும் தகவல்களை அளித்துக் கொண்டே சென்று அதன் மூலம் அவனது விளக்கத்தினைத் தவிர்த்தலாகும். குறைச்சுற்று என்பது புனையப்பட்ட கதாபாத்திரங்களோடு சேர்ந்து நிஜமான ஆசிரியனும் கதையில் பங்கேற்பது.

பின்நவீனத்துவம் – சில அடிப்படைகள்

வெள்ளி, 20 ஃபிப்ரவரி 2004
பின்நவீனத்துவச் சூழலை ஆங்கிலக் கவிஞர் (நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட) ஜான்டன் எழுதிய உலகத்தின் ஆண்டுவிழா என்னும் கவிதையின் ஒரு பகுதியைக் கொண்டு விளக்கலாம்.

புதிய தத்துவம் எல்லாவற்றையும் சந்தேகத்திற்குள்ளாக்குகிறது…

எல்லாம் உடைந்துபோயின, எல்லா ஒருங்கமைவும் போய்விட்டது.

எல்லாமே அளிப்புகளும் தொடர்புறுத்தலும் ஆகிவிட்டன…

பின்நவீனத்துவத்திற்கும் நவீனத்துவத்திற்குமான வேறுபாடுகள் என்ன? நவீனத்துவம் மடியாசாரத்தை வலியுறுத்தியது. பின்நவீனத்துவமோ இன்பத்தை வலியுறுத்துகிறது. நவீனத்துவம் தனிமனித பிரக்ஞையின் வாயிலாக யதார்த்தத்தைக் கைப்பற்ற முனைந்தது. வர்ஜினியா வுல்ஃப் வாழ்க்கையை “ஒளிகசியும் உறைக்காகிதம்” என்றும் “ஒளி ததும்பும் ஒளிவட்டம்” என்றும் வர்ணித்தார். நவீனத்துவம் ஒரு மையம் (அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் – ஹென்ரி ஜேம்ஸின் வார்த்தைகளில் “கம்பள விரிப்பிலுள்ள டிசைன்” அது) உண்டு என்று நம்பியது. ஒரு குழப்பமான பொருளை பல்வேறு உத்திகளைக் கையாண்டு ஒரு ஒழுங்கிற்கு கொண்டு வந்தனர். நவீனத்துவத்தின் முழுமை தேடும் முயற்சிக்கு மாறாக, பின்நவீனத்துவம் முன்பே கூறியவாறு ஒரு நிச்சயமற்ற தன்மையை முன்னிறுத்துகிறது.

ஒரு டிசைன், வடிவம், மையம் என்பதெல்லாம் பின்நவீனத்துவத்தைப் பொறுத்தவரை நமக்கு நாமே கொள்ளும் விழைவுச் சிந்தனைகள் (wishful thinking). ஆகவே அப்படியொன்று இல்லை – அது ஒரு “திணிப்பு”தான். உதாரணமாக தாமஸ் பிஞ்ச்சனின் “The crying of Lot49” நாவலைப் புரிந்து கொள்வதோ அதற்கு மையம் நிர்ணயிப்பதோ மிகக் கடினமாக இருக்கிறது. நவீனத்துவம் புத்திசார்ந்த (epistemological) விஷயங்களைக் கையாண்டதற்கு மாறாக பின்நவீனத்துவம் தோற்றம் சார்ந்த விஷயங்களைப் பிரதானப்படுத்துகிறது.

நவீனத்துவம்
பின்நவீனத்துவம்

வடிவம்
வடிவின்மை, எதிர்வடிவம், திறந்த வடிவம்

நோக்கம் / குறிக்கோள்
விளையாட்டு, கேளிக்கை

வடிவமைத்தல் (டிசைன்)
தற்செயல் நிகழ்வு

கலைப் பொருண்மை
கலைச் செயல்முறை

தொலைவுபடுத்திக் கொள்ளல்
பங்கேற்றல்

ஒருங்கமைத்தல் / படைப்பு
தகர்ப்பமைப்பு / எதிர்நிலை

இருப்பு
இன்மை

நிச்சயத்தன்மை
நிச்சயமற்ற தன்மை

பின்நவீனத்துவம் – சில அடிப்படைகள்

இம்முரண் இணைகள் நவீனத்துவத்திற்கும் பின்நவீனத்துவத்திற்குமான தொடர்பை (!) விளக்கப் போதுமானவை.

ஏதோ நவீனத்துவத்திலிருந்து பின் நவீனத்துவம் ஒரு புரட்சிகரமான முறையில் தன்னை வெட்டிக் கொண்டது என்று தோன்றினாலும், இலக்கிய வரலாற்றில் முற்காலத்திலேயே அதன் சில தன்மைகள் இருப்பதனைக் காணலாம். ஆங்கில இலக்கியத்தில் 1760 இல் இயற்றப்பட்ட ட்ரிஸ்ட்ராம் ஷாண்டி என்னும் நாவல் பின்நவீனத்துவத் தன்மைகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். தமிழில் ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியில் பின்நவீனத்துவக் கூறுகள் உண்டு. இந்நூற்றாண்டின் பின்நவீனத்துவப் படைப்புகள் தன்நோக்குத் தன்மை (self-reflective) கொண்டனவாக அமைகின்றன. ஆந்த்ரே ழீட் 1927 இல் எழுதிய டுநள குயரஒ ஆடிnயேலநரசள இவ்வாறான ஆரம்பகால நாவலாகக் கருதப்படுகிறது. காம்யூவின் வீழ்ச்சி, அந்நியன் முதலிய நாவல்களிலும் இத்தன்மைகளைக் காணலாம். காம்யூவின் எழுத்துகளில் மையமோ, சொல்லுரைக்கு அப்பாலான நிச்சயத்தன்மையோ இல்லை. ஓரளவு நிச்சயத்தன்மை காணப்படும் படைப்புகளிலும், அது விவாதத்திற்குரியதாக, நம்புமளவு நிச்சயமாக அழுத்திச் சொல்ல முற்படும் சந்தர்ப்பங்களில்தான் நிச்சயமற்ற தன்மை மிகமோசமாக வெளிப்படுகிறது என்பது பின்நவீனத்துவத்தின் சிந்தனை. டெரிடா வெளிப்படையாகவே புனைவிற்கும், புனை வல்லாததற்கும் வேறுபாடில்லை என்று சொல்லுகிறார் என்றால், ரிம்போ தமது கவிதைகளிலும் டிமனிக்கு எழுதிய கடிதங்களிலும் குறிப்பாக உணர்த்துவதும் அதுதான். வாசகனைச் சக ஆசிரியனாகப் பாவிக்கும் நோக்கினை போதிலேருக்கும் காஃப்காவுக்கும் கொண்டு செல்லலாம். குறிப்புமுரண், தொனி, மையமழித்தல் ஆகிய உத்திகள் வாயிலாக வாசகன்-பிரதி இடையிலான உறவை மாற்றியமைத்துக் கொண்டே இருக்கும் வேலையை காஃப்காவின் கோட்டை காட்டுகிறது. இவையாவும் ஆழம் மனத்திலிருக்கும் ஒருவிதமான படைப்பாக்க மனநிலைக்கு வாசகரை இட்டுச் செல்கின்றன. தமது பிரதியைத் தொடர்பறுத்தல்கள், இடைவெளிகள் வாயிலாக மல்லார்மேயும் பின்நவீனத்துவப் பிரதிகளாக்குகிறார். காம்யூவின் வீழ்ச்சி கதையில் மையமோ உறுதியான நிலைப்பாடோ கிடையாது. ஒத்திப் போடலும், இடம் பெயர்த்தலும், காவல்படுத்தலும்தான் காணப்படுகின்றன.

முன்பே கூறியது போல இன்னும் தமிழில் கால் கொள்ளாத (அல்லது கால்கொள்ளாக் காலம் கனியாத) பின்நவீனத்துவம் தான் இலக்கிய நம்பிக்கைகளில் இறுதியானது என்றும் கொள்ளக்கூடாது. இப்போது தமிழில் பின்நவீனத்துவம் தோன்றுவதற்குத் தோதான நுகர்வுக் கலாச்சாரம் வேர்விடத் தொடங்கியிருக்கிறது. என்றாலும் காலந்தோறும் இலக்கிய நம்பிக்கைகளும் கொள்கைகளும் தோன்றுகின்றன, மலர்கின்றன, விகாசமடைகின்றன, மாறுகின்றன, அழிகின்றன என்பதை சீரியசான வாசகர்களோ திறனாய்வாளர்களோ மறந்து விடமாட்டார்கள்.

பிரிவுகள்:Uncategorized

பின் நவீனத்துவம்

யுவன் பிரபாகரன்

கலை, இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் பெரிதும் தாக்கம் பெற்றுவரும் பின்நவீனத்துவம், பின் அமைப்பியலுக்கு பிறகு உருவான கோட்பாடாகும். இது மார்க்சியத்தின் தொடர்ச்சியாக வந்த பிந்தைய சிந்தனையாகும். இப்போக்கானது, இரண்டாம் உலகப்போரின் பின்னான நம்பிக்கைச் சிதைவுகளின் செல்வாக்கால் எழுந்தது என்றுக் கூறப்படுகின்றது.
நவீனத்துவத்தை மறுத்து பின் நவீனத்துவம் வளர்ந்தது எனலாம்.

நவீனத்துவம் வளர்த்துவிட்ட கருத்தாக்கங்களை எல்லாவற்றோடும் முரண்பட்டு மறுத்து விடுகின்றது எனப் புரிந்து கொள்ளலாம். இறைவன், தனிமனிதன், உணர்வு, அறிவு, சமூகம், மானுடவிடுதலை போன்ற நவீனத்துவ கருத்தாக்கங்களை மையமாகக் கொண்டு மொத்த உலக நோக்கும் கட்டியெழுப்பப் படுவதைப் பின்நவீனத்துவம் மறுதலிக்கிறது.
பின் நவீனத்துவம் வரலாற்றுத் தொடர்ச்சியை ஏற்காது. சமூக முழுமையை ஏற்காது. ஒருமையை ஏற்றுக் கொள்ளாது. துண்டு துண்டானவை, தொடர்பற்றவை, பன்முகத் தன்மை கொண்டவை போன்றவற்றை அங்கீகரிக்கும்.
பின் நவீனத்துவம் குறிப்பிட்ட எந்த ஒரு குறிப்பிட்ட தத்துவக் கருத்தாக்கத்தை மட்டும் எதிர்க்கவில்லை. சமூகம் இதுவரை கண்ட அனைத்து கருத்தாக்கங்களையும் மறுத்து விமர்சிக்கின்றது. அனைத்தையும் சந்தேக மனப்பான்மையைக் கொண்டு பார்க்கின்றது.
பூக்கோ, லக்கான், தெரிதா போன்ற பின் அமைப்பியல் அறிஞர்களும், லியோதார்த், பூதலியார்த், பார்த், ஜேம்சன், எட்வர்டு சயது போன்றோரும் பின் நவீனத்துவக் கருத்தை பிரபலபடுத்தியவர்களாவர்.
இவர்களில் பின் நவீனத்துவச் சிந்தனையின் ஆதாரமான தத்துவ, அரசியல் வரையறைகளை முன் வைத்தவராக லியோதார்த்தைக் குறிப்பிடுவார்கள். இவர் 1979-ல் பிரெஞ்சு மொழியிலும், 1984-ல் ஆங்கில மொழியாக்கத்திலும் வெளிவந்த அவரது ‘ பின் நவீனத்துவ நிலை ‘ என்ற நூல்தான் பின் நவீனத்துவம் குறித்த தத்துவ வரையறைகளை தெளிவுபடுத்தியது.
தத்துவங்கள் கூறுகின்ற உண்மைகள் மீதும் விஞ்ஞானம் கூறிவருகின்ற உண்மைகள் மீதும் தீவிர ஐயப்பாடுகளை எழுப்பியவர்தான் மைக்கேல் பூக்கோ என்ற பின் நவீனத்துவ அறிஞர் ஆவர். இவர் மனித மனங்களின் மீது படிந்துக் கிடக்கும் வரலாற்றுக் காலங்களின் கருத்தாக்கங்களின் தொகுப்பான கதையாடல் மூலம் மனிதர்களை எவ்வாறு நெறிப்படுத்தி யிருக்கின்றன என்பதனை அகழ்வு ஆய்வு செய்தார்.
பின் நவீனத்துவம் எழுப்பும் பிரச்சனைகள் ஒன்று, அறிவுக்கும் உண்மைக்கும் உள்ள உறவு பற்றியதாகும். பெரும்பாலும் எல்லா தத்துவங்களும் அறிவு என்பது உண்மையோடு நேரடியான உறவைக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்தி வந்துள்ளன. ஆனால், பின் நவீனத்துவம் அவ்வாறு கருதவில்லை. இதை மறுக்கின்றது.

இரண்டாவது, தனிமனித மையம் குறித்த பிரச்சனையாகும். தத்துவ வரலாறு முழுக்க தனிமனித மையம் என்ற கருத்தாக்கம் ஊடாடி வந்துள்ளதை அறியலாம். இதையும் பின் நவீனத்துவம் மறுப்பதைக் காணலாம்.
மூன்றாவது பிரச்சனை ஒட்டுமொத்தப்படுத்தல் என்ற கருத்தாக்கம் ஆகும். பின் நவீனத்துவம், பிரபஞ்ச முழுமைக்கும், சமூகம் முழுமைக்குமான தத்துவக் கருத்தாக்கங்களை கேள்விக்குள்ளாக்குகின்றது.
நான்காவது பிரச்சனை அறிவே அதிகாரம் என்பதாகும். சமூக வரலாற்றில் அறிவு உற்பத்தி ஏற்றதாழ்வான சமூக அமைப்பை நியாயப்படுத்துவதாகவும் அதிகாரத்தின் கருவியாகவும் செயல்பட்டு வந்திருக்கின்றது என்று பின் நவீனத்துவ அறிஞர் பூக்கோ கூறுவதைக் காணலாம். பின் நவீனத்துவம் பகுத்தறிவை ஏற்காது.
ஐந்தாவது அதிகாரம் பற்றிய பிரச்சனையாகும். அரசு போன்ற சுரண்டல் வடிவங்கள் மட்டுமின்றி குடும்பம் , கல்வி நிறுவனம், சமயம் , பிற சமூகக் கலாச்சார நிறுவனங்கள் அனைத்திலுமே அதிகாரம் செயல்படுவதாக பூக்கோ கூறுகின்றார். அறிவு எப்போதும் அதிகாரத்துடனே நெருக்கமாக இருக்கும் என்பது பின் நவீனத்துவத்தின் கூற்றாகும்.
பின் நவீனத்துவச் சிந்தனைகள், சமூகக் கலாச்சார வாழ்வில் வழக்கிலிருக்கும் அடக்குமுறையின் நுட்பமான வடிவங்களை அடையாளப்படுத்தவும் விமர்சிக்கவும் செய்கின்றது.

நவீனத்துவத்தை மறுத்து பின் நவீனத்துவம் வளர்ந்தது எனலாம். நவீனத்துவம் வளர்த்துவிட்ட கருத்தாக்கங்களை எல்லாவற்றோடும் முரண்பட்டு மறுத்து விடுகின்றது எனக் கண்டோம்.
வரலாறு, பண்பாடு, தேசிய அடையாளம் போன்ற பெருங்கதை யாடல்களை நவீனத்துவம் வளர்த்து விட்ட கருத்தாக்கங்களாகும். ஆனால் பின் நவீனத்துவம் இது போன்ற பெருங்கதையாடல்களை மறுத்துக் கூறி உள்ளூர் கதையாடல்களை முன்வைக்கின்றது. இந்த வகையில் மார்க்சியத்தையும் பெருங்கதையாடல்கள் வரிசையில் சேர்த்து விடுகின்றது.
அதுமட்டுமின்றி, அறிவியல், வரலாறு, தேசிய ஒற்றுமை போன்ற பெருங்கோட்பாடுகளை புறக்கணித்து உள்ளூர் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கின்றது. வரலாறானது உடைந்த துண்டு துண்டான நிகழ்வுகளின் ஒன்று சேர்க்கப்பட்ட கலவைதான் என அது கூறுகின்றது.
ஒருங்கிணைக்கப்பட்ட அறிவுக்குப் பதிலாக துண்டாடப் பட்ட புத்தியையும், அடையாள ஒற்றுமைக்குப் பதிலாக பல சிதறுண்ட அடையாளத்தையும், பின் நவீனத்துவம் முன் வைக்கின்றது.
உயர்ந்த, தாழ்ந்த பண்பாடுகள் எதிர்வு நிலையில் பாகுபட்டவையாக பார்ப்பதை மறுத்து உயர்ந்த, தாழ்ந்த பண்பாடுகளுக்கு இடையிலான பாகுபாடு மறைந்து போவதாக பின் நவீனத்துவம் கூறுகின்றது.
இவ்வாறு பின் நவீனத்துவத்தின் கூறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அடுத்ததாக பின் நவீனத்துவ கருத்தாக்கங்களை உருவாக்கிய அறிஞர்களையும் அவர்களது பங்களிப்புகளையும் பார்க்கலாம்.
சொற்களும் அவை பிறப்பிக்கின்ற அர்த்தங்களும் எப்போதும் நிரந்தரமாக காலா காலத்திற்கும் ஒரே அர்த்தத்தை கொண்டிருக்க முடியாது. மாறாக, முடிவில்லாத அர்த்தங்களை கொண்டவையாக இருக்கும். ஒரு சொல்லைப் படைத்த படைப்பாளி கொண்டிருக்கும் அர்த்தம் தற்காலிக ஒரு வெளிப்பாடாகும். அது பின் வாசிக்கின்ற ஒவ்வொருவரின் வாசிப்பிற்கேற்ப புதிய புதிய அர்த்தங்கள் அச்சொல்லில் இருந்து சுரந்துக் கொண்டே இருக்கும். ஒரு எழுத்தினுள் இரண்டு முறை ஒரே மாதிரி பயணிக்க முடியாது. ஒவ்வொரு முறையும் அது பல்வகைப்பட்ட அர்த்த வெளிப்பாடுகள் பிறந்துக்கொண்டே இருக்கும்.
ஒரு சொல்லை விளக்க வருகின்ற அச்சடிக்கப் பட்ட அகராதியனது அர்த்தச் சுரத்தலை நிறுத்திவிடும் தன்மை கொண்டதாக இருக்கின்றது. ஆனால் மொழிக்குள் சொற்களின் அர்த்தமானது, தொடர்ச்சியான மாற்றங்களைப் புதுப்பிக்கும் விளையாட்டை நிகழ்த்திக் கொண்டே யிருக்கின்றன. இதுதான் கட்டுடைத்தல் என்ற பின் நவீனத்துவக் கருத்தாக்கம் ஆகும்.
இவ்வாறாக நிலையான ஒற்றைத் தன்மைக்கு மாறாக முடிவுறாத பன்மைத் தன்மையைத் தான் பின் நவீனத்துவம் கோருகின்றது. இத்தகைய மொழி விளையாட்டை நிகழ்த்திய அல்ஜீரியா நாட்டை சேர்ந்த, பின் அமைப்பியல்வாதியும் பின் நவீனத்துவத்துவ அறிஞரும் ஆன தெரிதா ஆவார்.

முதலாளித்துவ உற்பத்தியையும் தொழில் நுட்பத்தையும் இணைத்ததாக பிற்கால முதலாளித்துவம் இருந்ததைத் தனது நூலில் லியோதார்த் குறிப்பிடுகிறார். முந்தைய முதலாளித்துவ உற்பத்தி முறையின் அதிகாரம் தொழிற்சாலையை மையப்படுத்தியதாக இருக்க, இன்றைய உற்பத்தி முறையின் அதிகாரம் தகவலை மையமாகக் கொண்டிருப்பதை அவர் முன்வைக்கின்றார்.
அடுத்ததாக பின் நவீனத்துவத்தை மார்க்சிய தர்க்கத்தின் வழியில் கோட்பாட்டு உருவாக்கம் செய்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்.
பின் நவீனத்துவத்தை முதலாளியக் காலகட்டதின் ஒரு தருணமாக பிரெடெரிக் ஜேம்சன் போன்றவர்கள் வரையறுக்கிறார்கள். இவர் ஒரு அமெரிக்க மார்க்சியர். இவர் பின் நவீனத்துவத்தை மார்க்சிய தர்க்கத்தின் வழியில் கோட்பாட்டு உருவாக்கம் செய்தவர்களில் முதன்மையானவர். இவர் எழுதிய “பின் நவீனத்துவம்: பிற்கால முதலாளித்துவத்தின் கலாச்சார தர்க்கம்” என்ற நூலில்தான் பின் நவீனத்துவத்தின் கூறுகளை விரிவான முறையில் விமர்ச்சித்துள்ளார்.
ஜேம்சனை தொடர்ந்து, பின் நவீனத்துவம் குறித்து கோட்பாட்டு உருவாக்கத்தில் ஈடுபட்டவர் டெர்ரி ஈகிள்டன் என்ற பிறிதொரு மார்க்சியராவார். இவர் தன் “பின் நவீனத்துவத்தின் பிரமைகள்” என்ற நூலில் மூலம் தனது விமரிசனத்தை முன் வைத்தார்.

கடந்த இருபது ஆண்டுகளாக பின் நவீனத்துவத்தைக் கோட்பாட்டு உருவாக்கம் செய்யும் முயற்சி மார்க்சியர்களிடையே நடைபெற்று வருகின்றது. இம்முயற்சியை மேற்கிலும் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் ஈடுபட்டு வருவதைக் காணயியலும்.
தமிழகத்திலும் கூட பின் நவீனத்துவக் கோட்பாடுகள் அரசியல், இலக்கியம் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் காணலாம். அதேபோன்று பின் நவீனத்துவக் கோட்பாடுகளை விமரிசனம் செய்யும் போக்கும் தமிழக மார்க்சியர்கள் இடையே இருந்து வருகின்றது.
இத்தகைய விமரிசனப் போக்கை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களின் அணுகுமுறைகள் இரு வகைகளில் அமைகின்றன. ஒன்று, பின் நவீனத்துவத்தை முற்றிலும் எதிர்நிலையில் நின்று விமர்சிக்கிற நிலைபாடு. நிறுவனமயமான கட்சிகளைச் சேர்ந்த மரபு மார்க்சிய வாதிகள் இத்தகைய நிலைபாட்டைக் கொண்டிருக்கின்றனர்.
இரண்டாவது, முழுக்க ஏற்காமலும், நிராகரிக்காமலும் அணுகுகின்ற நிலைப்பாடு. நிறுவனமயமான கட்சிகளைச் சாராத மார்க்சிய அறிஞர்கள் பின் நவீனத்துவத்தை விமரிசன கண்ணோட்டத்தில் அணுகுவதோடு, மார்க்சியத்திற்கும் இதற்கும் நிலவும் பொதுவான அம்சங்களை இனங்கண்டு, அங்கீகரிக்கவும் செய்கின்றனர்.
நன்றி- ( philosophical debates )

பிரிவுகள்:Uncategorized

*மரணப்பிடியில் பின் நவீனத்துவம்*

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தத்துவ உலகில் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘தத்துவம்’
பின்நவீனத்துவம் (Postmodernism). இதுவரை வந்த தத்துவங்கள் எல்லாம் பயனற்றவை,
பின் நவீனத்துவம் மட்டுமே எதிர்கால மீட்சித் தத்துவமாக ஆரவாரம் செய்யப்பட்டது.
சிந்தனையாளர் நீட்சேவை தத்துவ முன்னோடியாகக் கொண்டு மிகையில் பூக்கோ, தெரிதா,
லியோதர்ட் போன்றவர்களால் ஒரு தத்துவப்போக்காக பின்நவீனத்துவம் வளர்க்கப்பட்டது.
மேற்கத்திய உலகில், குறிப்பாக, பிரான்சில் விஷம்போல பரவிய இந்தக் ‘காய்ச்சல்’
தமிழகத்தையும் விடவில்லை. மார்க்சி°ட்டாக வாழ்க்கையைத் துவக்கியவர்கள்,
தங்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை வறட்சியால் பின்நவீனத்துவத்தில் சரணடைந்தனர்.
தமிழகத்தில் கலை, இலக்கியத்துறை மட்டுமல்ல, சமூக வர்க்க இயக்கங்களையும்
பலிவாங்கிட பின்நவீனத்துவவாதிகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் முனைப்புக்
காட்டினர். மார்க்சி°ட் என்று சொல்லிக்கொள்வதைக்காட்டிலும் தான் ஒரு பின்
நவீனத்துவவாதி என்று சொல்லுவது ‘பாஷன்’ ஆனது.
ஆனால், இன்று மேற்கத்திய நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. பின்நவீனத்துவம் எனும்
பெயரில் சில ஓலக்குரல்கள் தவிர, அத்தத்துவம் சவக்குழிக்குச் சென்றுவிட்டது.
பின்நவீனத்துவ உளறல்களை எதிர்த்து கடந்த பத்தாண்டுகளாக மார்க்சி°ட்டுகள் பலர்
(இவர்கள் நம்மூர் அறிவுஜீவிகள் போன்றவர்கள் அல்லர். வர்க்க இயக்கங்களில்
ஈடுபட்டு களத்திலும் போராளியாக விளங்கு பவர்கள்) நடத்திய சித்தாந்தப் போரில்
பின்நவீனத்துவம் காலாவதியாகிப் போனது. (உதாரணத்திற்கு அலெக்°காலினிகா° எழுதிய
“பின்நவீனத்துவத்திற்கு எதிரான மார்க்சிய விமர்சனம்”) தற்போது மீண்டும்
அடிப்படை மார்க்சியத்தின் மீது அலாதிப் பிரியம் ஏற்பட்டு, வெகு உற்சாகத்தோடு
பலர் மார்க்சியம் பயில் கின்றனர். குறிப்பாக, இளந்தலைமுறையினர் மார்க்சிய
நூல்களை அதிக அளவில் வாங்கிப் படிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
உதாரணமாக, பால்-டி-அமட்டோ எழுதிய (The Meaning of Marxism) என்ற நூல்
சமீபத்தில் வெளியானது. அழுத்தமான வாதங்களோடும், பக்கபலமான ஆதாரங்கள்,
விவரங்களோடும் விளங்கும் இந்நூல் அடிப்படை மார்க்சியத்தை மிகவும் எளிமையாகவும்,
அழகாகவும் விளக்குகிறது. இதன் விற்பனை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ஆக, மேற்கில், காற்று திசைமாறி அடிக்கிறபோது தமிழகத்தில் இருக்கும் சிலர்
இன்னமும், காலாவதியாகிப்போன பின்நவீனத்துவத்தை உயர்த்திப் பிடிக்க
முனைகின்றனர். மார்க்சி°ட்டுகள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளாமல்
பின்நவீனத்துவம் பேசுகிறவர்கள் ஒரு ரகம். தங்களை மார்க்சி°ட்டுகள் என்று
கூறிக்கொண்டு பின்நவீனத்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள் மற்றொரு ரகம்.
இத்தகு ‘ரகங்கள்’ மேற்கிலும் உலாவந்து ஓய்ந்தன. தமிழகத்தில் இந்தப்போக்குகள்
இரண்டும் உள்ளன.
பகுத்தறிவு, அறிவியல் எதிர்ப்போடு…
19 ம் நூற்றாண்டு இறுதி மற்றும் 20 ம் நூற்றாண்டு துவக்க காலத்தை நவீனத்துவ
காலம் என்கின்றனர். இக்காலக்கட்டத்தில் எழுந்த பல தத்துவார்த்த மற்றும்
பண்பாட்டுச் சிந்தனைகளை எதிர்ப்பதாகக் கிளம்பியது தான் பின்நவீனத்துவம்.
நவீனத்துவம் என்றழைக்கப்படும் இக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த முதலாளித்துவப்
பேரழிவுகளை எதிர்த்துப் போராடியது மார்க்சியம். கம்யூனிச லட்சியங்களை முன்
வைத்துப் போராடிய மார்க்சியம் இக்காலக்கட்டத்தில் ரஷியப்புரட்சி மூலம் மேலும்
வளம் பெற்று மார்க்சிய லெனினிசமாக உருவெடுத்தது. நவீனத்துவத்தை எதிர்ப்பது
அல்லது அதன் நீட்சி என்று சொல்லிக்கொண்டே பின் நவீனத்துவம் மிகச் சாதுர்யமாக,
ரஷியப் புரட்சிக்குப் பிறகு வந்த புரட்சிகர அரசு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக்
கோட்பாடு, கட்சி அமைப்பு அனைத்தையும் எதிர்க்கிற ஒரு போக்காக வளர்ந்தது.
‘நவீனத்துவக் காலம்’ அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி கொண்டதாகவும் விளங்கியது.
ஆனால், பின்நவீனத்துவம் அறிவியல், தருக்க முறை அனைத்தையும் நிராகரித்து,
பொதுவான, யதார்த்தமான உண்மை என்று எதுவுமில்லை, அதனை அறியவும் முடியாது என்று
வாதிட்டது. நவீனத்துவ காலத்திலும் அதற்கு முன்னரும் நிலவிய மறுமலர்ச்சி மற்றும்
அறிவொளி சிந்தனைகளையும் அது விமர்சித்தது. முதலாளித்துவ அரசு அதிகாரத்தைத்
தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் மார்க்சியம்
தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், அதிகாரம் என்பது சமூகத்தின் அனைத்து
நிலைகளிலும் இருப்பதாக விளக்கி அதிகாரம்பற்றிய மார்க்சியப்பார்வையை மங்கிடச்
செய்ய பின்நவீனத்துவம் முனைந்தது.
“விசால மனது” கோரும் பசப்பு
சமீபத்தில், ‘அரசியல்’ என்ற தலைப்பில் தோழர் நல்லகண்ணுவும், அ.மார்க்ஸூம்
நிகழ்த்திய ஒரு உரையாடல் புத்தகமாக வெளிவந்துள்ளது. (தென்திசை பதிப்பகம்) அது
பின்நவீனத்துவம் பற்றிய நூல் அல்ல. எனினும் விவாதத்தின் ஒரு கட்டத்தில் பேசிய
அ.மார்க்° பின்நவீனத்துவம் குறித்து விவரிக்கிறார்.
“கம்யூனி°ட்டுகள் போ°ட்மார்டனிசத்தை எதிரியாகப் பார்ப்பது தேவையில்லை…”
“போ°ட் மார்டனிசத்தின் பங்களிப்புக்களை நாம் புறக்கணிக்கத் தேவையில்லை…”
இதையொட்டி, பின்நவீனத்துவத்தின் சில அடிப்படைக் கூறுகளைச் சுருக்கமாக விளக்கி
அந்தத் தத்துவத்தை “விசால மனத்துடன்” அணுகவும், “போ°ட்மார்டனிசம் குறித்து முன்
முடிவுகள் இல்லாமல் அணுக வேண்டு” மெனவும் கம்யூனி°ட்டு களை அவர்
கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆக, மேற்கத்திய உலகில் உதித்த ஒரு ‘தத்துவம்’ அங்கே மரணப்படுக்கையில்
இருந்தாலும், அதைவிடாமல் தூக்கிப்பிடிக்கிற அறிவுஜீவிகள் இன்றும் தமிழகத்தில்
உள்ளனர் என்பது தெளிவு.
எனவே, மார்க்சியத்திற்குத் தோழமையாக இருப்பது போன்று தோற்றமளித்து,
மார்க்சியத்தை உருக்குலைக்க முயலும் பின்நவீனத்துவத்தை மீண்டும்
அம்பலப்படுத்துவது அவசியமாகிறது.
அதற்கு முன்னதாக மார்க்சிய – லெனினிய நிலைபாட்டில், ஒரு தத்துவத்தை ஆராய்ந்திட
எத்தகைய கேள்விகள் பிரதானமானவை என்பதில் தெளிவான வரையறுப்பு தேவை.
மார்க்சியம் : அடிப்படைக் கேள்விகள்
முதலாவதாக, சமூக இயக்கம் பற்றி ஒரு தத்துவம் எப்படிப் பார்க்கிறது? வர்க்கங்களை
அந்தத் தத்துவம் ஏற்றுக் கொள்கிறதா? சமூக வரலாறு, வர்க்கங்களுக்கிடையே நிகழும்
வர்க்கப் போராட்டங்கள் தான் என்பதை அத்தத்துவம் ஏற்றுக்கொள்கிறதா?
இரண்டாவதாக, சமூகம் மற்றும் இயற்கை நிகழ்வுகளை ஆராயும் கருவியான இயக்கவியல்
பொருள்முதல்வாதம் அடிப் படையில் ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை எடை போடுகிறபோது
எத்தகைய முடிவுகளுக்கு நாம் வந்தடைகிறோம்?
மூன்றாவதாக, எதிர்வரும் சமூக மாற்றம் பற்றி, குறிப்பிட்ட தத்துவத்திற்கு என்ன
பார்வை உள்ளது? குறிப்பாக புரட்சி பற்றியும், புரட்சிக்குத் தலைமை தாங்கும்
வர்க்கம் பற்றியும் அத் தத்துவத்திற்கு என்ன நிலைபாடு? மிக முக்கியமாக, இன்றைய
முதலாளித்துவத்தை வீழ்த்த அவசியத் தேவையாக உள்ள கட்சி அமைப்பு பற்றி அந்தத்
தத்துவங்களின் நிலைபாடு என்ன?
இவற்றைக் கூறுகிற போது, மார்க்சி°ட்களின் கருத்தாக்கங் களை எப்படி மற்ற
தத்துவங்கள் மீது திணிக்க முடியும் என்று ஆட்சேபம் எழலாம். ஆனால், மேற்கண்ட
கேள்விகளும், கார்ல் மார்க்° அல்லது ஒரு மார்க்சி°ட்டின் கற்பனையான சொந்த
அபிப்பிராயங்கள் அல்ல. இவை சமூக இயக்கவிதிகள். அறிவியலில் அடிப்படை விதிகள்
என்ன பங்காற்றுகின்றனவோ அதேபோன்று, வர்க்கப் போராட்டம், இயக்கவியல் –
வரலாற்றுப் பொருள்முதல் வாதம், புரட்சி, கட்சி அமைப்புக் கோட்பாடுகள் ஆகியன
சமூக இயக்கத்தின் அடிப்படை விதிகளாக உள்ளன. இதைக்கண்டறிந்தது மார்க்சியம். எனவே
இந்தக்கேள்விகள் கட்டாயமாக ஒவ்வொரு தத்துவத்தையும் நோக்கி எழுப்பப்பட
வேண்டியவை. இதற்கு அந்த தத்துவங்கள் மழுப்பல், உதாசீனம், அலட்சியம் என்ற
வகையில் எதிர்வினை செய்கிற போது, அத்தத்துவங்கள் கோடானுகோடி உழைப்பாளி
மக்களுக்கு தீங்கு விளைவிப்பவை; அவர்களது விடுதலையை எதிர்ப்பவை என்கிற
முடிவுக்குச் சுலபமாக வந்துவிடலாம்.
பின்நவீனத்துவம் பேசுகிற அத்துனை சிந்தனையாளர்களும் மேற்கண்ட கேள்விகளுக்குச்
சரியான விடை தருவதில்லை. ‘அரசியல்’ உரையாடலில் அ.மார்க்° சொல்லுகிற
கருத்துக்களை மேற்கண்ட கேள்விகளோடு ஒப்பிடலாம்.
உதாரணமாக, சோவியத் யூனியன் உள்பட சோசலிச நாடுகளில் உருவான சோசலிசம் மற்றும்
புரட்சிகர அரசு பற்றி பேசுகிறார் அவர்.
“புரட்சிகரப் பிந்தைய சமூகங்கள் அனைத்தும் அரசு ரொம்பவும் வலிமையான
சமூகங்களாகவும் இருந்தன. இந்த அடிப்படையில் தான் அதிகாரம் குறித்த கேள்வியை
போ°ட்மார்டனி°டுகள் எழுப்புகிறார்கள்”. ஆக, இந்த அதிகாரத்தை எதிர்ப்பதால்,
பின்நவீனத்துவம் “ஒரு உறுதியான பாசிச எதிர்ப்புத் தளத்தை”க் கொண்டுள்ளதாகப்
புகழ்கிறார் அவர். உலகம் முழுவதும் முதலாளித்துவ அரசுகள் பலமிக்கதாக இருக்கும்
போது, சோவியத் அரசு மட்டும் பலவீனமாகி உதிர்ந்து போயிருக்க வேண்டுமென்று
கோருவது எத்தகைய பொறுப்பற்ற கருத்து?
இது முழுக்க, முழுக்க, சோவியத் மற்றும் இதர சோசலிச நாடுகளில் எழுந்த சோசலிச
சமூகத்தை எதிர்ப்பது தான். இதை எதிர்ப்பது தான் ‘பாசிச எதிர்ப்பு’ என்கிறார்
அவர். முதலாளித்துவ சர்வாதிகாரம் மற்றும் அதன் அதிகார ஒடுக்குமுறை பற்றி
பேசுவதை விடக் கம்யூனி°ட்களின் “பாசிசம்” “அதிகாரம்” ஆகியவற்றை எதிர்ப்பது தான்
தங்களது ‘மேலான’ பணியாகப் பின்நவீனத்துவ வாதிகள் கருதுகின்றனர்.
இது ‘அதிகாரம்’ என்று ஃபூக்கோவின் கருத்தாக்கத்திலிருந்து வருவது. அவர்
அதிகாரம் வெறும் அரசு உறவுகளில் மட்டுமல்ல எங்கும் நீக்கமற நிறைந்துள்ளதாகக்
கருதுகிறார். ஒவ்வொரு சமூக உறவுகளிலும், பரவி, விரவிக் கிடக்கிறது. அந்த அதிகார
மேலாதிக்கத்திற்கு எந்த வரையறுக்கப்பட்ட நோக்கமும் இல்லை. (மூலதன
அதிகாரத்திற்கும் எந்த நோக்கமும் இல்லை என நாம் புரிந்து கொள்ள வேண்டும்!)
மொத்தத்தில் அரசு, அரசியல், பொருளாதாரம் ஆகிய தளங்களில் மட்டும் அதிகாரத்தைப்
புரிந்து கொள்வது சாத்தியமற்றது என்பது ஃபூக்கோவின் நிலை.
இந்தக் கருத்தாக்கம் எங்கு இட்டுச்செல்கிறது? அதிகாரம் எங்கும் பரவியிருக்கிறது
என்கிறபோது அதற்கு எதிர்ப்பு என்பது ஒரு குறிப்பிட்டத் திட்டம் மூலம் செய்திட
முடியாது. ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட கட்சி என்ற வகையில் இந்த எதிர்ப்பை
நிகழ்த்தினால், அதுவே ஒரு அதிகார நிறுவனம் ஆகிவிடும். எனவே, ஒழுங்குமய
மாக்கப்பட்ட கட்சி போன்ற எந்த அமைப்பும் கூடாது என்பதே பின்நவீனத்துவவாதிகளின்
நிலை. அதனால்தான் அ.மார்க்° உள்ளிட்டவர்கள் லெனினிசத்தையும்
விமர்சிக்கிறார்கள். ஏனெனில் லெனின்தான் கட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
ஆகிய உன்னதக் கோட்பாடுகளை ஒருவாக்கி மார்க்சியத்தை வளர்த்தவர். மேற்கண்ட
உரையாடலில்கூட, ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மறுபரிசீலனை தேவை’ என்கிறார்.
இது கைவிடப்பட வேண்டும் என்று நாசூக்காகச் சொல்லப்படுகிறது. உறுதியான வர்க்க
நிலைபாட்டில் வர்க்கங்களைத் திரட்டி, புரட்சியை முன்னெடுத்துச் சென்று, எதிரி
வர்க்க மேலாதிக்கத்தை முற்றாக ஒழிக்கிற இந்தக் கோட்பாட்டை கைவிடுவது என்றால்
பிறகு லெனினிசம் எங்கே இருக்கிறது? லெனினிசம் தவிர்த்து மார்க்சியம் பேசுவது
என்றால் சமூக மாற்றம் பேசுவதில் எந்த நேர்மையும் இல்லை என்பது மட்டுமல்ல,
தொழிலாளி வர்க்க இயக்கத்தை இது திசை திருப்பும் செயலாகும்.
சோவியத்திலும், இதர சோசலிச நாடுகளிலும் சோசலிசத்தைக் கட்டியமைப்பதற்கான
முயற்சிகளில் ஏற்பட்ட விலகல்கள், தவறுகள், குறைபாடுகள் முழுமையாகக்
கிரகிக்கப்படல் வேண்டும். ஆனால், இது மார்க்சிய லெனினிய நிலைபாட்டில் செய்திட
வேண்டிய ஒன்று. முதலாளித்துவப் பார்வையிலிருந்தும், பின் நவீனத்துவப்
பார்வையிலிருந்தும் சொல்லப்படுகிற கருத்துக்கள் கடுமையாக எதிர்க்கப்பட
வேண்டியவை.
மார்க்சியத்தோடு நட்பா? பகையா?
மேற்கண்ட உரையாடலின்போது, தோழர் நல்லகண்ணு “உபரி மதிப்பு என்பதையே
போ°ட்மார்டனிசத்தில் மறுக்கிறார்கள்” என்று கூறுகிறார். அதற்குப் பதில்
கூறுகிறபோது, அ.மார்க்° “உபரி மதிப்பு என்கிற கோட்பாட்டை போ°ட்மார்டனிசம்
மறுக்கிறது என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்…?” என்று கூறி தோழர்
நல்லகண்ணுவின் கூற்றை மறுக்கிறார்.

அந்த நீண்ட விளக்கத்தின் இடையில், அவரே மேற்கண்ட நிலையிலிருந்து
முரண்படுகிறார், அவர் கூறுகிறபோது… “வர்க்கம், இனம் என்றெல்லாம் மட்டும்
பிரித்து இந்த உள்வித்தியாசங்களை (தலித், பெண்கள் போன்று) மறுக்கப்படுவதையும்,
மக்களை வித்தியாசங்களற்ற பொதுமைகளாகப் பார்த்து, எல்லோருக்குமான விடுதலை,
புரட்சி போன்ற பெருங்கதையாடல்களை விவரிப் பதிலும் உள்ள பிரச்சனைகளை
போ°ட்மார்டனிசம் சுட்டிக்காட்டுகிறது” என்கிறார் அவர்.
இதற்கு அர்த்தம் என்ன? மார்க்சியம் என்பது ஒரு பெருங்கதை யாடல் என்று
பின்நவீனத்துவவாதிகள் கூறுகின்றனர். அதாவது, தொழிலாளியின் உழைப்பினால் உபரி
மதிப்பு உருவாக்கப்பட்டு, முதலாளியின் லாபமும், அதையொட்டி மூலதன வளர்ச்சியும்
ஏற்படுகிற நிகழ்வை தர்க்க ரீதியாகவும், அறிவியல் அடிப்படை யிலும் மார்க்சியம்
விளக்குகிறது. இந்த மூலதனச் சேர்க்கை ஏற்படுத்தும் முரண்பாடுகள் வர்க்க மோதலாக,
புரட்சியில் கொண்டு செல்கிறது என்கிற அறிவியல் நிகழ்வை ‘பெருங் கதையாடல்’ என்று
முத்திரை குத்தி, மார்க்சியத்தை நிராகரித்த வர்கள் பின்நவீனத்துவவாதிகள்.
முற்றாக மார்க்சியத்தை நிராகரிக் கிறபோது உபரி மதிப்பையும் இந்தப்
‘பெருங்கதையாடலின்’ ஆதாரம் என்பதால் அதையும் நிராகரிப்பதாகத்தானே அர்த்தம்?
மார்க்சியத்தைப் பின்நவீனத்துவவாதிகள் நிராகரிக்கவில்லை என்று அ.மார்க்°
சப்பைக்கட்டு கட்டுவது எந்த அடிப்படையில்? ‘வர்க்கம்’, ‘புரட்சி’, ‘வர்க்கப்
போராட்டம்’ போன்ற அடிப்படை கருத்தாக்கங்களே மார்க்சியத்தின் ஜீவனாக
இருக்கின்றபோது, அவற்றை மறுத்துவிட்டு எந்த மார்க்சியத்தோடு பின்நவீனத்துவம்
உறவு கொள்கிறது? (அ.மார்க்ஸின் சொந்த மார்க்சியத்தோடா?) மார்க்சியத்தோடு நட்பு
பாராட்டுவதாகக் கூறி மார்க்சியத்தின் கூர்முனையை மழுங்கடிக்கச் செய்தவர்கள்
ஏராளம். அந்தப் போக்கின் சமீபத்திய அவதாரம் தான் பின்நவீனத்துவம். இது
வர்க்கப்போராட்டத்தை தேன் தடவிய சொல்லடுக்குகளால் உருக்குலைக்க முயலுகிற
தத்துவம் ‘வித்தியாசங்கள் பார்க்கப்பட வேண்டுமென்ற’ இனிமை நிறைந்த
சொல்லடுக்கைப் பிரயோகித்து, வர்க்கம் என்ற அடிப்படையில் விரிந்து பரந்து
உருவாகின்ற வர்க்க ஒற்றுமையைக் குலைக்க வந்த ஒரு கோடாரி தான் இந்த
பின்நவீனத்துவம்.
பெருங்கதையாடல் (Meta – narrative) என்ற கருத்தாக்கமே சமுக மாற்ற
லட்சியத்துக்கு உதவாது. பின்நவீனத்துவ சிந்தனை யாளரான லியோதர்ட்
“பின்நவீனத்துவம் என்பதே பெருங்கதை யாடல்கள், அனைத்தும் நம்பத் தகுந்தவை அல்ல”
என்கிறார். பல்வேறு தர்க்கரீதியான ஆதாரங்கள் மற்றும் அறிவியல் சோதனை முறைகள்
மூலம் வந்தடைந்த உண்மைகளை விளக்கு பவை அனைத்தும் பெருங்கதையாடல் என்று அவர்கள்
நிராகரிக் கின்றனர். இந்த அடிப்படையில் மார்க்சியம் நிராகரிக்கப்படுகிறது.
மார்க்சியம் வலுவாக இருக்கும் பகுதியில் மார்க்சிய நண்பர்கள் போல் நடிப்பது
அவர்கள் வழக்கம்.
“வித்தியாசங்கள்” என்ற பெயரில் வர்க்கப்பிளவு வேலை
கவர்ச்சியான சொல்லடுக்குகளைப் பயன்படுத்துவது ஒருபுறம் இருக்க, மற்றொரு
தந்திரத்தையும் இவர்கள் பின்பற்றுகின்றனர். அதாவது, எதிராளி கருத்தையும்
அங்கீகரித்துவிடுவது அல்லது ‘கவலை’ தெரிவிப்பது. பின்நவீனத்துவம் பற்றி
மார்க்சியம் எழுப்பும் “வித்தியாசத்தை” எதிர்க்க முடியாமல், சரணாகதி அடைவது
போல் பாசாங்கு செய்வதும் இதில் அடங்கும்.
வர்க்கம் என்று பார்க்காமல், வர்க்கத்திற்குள் இருக்கும் ‘வித்தியாசங்களைப்’
பார்க்க வேண்டுமென்று அவர்கள் கூறுகின்றனர். அதாவது சமூக, சாதி அடிப்படையில்
ஒருவர் தலித்தாக இருக்கின்றனர். அதேசமயம் கூலி விவசாயி எனும் வகையில் அவர்
விவாசய வர்க்கமாகவும் இருக்கின்றார். பின்நவீனத்துவவாதிகள் வர்க்கம் என்று
பொத்தாம் பொதுவாகப் பார்க்க வேண்டியதில்லை; தலித் என்ற வகையில் அவரை, அவர்
சமூகம் சார்ந்த மக்களைத் திரட்டிட வேண்டும் என்கின்றனர். இதையே தலித்தியம்
எனும் பெயரில் இந்தத் திரட்டலை அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து
வந்துள்ளனர்.
இதேபோன்றே ஒரு பெண், தொழிற்சாலையில் உழைக்கும் தொழிலாளியாக இருக்கலாம்.
‘வர்க்கம்’ என்று உழைப்பாளி வர்க்கத்திற்குள் அவர் உள்ளடக்கம் என்று பார்க்கக்
கூடாது. பெண் என்ற நிலையில் மட்டும் தான் பெண்கள் திரட்டப்பட வேண்டும். இதனால்
பெண்ணியம் பேசுகிற பல குழுக்களில் பின்நவீனத்துவ வாடை இருப்பதைக் காண முடியும்.
ஆக, தலித், பெண் உள்ளிட்ட “விளம்பு நிலை மனிதர்கள்” தனித்தனியாகத் திரட்டப்பட
வேண்டும். வர்க்கம் என்று ஒட்டுமொத்தமாகத் திரட்டுவது கூடாது என்பது அவர்களின்
வாதம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இந்தக்கருத்து எத்தகைய சீரழிவை
“விளிம்புநிலை மனிதர்களுக்கு” ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காண முடியும்.
1940 – 60 ம் ஆண்டுகளில் தஞ்சையில் மார்க்சிய ‘வர்க்கம்’ என்ற நிலையிலிருந்து
விவசாயத் தொழிலாளர்கள் திரட்டப் பட்டனர். அவர்கள் முன் வைத்துப் போராடிய ‘கூலி’
என்ற கோரிக்கை வெளிப்படையில் பார்த்தால் பொருளாதாரக் கோரிக்கை போன்று
தோன்றலாம். நிலப்பிரபுத்துவ மற்றும் சாதிய ஒடுக்குமுறை பின்னிப்பிணைந்து நின்ற
சூழலில், “கூலி உயர்வு” என்று முழக்கமிட்டு அவர்கள் திரண்டனர். அந்த கோஷம்
அனைத்து ஒடுக்குமுறை எதிர்ப்புகளையும் உள்ளடக்கியதாக வெடித்தது.
இவ்வாறு சாதிய ஒடுக்குமுறையையும், வர்க்க ஒடுக்கு முறையையும் தனித்தனியாகப்
பிரித்திடாமல், இரண்டையும் இயல்பான பிணைப்போடு அணுகிய இந்தச் செயல்பாடு,
தொடர்ந்து நீடித்து, தமிழகம் முழுவதும் விரிவாக்கம் பெற்றிருந் தால், இன்று
தமிழகத்தில் இடதுசாரி இயக்கம் முதன்மை இடத்திற்கு வந்திருக்கும். இந்த
நிகழ்வுப்போக்கைச் சீர்குலைத்தவை எவை என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. எனினும்
1990 ம் ஆண்டுகளில் தலித் மற்றும் சாதி அடையாளங்களை வலுப்படுத்தித் தனி
இயக்கங்கள் உருவானது வர்க்க இயக்க வளர்ச்சிக்கு ஊறு விளைவித்தது என்பது உண்மை.
“அடையாள அரசியலை” தூண்டுவதில் முன்னணி
தலித் என்ற வித்தியாசம் உள்ளிட்ட வித்தியாசங்களை “உருவாக்குவதே போ°ட்மார்டனிசம்
என்பது போலப் பார்க்க வேண்டியதில்லை. ஏற்கெனவே வித்தியாசங்கள் இங்கே இருக்கிறது
தானே” என்கிறார் மார்க்°. உண்மைதான், ஏற்கெனவே இருக்கின்ற வித்தியாசங்களில்
முதலாளி, தொழிலாளி, நிலவுடைமையாளர், உழைக்கும் விவசாயி போன்ற ‘வித்தியாசங்கள்’
எல்லாம் ஏன் வித்தியாசங்களாக எடுத்துக் கொண்டு முக்கியத்துவம் கொடுக்கப்
படுவதில்லை? இவர்களது செயல்திட்டம் இதுதான்.
‘விளிம்பு மனிதர்களை’ அவர்களது சாதி மற்றும் இதர அடையாள உணர்வு அடிப்படையில்
தனியாகத் திரட்ட வேண்டுமென்றால், அவர்களிடம் நிஜவாழ்க்கையில் யதார்த்தமாக
இருக்கும் வர்க்கம் என்ற உணர்வை பின்னுக்குத் தள்ளிட வேண்டும். மாறாக ‘தலித்’
போன்ற இந்த அடையாள உணர்வை மேலும், மேலும் வலுப்படுத்தினால், வர்க்கம் என்ற
நிலைக்கு அந்த உணர்வைக் கொண்டுவராமல் மழுங்கடிக்கச் செய்திட இயலும். இதுதான்
தமிழகத்தின் பின்நவீனத்துவம் பேசுபவர்கள் செய்திட்ட பெரும் சேவை! எனினும்,
இவர்களது சீரழிவுப் பணியையும் மீறி வர்க்க இயக்கம் தற்போது தலித் உள்ளிட்ட
ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வேகமாக, வளர்ந்து வருகிறது என்பது வேறுவிஷயம்.
அடிப்படை மார்க்சிய நிலைப்பாடுகளை குழப்புபவர்கள் விஷயத்தில், வர்க்க இயக்கம்
கட்ட அன்றாடம் பல இன்னல்களுக்கு இடையே பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற தோழர்கள்,
எச்சரிக் கையாக இருக்க வேண்டியுள்ளது. தினந்தோறும் நடைபெறும் நடைமுறைப்
போராட்டங்களோடு தொடர்பற்று ‘தத்துவ விசாரணை’ நடத்தும் விஷமத்தனமான அறிவுஜீவிகள்
பல நேரங்களில் வர்க்க இயக்க ஒற்றுமையை குலைப்பதில் வல்லவர் களாகவும்
இருக்கின்றனர்.
அவர்களது தந்திரத்திற்கு இதோ ஒரு உதாரணம். மேற்கண்ட உரையாடலில் ‘வித்தியாசம்’
வலியுறுத்தும் பின்நவீனத்துவ கருத்தைக் கூறிவிட்டு, மார்க்° கூறுகிறார்…
“இப்படி வித்தியாசம் பார்ப்பது ஒட்டுமொத்தத்தை பலவீனப் படுத்திவிடும் என்ற கவலை
நியாயமானதுதான்”. அதாவது ‘பொது’வைப் பார்க்கக்கூடாது, ‘தனி’யைப் பார்க்க வேண்டு
மென்று சொல்லிவிட்டு, பிறகு ‘ஒட்டுமொத்தம்’ பலவீனமாகிறதே என்று கவலை
தெரிவிப்பது எப்படிப்பட்டது? வீட்டை தீ வைத்துக் கொளுத்திவிட்டு தீ பரவுகிற
‘பலவீனத்தைப்’ பற்றிக் கவலை தெரிவிப்பது போல் உள்ளது. என்ன தந்திரம் என்றால்,
எதிரான கருத்தையும் சொல்லி வைத்துவிட்டால், பிறகு தன் கருத்தை மூளையில்
ஏற்றிடலாம் அல்லவா?
பின்நவீனத்துவ சிந்தனையாளர்களின் மேன்மையைப் புகழ்கிறார் அ.மார்க்°. ஃபூக்கோ,
தெரிதா, பாத்ரிலா உள்ளிட்ட பலர் “கலகக்கார சிந்தனையாளர்களாகவே வாழ்ந்து
மடிந்திருக் கிறார்கள். அதிகபட்சமாக இவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்
போராசிரியப் பதவிகள் தான். அதற்கு மேல் பெரிய அளவில் அரசுப் பாராட்டுகளோ, நோபல்
பரிசுகளோ இவர்களுக்குக் கிடைத்த தில்லை” என்கிறார் அவர்.
உண்மைதான். இதோடு, தாராளவாதம் (டுiநெசயடளைஅ) எனும் சித்தாந்தத்தை உருவாக்கிய
சிந்தனையாளர்களையும் ஒப்பிடலாம். ரூ°ஸோ, ஜான் °டூவர்ட் மில், தாம° ஹாப்° இப்படி
அவர்களது வரிசை நீள்கிறது. இவர்கள் அடித்தளமிட்ட தாராளவாத ஜனநாயகம் எதற்குப்
பயன்பட்டது? முதலாளித்துவம் வளருவதற்குத் தானே பயன்பட்டது. இந்த சித்தாந்தத்தை
உருவாக்கியதற்காகப் போராசிரியப் பதவி கூட இல்லாமல் பல சோதனைகளை அனுபவத்தவர்கள்
பலர். தாம° ஹாப்° தூக்கிலிடப்பட்டவர். இவர்களுக்கெல்லாம் நல்ல நோக்கங்கள்
இருந்திருக்கலாம். ஆனால் அவர்களது சித்தாந்தம் முதலாளித்து வத்திற்கு மிகச்
சிறந்த கருவியாகப் பயன்பட்டது என்பதே வரலாறு. சரியாக, அதே போன்று பின்நவீனத்துவ
சிந்தனை இன்றைய ஏகாதிபத்திய சக்திகளுக்கு உதவிடும் கருவியாக உள்ளது. இனம், சாதி
அடிப்படையில் மக்களைக் கூறுபோடுகிற அடையாள அரசியல் யாருக்கு உதவிடும்?
பின்நவீனத்துவம் நடைமுறையில் இதைத்தானே செய்துள்ளது?
ஆக, பின்நவீனத்துவம் ஏன் உருவானது? இதற்கான சரியான விடையை அலெக்°காலினிக்கா°
அளிக்கின்றனர்.
1968 ம் ஆண்டுக்கால புரட்சிகரத் தலைமுறையின் ஏமாற்றம் தான் பின்நவீனத்துவமாக
வடிவெடுத்தது. அந்தத் தலைமுறைசார்ந்த பலர் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகப்
பணிகளில் உயர் பொறுப்புக்களில் சேர்ந்து ஒரு “புதிய நடுத்தர வர்க்கமாக’
உருவெடுத்தனர். எனவே, பின்நவீனத்துவத்தை உண்மையில் சமூக அரசியல் இயக்கம் மீது
விரக்தி அடைந்த ஒரு போக்காகப் பார்க்கலாமே தவிர, அறிவுத்துறை மற்றும்
பண்பாட்டுத்துறையில் ஒரு முக்கிய தத்துவப் போக்காக எடுத்துக்கொள்ள இயலாது. இது
மார்க்சி°ட்டான அலெக்° காலினிக்காஸின் நிறைவான ஆய்வு முடிவு.
பின்நவீனத்துவத்திற்கு எதிராக வலுவாகப் போராடிய மார்க்சி°ட்டுகளை மறைத்து,
மேற்கத்திய தத்துவ உலகின் ஒருபக்கத்தை மட்டும் சிலாகிப்பது தமிழக
‘அறிவுஜீவி’களின் வழக்கம்.
மேலே குறிப்பிட்ட மார்க்சிய அடிப்படைகளிலிருந்து இத்தகு போக்குகளை எதிர்த்துப்
போராடுவது மிக முக்கியமான வர்க்கப் போராட்டம். இது தீவிரமாக நடைபெற வேண்டும்.

Thanks: N. Gunasekaran
gun@gmail.com

நன்றி:சந்திப்பு.

http://santhipu.blogspot.com

பிரிவுகள்:Uncategorized

பின் நவீனத்துவம் by முகில்

பின் நவீனத்துவம்

ஒரு எலக்கியவாதியின் எடக்குமடக்கு அனுபவங்கள்!

அமானுஷ்ய ஜெயசாமி – தமிழ் எழுத்துலகின் உள்ளீடற்ற படைப்பாளி. இலக்கியத்தின் இருப்பை ஆதாரமாக்கும் வெப்பக் கவிஞர். படைப்புகளின் நகர்வில் ஊர்ந்து செல்லும் தாக மேகம். பின் நவீனத்துவத்தின் நவீன பின்னல். ‘ஓலைத்தகடு’ சிற்றிதழின் பேராசிரியர். யார் அவர் என்று எந்திரத்தின் எஞ்சிய சப்தத்தின் மீட்சியாகக் குரலெழுப்பாதீர். அது நான்தான்.

நான் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெயர் என்பதுகூட அடையாளங்களைத் தொலைத்த சில எழுத்துக்களின் முகம் தொலைத்த கூட்டணி. தன்னை அறிவித்துக் கொள்ள வெறி கொண்டு அலையும் அகங்காரம் பிடித்தவர்களின் பிடிவாதமே முற்றிய நிலையில் நெறிகட்டி அறிவிக்கப்படுகிறது பெயரென! இப்போது சொல்லுங்கள் மனிதனுக்கு பெயர் தேவையா?!

அப்போது பெயரை எங்கே உபயோகிக்க வேண்டும் என்று கிணற்று நீரின் வறட்சிக் குமிழாகக் கேட்கறீர்களா? உயிரற்ற கேள்வி. விஸ்தாரமான பாறைகளின் இடுக்கில் விதைகளை காகங்கள் ஒளித்து வைத்தாலும், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள தலை நீட்டும் தாவர சரீரம். இதயத்தின் நிழல் எங்கே விழும்? பிம்பங்களைச் சார்ந்திருத்தலின் வெளிநிலைக்கும் அவதானிப்புகள் வெட்டப்படும் பூரித்த நிலைக்கும் இடைப்பட்ட ஒரு அந்தர நிலையில் ‘பெயர்’ என்பது கட்டாயமாக்கப்படுகிறது.

சிலர் என்னிடம் கேட்பார்கள். இலக்கிய உலகில் என் பங்கு என்ன என்று.

கண்ணிவெடிகள் நிறைந்த நிலப்பரப்பில் நான் என் கால்களைத் தேடி நடந்து கொண்டிருக்கிறேன். இரகசியமாக ஊர்ந்து செல்லும் ஓநாய்கள் வாழும் காட்டில், என் ஒற்றைப் பேனா தீராத அபத்த நிலைகளின் ஊடாக குருதி தெளித்து இந்தப் பிரபஞ்சத்தைப் புனிதமாக்கிக் கொண்டுள்ளது. என் எழுத்துக்களின் கற்பிதங்களால் தமிழ் இலக்கியம் வாழ்விக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆனால் மனநிலை பிழன்ற சிலர், என் படைப்புகளை ‘கழிவுகளின் இழிநிலை’ என்று சொத்தைப் பல் கண்ட சொப்பனம் போல் விமர்சிப்பார்கள். அவர்களுக்கு என் விஸ்தாரமான நுனி பதில் இதுதான்.

என்னை விமர்சிப்பவனின் குரல், முகமற்ற ஒரு டிராகுலாவின் குரலற்ற குரல். பிணவறையின் உள் ஒளிந்து கொண்டு தனக்குத் தானே ஒப்பாரி வைக்கும் நிழலற்ற காட்டேரியின் கதறல் அது. என் ஆழ்ந்த புனைவுகளின் சூடு தாங்காமல் மரங்களற்ற காட்டினில் போய் தன்னைத் தானே புதைத்துக் கொண்ட ரத்த அணுக்கள் இல்லாதவனின் பிதற்றல். சடலங்களைப் பற்றி இனி நான் பேசப் போவது இல்லை.

‘பின் நவீனத்துவ’த்தால் வெகுஜன மக்களுக்கு என்ன வாழ்வியல் பயன் என்று நீங்கள் சொல்லின் துணையோடு தூர்வாரிக் கேட்கலாம்.

இதற்கு எனது இந்த கவிதை பொத்தாம் பொதுவாக பதிலளிக்கும்.

குப்பை லாரிகளின்
சப்தமற்ற நகர்விலும்
நாசிகளுக்கு அறிவிக்கப்படும்
பால்வெளி வாசனைகள்…

நெருஞ்சி முள்ளின்
தொப்புள் கொடியில்
உபரியாய் முளைத்த
நீள் எலும்புகள்…

குருதிக்கோட்டின்
முள்ளங்கித் தீட்டில்
குதறிக் கொண்ட
ஒற்றை மயிறு…

அண்மைக்கு அப்பால்
ஈயின் நிழலில் ஓய்வுறும்போது
எதிர்கொள்கிறது
சிகரெட்டின் தித்திப்பு!

புரியவில்லையா? வாழ்வின் இருள்வெளிகள் புரிவதில்லை.

சென்றமாதம்தான் பிரபலம் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் அந்த எழுத்தாளருக்கு ‘சாதித்த அக்காடம்மி’ விருது கொடுத்தது பற்றி என்னிடம் ஒரு நிருபன் நேரே வந்து கருத்து கேட்டான்.

அறிவிலிகள். விருதுகள் வாங்குவதென்பது, மனித வெடிகுண்டை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவதற்குச் சமம். பொதுவாக நான் விருதுகளை வடுக்களின் மேல் வடியும் புரை என நினைக்கிறேன் என்றேன்.

‘கோண பீட’ விருதுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கிளம்பியிருக்கின்றனவே என்றான் எச்சிலின் எச்சக் குரலோடு.

நான் தீர்க்கத்தின் தீர்ப்பாகவே பதிலளித்தேன். எனக்கு விருது வழங்கும் தகுதி இங்கே எவனுக்கும் இல்லை. எனக்கு விருது வழங்க நினைப்பவன் தன்னைத்தானே ஒருமுறை நெருப்பால் எரித்து தன் கற்பின் ஸ்திரத்தை நிரூபிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சமூக ஜீவி நான் மட்டுமே!

உங்களோட ‘ஓலைத்தகடு’ சிற்றிதழ் மொத்தம் எத்தனை பிரதிகளை எட்டியுள்ளது என்றான் அந்த நிருபன் கணக்குப்பிள்ளையின் கடைசிக் கேள்விபோல்.

என் எழுத்துக்களின் வாசிப்பாளர்கள் என் அக்குளில் இருந்து கிளம்பியவர்கள். நான், என் நிழல், என் நிழலின் பிம்பங்கள், அந்த பிம்பங்களின் பிரதி பிம்பங்கள் என சந்தாதாரர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்காக தாண்டவமாடுகிறது என்றேன் பெருமையின் பித்தமேறி.

என்னைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்றான் அவன் புதைகுழியின் பூரிப்பில் நின்றுகொண்டு.

நான் பொதுவாக உதட்டுச் சாயம் பூச மாட்டேன். என் உதடுகளுக்கு கிளுகிளுப்பாக புன்னகைக்கத் தெரியாது. எனக்கு அகண்ட கவர்ச்சியான உடலமைப்பு கிடையாது. இவற்கெல்லாம் ஒத்துழைக்கும் என் வீட்டு நாய்களை வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கட்டி வைக்கப்பட்டிருந்த என் வீட்டு நான்கு கால் மனிதர்களை அவிழ்த்து விட்டேன்.

அவ்வளவுதான். வந்தேறிகளின் வியர்வை பொழியும் அத்துவானக்காட்டில், வயிறூதிக்கிடக்கும் குள்ளநரியைக் குறிபார்த்து இறகுதிர்க்கும் ஒவ்வாமைக் குருவிகளின் கூட்டை நோக்கி ஓடி விட்டான் அந்த நிருபன்.

எதற்கு இப்படி புழக்கத்தில் இல்லாத புரையேறிய வார்த்தைகளை மட்டுமே பேசியும் எழுதியும் கொண்டிருக்கிறேன் என்று கேட்கிறீர்களா?

ஒரு எலக்கியவாதின்னா இப்படித்தான் இருக்கணும்னு ஆகிப்போச்சு. அதான் இந்த மண்டைக் கர்வத்தோட, வார்த்தைக்கு வார்த்தை வன்முறை கலந்தே பேசிக்கிட்டிருக்கேன். சாயங்காலம் ‘பப்’புக்குப் போகணும். ஐசிஐசிஐ அக்கவுண்ட் நம்பர் தர்றேன். ஒரு டென் தௌஸண்ட் போட்டு விடுறீங்களா?

பிரிவுகள்:Uncategorized

பின் நவீனத்துவம் குறித்த என் தேடலில் கண்டவை….

சமபத்திய நேர்முகத் தேர்விற்காகப் பின் நவீனத்துவம் குறித்தத் தகவல்கள் எனக்குத் தேவைப்பட்டது. இலக்கிய ஆர்வமேயன்றி அனுபவம் குறைவாக இருக்கும் எனக்கு டில்லியில் இது குறித்த விவரங்கள் சொல்லும் அறிஞர்கள் மிகச் சிலரே. அவர்களுள் பின்நவீனத்துவ எழுத்தாளராகக் கருதப்படும் ‘பிர’பல இரட்டையருள் ஒரு முக்கிய எழுத்தாளர் இங்கு தான் பணிபுரிவதாகத் தெரிய வந்தது. அவருடைய கைபேசி எண் கிடைத்ததால் அவரைத் தொடர்பு கொண்டேன். என்னை நான் முழுவதும் அறிமுகப் படுத்துவதற்குள் அவர் தற்போது வெளீயூரில் இருப்பதாகவும், பதினைந்து நாட்கள் கழித்துத் தொடர்பு கொள்ளுமாறும் கூறிவிட்டார். ஆனால் அவர் அன்று காலையிலும் மறுநாளும் டில்லி பல்கலையில் தேர்வு நடத்தினார் என்பது ஊரறிந்த உண்மை. இருந்தும் இப்படி ஒரு பொய். எனது்து மலையாள நண்பர்களுக்கு அவர்களது இலக்கியம் குறித்தத் தக்வல்களைச் சொல்ல டில்லியின் அனைத்துப் பேராசிரியரும், எழுத்தாளர்களும் முன்வர எனக்கு மட்டும் தமிழ் இலக்கியம் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாமல் போனது மிகப் பெரிய வருத்தம். நான் வேறு நண்பர்களைத் தொடர்பு கொண்டபோது அதுகுறித்த இணையங்களும்,புத்தகங்களும் கிடைத்தன. அனைத்டையும்்த ஓரிரவில் முடித்தபின் நான் புரிந்து கொண்டவற்றை இங்கு பகிர்ந்து கொண்டவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

தி.சு. நடராசன் எழுதிய ‘திறனாய்வுக்கலை’ புத்தகத்திற்கும், டிஸ்பாஷனேட்டட் டிஜேவுக்கும்், மாமன்் sorry அண்ணன் பாலபாரதிக்கும் எனது நன்றி.

சுருக்கமாகப் பின் நவீனத்துவத்தை ‘விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வுகளைப் பதிவு செய்யும் ஊடகமா’கக்கருதுகிறார் திருபா.பா.

தி.சு.ந.வோ கருத்தியல்்திய்ல்வழிமுறைகளையும்,நிலைபாடுகளையும் பின்வருமாறு தொகுக்கின்றார்.

1. முதலாளித்துவத்தின் அடுத்த கட்டத்து வள்ர்ச்சியாகிய பின்னை முதலாளித்துவம், தொழில் குழும உற்பத்தி முறை, உலகமயமாதல், நுகர்வுக் கலாச்சாரம் ஆகியவற்றின் பின்னணியில் இது வருகிறது.

2. மாற்றுவது அல்ல, மறுப்பது; தீர்ப்பது அல்ல சச்சரவு செய்வது. (்வீட்வ்வ்வ்வ் வீட்ல அடங்காத பிள்ளை மாதிரின்னு வச்சுக்குங்களேன்)

3. முழுமைக்கும், ஒட்டுமொத்தப் படுத்தலுக்கும் மறுப்பு. பகுதிகளை தொடர்பற்ற தன்மைகள் கொண்ட தீவுகளாக வருணிப்பது.

4. ஒற்றைத் தன்மைக்கு எதிராக பன்முகத் தன்மை கொண்டது .

5. வரலாற்றைத் திரும்பப் பார்த்து பயணிக்கச் செய்வது

6. பெருநெறி, பெருங்கதையாடலுக்கு மறுப்பு சொல்லி சிறுங்கதையாடலை வலியுறுத்துவது.

7. பலராலும் அங்கீகரிக்கப்பட்ட ‘புனிதம்்’ என்பவற்றைமறுப்பது.

8. சுய முரண்பாடுகள் கொண்டது

9. வம்பபோலி நகை முரண் நிரம்ப நிற்பது.

இவற்றை உள்வாங்கிய பின் டிஸ்பாஷனேட்டட் டிஜேவின் புரிதலான ‘ஆசிரியர் இறந்துவிட்டார்’ என்ற கொள்கையையும் சேர்த்து வைத்துப் பார்த்தால் ஏதோ ஒருமாதிரி பின் நவீனத்துவம் மனத்திற்குள் தீவுகளாக சிறு சிறு பகுதிகளாக உரு எடுக்கின்றது.

‘ஆசிரியர் இறந்துவிட்டார்’ என்ற கொள்கை ஒரு படிஅப்பை படைப்பாக மட்டுமே பார்க்க வேண்டுமே அன்றி ஆசிரியனோடு இணைட்துப் பார்க்கக் கூடாது என்று விவரிக்கப் படுகின்றது. (‘ஊருக்குதான்யா உபதேசம் எனக்கில்லை’தெளிவாசொன்னா என்ன!)

அதே ‘பிர’பல இரட்டையருள் ஒருவரை என் நண்பர் மறுநாள் அதே வேலைக்காக அணுகினார். உடனே பல்கலை அலுவலகத்துக்கு ்துக்கு வரச் சொன்னார்.நண்பரின்வேலையக் கேட்டுவிட்டு ஒருவாரம் கழித்து வந்தால் அவருக்குத் தேவையான தகவல்களைச் சேகரித்து வைப்பதாகச் சொன்னார். அந்த உரையாடலில் முந்தைய எனது உரையாடல் குறிட்து தெளிவடைய விசாரித்து உள்ளார். எனது நண்பர் அந்த சம்பவம் குறித்துத் தனக்குத் தெரியாதது போல் காட்டிக் கொண்டார். பின்பு ஒரு வாரம் கழித்துத் தொடர்பு கொண்ட போது தனக்கு நேரமே கிடைக்கவில்லை என்றும், சாகித்ய அகாடமி நூலகத்திற்குச் சென்று படித்துத் தெரிந்து கொள்ளுமாறும் கூறிவிட்டார்.

தி. சு. ந. சொன்னது உண்மை என்றால் சுய முரண்பாடு கொண்ட தீர்வுகள நோக்கிப் பயணப்படாத, ஒரு படைப்பிற்குபின் இறந்து்விடுகிற இந்தப் ‘பிர’பல இரட்டையருள் ஒருவரும் ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளர் தானே.

அயன்

பிரிவுகள்:Uncategorized